சமநீதி பேசி சனாதனத்தை ஒழிப்பேன் என்னும் அரசியல்வாதிகள் அறிவார்களா? Post.12,661)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,661

Date uploaded in London –  –  1 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

சமநீதி பேசி சனாதனத்தை ஒழிப்பேன் என்னும் அரசியல்வாதிகள் அறிவார்களா?

ச.நாகராஜன்

ஹிந்து மதத்தில் ஏராளமான பிரிவுகளும், ஏற்றத் தாழ்வுகளும் இருப்பதாகப் பொய்க் கதை பேசித் திரியும் அரசியல்வாதிகள் ஏன் மற்ற மதங்களைப் பற்றிப் பார்க்க மாட்டேன் என்கிறார்கள்?

சுயநலவாதிகள்! அதனால் தான்!

ஹிந்து மதத்தை ஆதாயமாக வைத்து அரசியல் பிழைப்பு நடத்த நினைக்கும் இவர்களை ஹிந்துக்கள் ஒதுக்க வேண்டும்; அரசியலை விட்டு அப்புறப்படுத்த வேண்டும்.

இவர்களில் சிலர் நான் கிறிஸ்துவன் என்று மேடையிலேயே கர்வத்துடன் கூறிக் கொள்கிறார்கள்!

கிறிஸ்தவத்தில் பிரிவே இல்லையா?

இஸ்லாத்தில் பிரிவே இல்லையா?

பார்ப்போமா?

ஒரே கிறிஸ்து, ஒரே பைபிள், ஒரே மதம் – பிரிவே இல்லாத அபூர்வமான அதிசயமான சமநீதி பேசி அதைக் கடைப்பிடிக்கும் ஒரே உலக மதம் – கிறிஸ்தவம்! அடடா? அப்படியா?!

ஆனால் ரோமன் கத்தோலிக்கர்கள் சிரியன் கத்தோலிக்க சர்ச்சுக்குள் (Roman Caholic and Syrian Catholic Church) நுழைய மாட்டார்கள்!

இந்த இரண்டு பிரிவு கத்தோலிக்கர்களும் மார்தோமா சர்ச்சுக்குள் (Marthoma Church) நுழைய மாட்டார்கள்.

இந்த மூன்று பிரிவினரும் பெந்தகோஸ்த் சர்ச்சுக்குள் Pentecot Church)

நுழைய மாட்டார்கள்.

இந்த நான்கு பிரிவினரும் சால்வேஷன் ஆர்மி சர்ச்சுக்குள் (Salvation Army Church) நுழைய மாட்டார்கள்.

இந்த ஐந்து பிரிவினரும் செவந்த் டே அட்வெண்டிஸ்ட் சர்ச்சுக்குள் (Seventh Day Adventist Church) நுழைய மாட்டார்கள்.

இந்த ஆறு பிரிவினரும் ஆர்தோடாக்ஸ் சர்ச்சுக்குள் (Orthodox Church) நுழைய மாட்டார்கள்.

இந்த ஏழு பிரிவினரும் ஜோகோபைட் சர்ச்சுக்குள்  (Jacobite Church) நுழைய மாட்டார்கள்.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

146 பிரிவுகள் உள்ளன கிறிஸ்தவ மதத்தில்.

ஒரு சர்ச்சை இன்னொரு சர்ச் ஆதரிக்காது. அனுமதிக்காது. உள்ளே நுழைய மாட்டார்கள் என்றால் நுழைய விட மாட்டார்கள் என்று அர்த்தம்!

இங்கு இப்படி இருக்கும் சமநீதி பற்றி நமது சனாதன ஒழிப்பு வீரர்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை?

பதில் யாருக்கும் தெரியாது? …. ஆனால் ஓட்டுப் போடும் நமக்குத் தெரிய வேண்டும்!

சரி இஸ்லாமுக்கு வருவோம்.

ஒரே அல்லா! ஒரே குர் ஆன்! ஒரே நபி!

ஏற்றத்தாழ்வு இல்லாத சமநீதி தத்துவம்; ஒரே மதம்!

இஸ்லாமில் முஸ்லீம்களில் ஷியாவும் சன்னியும் ஒருவரை ஒருவர் வெறுப்பது கண்கூடு. இதனால் ஏற்பட்ட போர்களையும் அதில் இறந்த இஸ்லாமியரையும் எண்ணிப் பார்த்தால் வருத்தமே ஏற்படும்.

உலகில் உள்ள மதக் கலவரங்களை அலசி ஆராய்ந்து பார்த்தால் இந்த இரு பிரிவினருக்கும் ஏற்பட்ட அடிதடி, சண்டை, கலவரம் நம்மைத் திகைப்புறச் செய்யும்.

ஷியா பிரிவினர் சன்னி பிரிவின் மசூதிக்குள் நுழைய மாட்டார்கள்.

இந்த இரு பிரிவினரும் அஹமதியா பிரிவின் மசூதிக்குள் நுழைய மாட்டார்கள்.

இந்த மூன்று பிரிவினரும் சூபி மசூதிக்குள் நுழைய மாட்டார்கள்.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

குறைந்தபட்சம் 13 பிரிவுகள் இஸ்லாத்தில் உள்ளன.

இந்தியாவில் ஆவணப்படுத்தப்பட்ட இஸ்லாமில் உள்ள ஜாதிகளின் எண்ணிக்கை 73!

இந்தப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் கொல்கிறார்கள், குண்டு போட்டு அழிக்கிறார்கள், கூண்டோடு ஒழிக்கிறார்கள்.

ஆஹா! ஒரே அல்லா! ஒரே குர் ஆன்! ஒரே நபி!

ஏற்றத்தாழ்வு இல்லாத சமநீதி தத்துவம்; ஒரே மதம்!

 இங்கு இப்படி இருக்கும் சமநீதி பற்றி நமது சனாதன ஒழிப்பு வீரர்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை?

பதில் யாருக்கும் தெரியாது? …..  ஆனால் ஓட்டுப் போடும் நமக்குத் தெரிய வேண்டும்!

இது போக சிலுவைப் போர்கள், சமீபத்தில் நடந்த குவைத் போர் இவற்றையும் சற்றுப் படித்து ஆராய வேண்டும்.

நல்ல கிறிஸ்தவர்களும், நல்ல இஸ்லாமியரும் இந்த போலிப் பசப்புவாதிகளைப் புரிந்து கொள்ள வேண்டும். தங்களைப் பகடைக் காய்களாக அரசியல்வாதிகள் பயன்படுத்துவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்களை அரசியலை விட்டு அப்புறப்படுத்த இறைநம்பிக்கை கொண்ட அனைவரும் ஒன்று சேர்ந்தால்…..

சொர்க்கம் பூமியில் உண்டாகும்!

***

Leave a comment

Leave a comment