
Post No. 12,663
Date uploaded in London – – – 1 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 6
பர்த்ருஹரி பாடல்கள் – பகுதி 6
हर्तुर्याति न गोचरं किम् अपि शं पुष्णाति यत्सर्वदाஉप्य्
अर्थिभ्यः प्रतिपाद्यमानम् अनिशं प्राप्नोति वृद्धिं पराम् ।
कल्पान्तेष्वपि न प्रयाति निधनं विद्याख्यम् अन्तर्धनं
येषां तान्प्रति मानम् उज्झत नृपाः कस्तैः सह स्पर्धते ॥ 1.16 ॥
ஹர்துயாதி ந கோசரம் கிம் அபி சம் புஷ்ணாதியத் ஸர்வதாப்ய
அர்த்திப்யஹ ப்ரதிபாதயமானம் ஐசம் ப்ராப்னோதி வ்ருத்திம் பராம்
கல்பாந்தேஷ்வ்பி ந ப்ரயாதி நிதனம் வித்யாக்யம் அந்தர் தனம்
யேஷாம் தான்ப்ரதி மானம் உஜ்ஜத் ந்ருபாஹா கஸ்தைஹை சஹ ஸ்பர்ததே
கள்ளன் கொடுபோகான் கல்விச் செல்வத்தையது
கொள்ளை கொள்ள இன்பங் கொடுக்குமே –அள்ளக்
குறையாதழியாது கூர்ந்தது பெற்றோரைத்
தறை யாளு வோனு மொவ்வான் சால்பு —16
திருடர்களால் காணமுடியாதது;
எப்போதும் பேரின்பம் நல்குவது;
கொடுத்தாலும் குறைவு படாமல் அதிகரிக்கும்;
யுகமுடிவிலும் அழியாதது எதுவோ அதுவே கல்வி.
மன்னர்களே! உங்கள் கர்வத்தை/ அகந்தையை கற்றோரிடம் காட்டாதீர்.
அறிவாளிகளுடன் யார் போட்டி போட முடியும்?
இதோ தமிழிலுமொரு கவிஞர் அழகாகப் பாடி வைத்துள்ளார்
வெள்ளதால் /வெள்ளத்தே போகாது வெந்தணலால் வேகாது
வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது
கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவுறாது
கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது
கல்வியென்னும் உள்ளத்தே பொருளிருக்க
உலகெல்லாம் பொருள்தேடி உழல்வதென்னே
XXXX
SLOKA 17
இன்னுமொரு பாடல்
अधिगतपरमार्थान्पण्डितान्मावमंस्थास्
तृणम् इव लघु लक्ष्मीर्नैव तान्संरुणद्धि ।
अभिनवमदलेखाश्यामगण्डस्थलानां
न भवति बिसतन्तुर्वारणं वारणानाम् ॥ 1.17 ॥
அதிகத பரமார்த்தான் பண்டிதான்மாவ மம்ஸ்தாஸ்
த்ருணம் இவ லகு லக்ஷ்மீர்நைவ தான் ஸம்ருணததி
அபிநவமதலேகா ஸ்யாமகண்டஸ்தலானாம்
ந பவதி பிஸந்துர் வாரணம் வாரணானாம்
எல்லோரிடமும் கருணை காட்டும் அறிவாளிகளை
அவமதிக்காதீர்கள். செல்வம் என்பது புல்லுக்குச் சமம். அது கற்றோருக்கு அணைபோட முடியாது; மத நீர்ச் செறிவால்
முகம் கருத்த யானைகளை தாமரை மலர்த் தண்டால் கட்டிப்போட யாரே வல்லார்?
உண்மை வித்துவான்களை நீ உல்லிங்கனஞ் செய்யேல்
எண் மையதன்னார்க்குன் இருநிதியம் — நண்ணு மதைக்
கண்டுன் பாற் சேரார் கரியையொரு தாமரை நூற்
கொண்டே கட்டலாகுமோ கூறு –17
xxx
SLOKA 18
இன்னுமொரு பாடல்
अम्भोजिनीवनविहारविलासम् एव
हंसस्य हन्ति नितरां कुपितो विधाता ।
न त्वस्य दुग्धजलभेदविधौ प्रसिद्धां
वैदग्धीकीर्तिम् अपहर्तुम् असौ समर्थः ॥ 1.18 ॥
அம்போஜினீவன விஹார விலாஸம் ஏவ
ஹம்ஸஸ்ய ஹந்தி நிதராம் குபிதோ விதாதா
ந த்வஸ்ய துக்தஜல பேதவிதௌ ப்ரசித்தாம்
வைதக்தீ கீர்த்திம் அபஹர்தும் அசௌ ஸமர்த்தஹ
பிரம்மாவுக்குக் கோபம் வந்தால் தாமரைத் தடாகத்தில் செல்லும் அன்னப் பறவைகளைத் தடுத்து மகிழ்ச்சியைக் கெடுக்கலாம். ஆனாலும் பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் அன்னத்தின் அபூர்வ சக்தியை விதியாலும் மாற்ற முடியாது.
அயன் சினந்தால் அன்னத்தை அந்தாமரைமேல்
வியந்திருந்தானநன்றியதன் மேன்மைச் சுயங்குணமாம்
நீரினின்று பால் பிரிக்கும் நேர்மைதனை மாற்றுவனோ
தேரினிது வித்துவான் திறம் —18

xxxxx subham xxxxxx
Tags –Bhartruhari 6, Nitisataka 6