ஐயனார் கோவில்கள் -இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 45

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,662

Date uploaded in London – –  –  1 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 45

இலங்கைத்  தீவிலுள்ள சுமார் 4000 கோவில்கள் பட்டியலும் எல்லோருக்கும் கிடைக்கிறது. ஆயினும் அதிலுள்ள பழமையான, முக்கியமான 108 ஆலயங்களை பற்றி எழுதத் துவங்கினேன். இன்னும் ஐயனார் கோவில்கள், ஐயப்பன் கோவில்கள் , நாச்சிமார் கோவில்கள், சப்த மாதா கோவில்கள், சீதா தேவி கோவில், ராமாயணத் தொடர்புள்ள கோவில்கள், நாகர் கோவில்கள்,பாபா கோவில்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவைகளில் முக்கியமானவற்றைக் காண்போம் .

103.சப்தமாதா கோவில் , இலங்கை

இலங்கையில் 7 கன்னிமார்கள் சப்தமாதா கோவில்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் என்னும் இடத்தில் சப்த கன்னிமார் ஆலயம் உள்ளது. இங்கு ஜூஉலை மாதம் வருடாந்திர உற்சவம் நடக்கிறது. பக்தர்கள் கடற்கரைக்குச் சென்று தீர்த்தம் எடுத்துவந்து வழிபாடு செய்கின்றனர் .

பண்டத்தரிப்பு வட்டாரத்தில் கேணிக்கட்டு அருள்மிகு கன்னிமார் ஆலயம் இருக்கிறது.

ஒட்டுசுட்டான் – புதுக்குடியிருப்புக்கு இடையிலுள்ள மண்ணாக்கண்டல் பகுதியில் கோவில் இருப்பதை நவரட்ணம் தனது புஸ்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இவைகளில் பல,  நாச்சிமார் கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன.

வன்னி பிரதேசத்தில் 7 கன்னிமார்கள் வழிபாடு அதிகம் காணப்படுகிறது

xxxxxxx

வன்னியில் 7 வீர தெய்வங்கள்

ஹாலந்து நாட்டு ஒல்லாந்துப் படைகள் வன்னி குறுநில மன்னர்களையும் தளபதிகளையும் கொன்றபோது  அவர்களுடை மனைவியர் 7 பேர் தீக்குளித்து இறந்ததால் அவர்களை 7 வீர தெய்வங்கள் என்று வணங்கும் வழக்கமும் இருக்கிறது. ஆயினும் சப்த மாத்ரிகா சிலை கள் இதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவின் எல்லாப் பகுதியிலிருந்தும் கிடைப்பதால், இது ஆதிகாலத்திலேயே இங்கு இந்துக்களால் அறிமுகப்படுத்தகப்பட்டதும் தெரிகிறது.

மாற்றானின் கரம்பட்டு மாசுபடும் மானமதை

ஏற்காது மாதாக்கள் உயிரிழக்க சித்தமானார்

பொல்லாத நஞ்சுநிறை குன்றிமணி வித்துக்களை

செங்கல்லுடன் இடித்துத் துவைத்து கரந்தாங்கி ….

பேராறு மாதாக்கள் பணிப்பெண்ணுடன் சேர்ந்து

வீரா வேசமுடன் நஞ்சுண்டு  மடிந்தனரே …

கற்புமிகு மாதாக்கள் எழுவரையும் கைதொழுது

அற்புருக நின்றார்கள்  வன்னிவள நாட்டினர்

( வன்னி நாய்ச்சிமார் மான்மியம்)

அவர்கள் இறந்தபின்னர் தகனம் செய்யப்பட்டதால் தீக்குளித்தனர் என்ற சொல்லும் பொருத்தமாகவே உள்ளது.

Xxx

104. ஐயனார் கோவில்கள்

தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் மிகப்பெரிய ஐயனார் உருவ சிலைகளையும் அருகில் குதிரைகளையும் காணலாம். தர்ம சாஸ்தா என்று ஐயனாரை அழைப்பதால்  சபரிகிரி ஐயப்பனுக்கும் ஐயனாருக்கும் தொடர்பு உண்டு; இருவரும் ஒருவரே என்று சொல்லுவோரும் உண்டு.

 கருணையே வடிவான சிவ பெருமான் பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்ததும் அவன் அதை சிவன் தலையிலேயே கை  வைத்து சோதிக்க எண்ணிய போது விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அவனை மயக்கியதும்  புராணக்கதைகளில்  வருகிறது.. அப்போது, சிவனுக்கும் மோகினிக்கும் பிறந்தவரே ஐயனார்  என்பது பிற்காலப் புராணங்கள் தரும் செய்தியாகும் ; கிராம மக்கள் வறட்சி நீங்கி, வளம் கொழிக்க ஐயனாரை  வணங்குகின்றனர் .

யாழ்ப்பாண அராலி  கிழக்கில்  இருக்கும் மலையாளங் காடு ஐயனார் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி உத்தர உற்சவம் நடைபெறுகிறது

வண்ணார் பண்ணை , அராலி, சுன்னாகம் , ஐயனார் கோவிலடி,வரணி  ஐயனார் கோவில்கள்  அருகிலுள்ள பெரிய கோவில்களாலும், கட்டிடங்களாலும் காண்பதற்கே அரியன ஆகிவிட்டன 

புத்தகளம் – அனுராதபுரம் வழியில் பழமையான அய்யநாயக்க தேவாலய (தப்போவ) கோவில் இருக்கிறது.  சிலாபம் வரையில் A12 மற்றும் A3 வீதிகளில் பிரதான வீதியில் மட்டும் ஏறத்தாழ இருபது  அய்யனார் /அய்யநாயக்க கோவில்களை காணலாம்

சிலாவம் அருகில் மாதம்பையில் உள்ள ஐயனார் கோவிலில் பெரிய குதிரையைக் காணலாம். சிங்களத்தில்  ஐயனார் என்பதை அய்யன என்பார்கள்.

மன்னார்- பூநகரி வழியில் உள்ள வெள்ளங்குளம் ஐயனார் கோவில் , அந்த வழியில் செல்லும் யாத்ரீகர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது. ஏராளமானோர் கற்பூரம் ஏற்றிவிட்டு, சதிர்  தேங்காய் போட்டுவிட்டுச் செல்வது வழக்கம்..

திருகோணமலை அருகில் பெரியகுளத்தில் ஐயனார் கல்லுக்கு ஆண்டுதோறும் பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள்.

மட்டக்களப்பு வட்டாரத்திலும்  ஐயனார் கோவில்கள் இருக்கின்றன

–subham—

.tags- ஐயனார் , நாச்சிமார், 7 கன்னிமார், சப்த , மாதர், கோவில், நாச்சிமார் , வீர தெய்வங்கள்

Leave a comment

Leave a comment