ஆர்டிகிள் 370 என்ன சொல்கிறது? (Post No.12,664)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,664

Date uploaded in London –  –  2 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

ஆர்டிகிள் 370 என்ன சொல்கிறது? 

ச.நாகராஜன் 

இந்திய அரசியல் சாஸனத்தில் ஆர்டிகிள் 370 ஒரு முக்கியமான பிரிவாக அமைகிறது.

இது என்ன சொல்கிறது என்பதை ஒவ்வொரு இந்தியனும் அறிய வேண்டியது கடமையாகும்.

ஆர்டிகிள் 1 மற்றும் ஆர்டிகிள் 370 மட்டுமே ஜம்மு காஷ்மீருக்குப் பொருந்தும் என்று முதலிலேயே ஆர்டிகிள் 370 கூறி விடுகிறது.

அப்படியானால் இந்திய அரசியல் சாஸனத்தின் இதர பிரிவுகள்???

அங்கு செல்லாது என்று அர்த்தம்.

இனி ஆர்டிகிள் 370இல் உள்ள முக்கியக் அம்சங்களைப் பார்ப்போம்.

·         ஜம்மு-காஷ்மீர் குடிமக்களுக்கு இரட்டை குடியுரிமை உண்டு.

·         ஜம்மு-காஷ்மீரின் தேசீயக் கொடி இந்திய தேசியக் கொடியை விட வேறானது.

·         ஜம்மு-காஷ்மீரின் சட்டசபையின் ஆயுள் காலம் ஆறு வருடங்கள். ஆனால் இந்தியாவில் உள்ள இதர மாநிலங்களில் உள்ள சட்டசபையின் ஆயுள் காலம் ஐந்து வருடங்கள் மட்டுமே தான்!

·         ஜம்மு-காஷ்மீரில் உள்ள குடிமக்கள் இந்திய தேசீயக் கொடியை இகழ்ந்தால் அது குற்றமாகாது. அது போலவே இந்தியாவின் இதர தேசீய அடையாளங்களை இகழ்ந்தாலும் அது குற்றமாகக் கருதப்படமாட்டாது.

·         ஜம்மு-காஷ்மீர் குடிமக்களுக்கு இந்தியாவின் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் செல்லாது.

·         ஜம்மு-காஷ்மீரைப் பொறுத்த மட்டில் இந்திய அரசு மிகவும் சில ‘எல்லைக்குட்பட்ட’ விஷயங்களில் மட்டுமே சட்டங்களை இயற்ற முடியும்.

·         ஜம்மு-காஷ்மீரில் ஒரு காஷ்மீரிப் பெண் இந்தியாவில் உள்ள இதர மாநிலங்களைச் சேர்ந்த ஒரு ஆணை மணம் புரிந்தால் அந்தப் பெண்ணுக்கான காஷ்மீர் குடியுரிமை ரத்தாகி விடும்.

·         ஆனால் அதே காஷ்மீரிப் பெண் ஒரு பாகிஸ்தானைச் சேர்ந்த ஆணை மணம் புரிந்தால் அந்த ஆணுக்கு ஜம்மு-காஷ்மீர் குடியுரிமை கிடைத்து விடும்.

·         ஆர்டிகிள் 370 இருப்பதால் ஜம்மு-காஷ்மீரில் மட்டும் RTI எனப்படும் RIGHT TO INFORMATION சட்டப்படி செல்லுபடியாகாது. இதே போலத் தான் இங்கு RTE எனப்படும RIGHT TO EDUCATION மற்றும் CAG சட்டப்படி செல்லுபடியாகாது.

·         ஆர்டிகிள் 370 இருப்பதால் ஒரு பாகிஸ்தானிய ஆண் தனக்கு இந்தியக் குடியுரிமை வேண்டும் என்று நினைத்தால் அவன் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும், அவ்வளவு தான்!

ஆனால் இது தற்காலிகமானது என்று இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது.

ஆனால் பற்பல வருடங்கள் கடந்தும் கூட இந்த தற்காலிக சட்டப்பிரிவு அப்படியே இருந்து வந்துள்ளது.

இதை ஆழ்ந்து படிப்போர் இது பாரபட்சமான ஒரு பிரிவு என்பதை நன்கு உணர முடியும்.

இதையொட்டிய ஒன்று தான் 35A என்ற பிரிவு.

ஆகவே இந்த தற்காலிகத்தை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்பது தான் மோடி அரசின் முடிவு. இதுவே இந்திய மற்றும் ஜம்மு-காஷ்மீர் மக்களின் உள்ளார்ந்த ஆசையும் கூட.

இதற்கு முதற்படி எடுத்து வைத்தது மோடி அரசு.

இதன் படி 35A இன் பல அம்சங்கள் நீக்கப்பட்டு விட்டன!

இன்னும் சில அடிப்படை உரிமைகள் ஜம்மு-காஷ்மீரைப் பொறுத்த மட்டில் இந்திய மக்களுக்கு கிடையாது. அங்கு சொத்து வாங்க முடியாது. வணிக நிறுவனம் ஆரம்பிக்க முடியாது. இவை போன்ற சர்ச்சைக்குரிய பல அம்சங்கள் உண்டு.

ஆகவே முழுவதுமாக ஆர்டிகிள் 370 மற்றும் 35A திரும்பப் பெறப்பட வேண்டும்.

அது சீக்கிரமே வரட்டும் என்பது தான் இந்திய மக்களின் ஒட்டு மொத்த ஆசை.

இது வேண்டாம் என்று கூறும் சிலரை அரசியல் ஆதாயத்தைத் தேட நினைக்கும் தேச விரோத சக்திகளோ என்று மக்கள் சந்தேகப்படுவது இயல்பே!

***

ஆதாரம், நன்றி :- கல்கத்தாவிலிருந்து வெளி வரும் ஆங்கில வார இதழ் TRUTH – VOLUME 84 ISSUE – 5 (DATED 17-3-2017), KASHMIR,

Leave a comment

Leave a comment