Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 7 (Post No.12,667)

Picture- Bhartruhari meeting his wife after becoming an ascetic

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,667

Date uploaded in London – –  –  2 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

SLOKA 19

केयूराणि न भूषयन्ति पुरुषं हारा न चन्द्रोज्ज्वला

न स्नानं न विलेपनं न कुसुमं नालङ्कृता मूर्धजाः ।

वाण्येका समलङ्करोति पुरुषं या संस्कृता धार्यते

क्षीयन्ते खलु भूषणानि सततं वाग्भूषणं भूषणम् ॥ 1.19 ॥

கேயூராணி ந பூஷயந்தி புருஷம் ஹாரா ந சந்த்ரோஜ்வலா

ந் ஸ்நானம்ந விலேபனம் நகுஸுமம் நாளங்ருதா மூர்த்தஜாஹா

வாண்யேகா சமலங் கரோதி புருஷம் யா ஸம்ஸ்க்ருதா தார்யதே

க்ஷீயந்தே கலு பூஷணானி ஸததம் வாக் பூஷணம் பூஷணம்

மனிதனுக்கு அழகூட்டுவது கங்கணமன்று;

19. Armlets and necklaces shining like the moon, do not adorn a person. Nor do baths, perfumes, flowers and decked hair. Refined speech alone adorns the person bearing it. All ornaments fade away; the ornament of speech is the only lasting one.

நிலவொளி போன்ற மாலைகளும் அழகு சேர்ர்க்காது.

நீர் முழுக்கோ, சந்தனப் பூச்சோ,பூக்களோ, சிகை அலங்காரமோ

ஒருவனுக்கு அழகு அல்ல; பண்பட்ட பேச்சே அழகு தரும்.

ஏனைய எல்லாம் வாடி வதங்கும், உதிர்ந்தும்,உலர்ந்தும் போம்.

நல்ல பேச்சு உண்மையான அணிகலனாக நிற்கும்.

இதோ தமிழிலுமொரு கவிஞர் அழகாகப் பாடி வைத்துள்ளார்

குஞ்சியகுங் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சளழகும் அழகல்ல- நெஞ்சத்து

நல்லம் யாமென்னும் நடுவுநிலைமையால்

கல்வியழகே அழகு- நாலடியார்

சிகை அலங்காரமோ, கரை போட்ட ஆடை அலங்காரமோ, மஞ்சள் முதலிய அலங்காரப் பூச்சுகளோ அழகல்ல. கல்வி கற்று நடு நிலையில் நிற்பதே அழகு.

இணரூழ்த்தும் நாறா மலரணையர் கற்றது

உணர விரித்துரையாதார் – குறள் 650

கற்ற விஷயங்களை மற்றவர்களுக்கு விளக்கமுடியாதவர்கள்

மலர்ந்தும் மணம் வீசாத மலர்களைப் போன்றவர்கள்.

சொல் அழகு

மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்

உகிர் வனப்பும் காதின் வனப்பும்– செயிர் தீர்ந்த

பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த

சொல்லின் வனப்பே வனப்பு

–சிறுபஞ்சமூலம் 36 (காரியாசான் இயற்றியது)

பொருள்:- தலை மயிர் அழகும், பார்ப்பவரின் கண்ணைக் கவரும் மார்பின் அழகும், நகத்தின் அழகும், செவியின் அழகும், குற்றமில்லாத பற்களின் அழகும் அழகல்ல. நூல்களின் அமைந்துள்ள சொல்லின் அழகே அழகு.

இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும்

நடை வனப்பும் நாணின் வனப்பும் – படைசால்

கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ

டெழுத்தின் வனப்பே வனப்பு

–ஏலாதி 74 (கணிமேதாவியார் இயற்றியது)

பொருள்:- இடையின் அழகும், தோளினுடைய அழகும், செல்வத்தின் அழகும், நடை அழகும், நாணத்தின் அழகும், திரண்ட கழுத்தின் அழகும், உண்மையான அழகு ஆகாது. கணித நூலறிவும், இலக்கியங்களைப் படித்தறியும் அறிவும்தான் உண்மையான அழகு.

சிறந்த, ஆழமான பல நூல்களைக் கல்லாதவனுடைய அழகு, மண்ணினால் செய்யப்பட்ட பொம்மையின் அழகைப் போன்றதே.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம்

மண்மாண் புனை பாவை அற்று

–திருக்குறள் 407 (திருவள்ளுவர் இயற்றியது)

ஆரமும் தோளணியும் ஆண்பிள்ளை  பூண்பதேன் ?

சார சந்தனத்தை த் தடவுவதேன் ?– வாரி

குடுமியிற் பூச்சூடுவதேன் கோலமவையல்ல

நாட்டுசபையில் வாக்கழகே  நன்று – 19


XXXX

SLOKA 20

विद्या नाम नरस्य रूपम् अधिकं प्रच्छन्नगुप्तं धनं

विद्या भोगकरी यशःसुखकरी विद्या गुरूणां गुरुः ।

विद्या बन्धुजनो विदेशगमने विद्या परा देवता

विद्या राजसु पूज्यते न तु धनं विद्याविहीनः पशुः ॥ 1.20 ॥

வித்யா நாம நரஸ்ய ரூபமதிகம் ப்ரச்சன்னகுப்தம் தனம்

வித்யா போககரீ ய்ஸ்ஹ ஸுககரீவித்யா குரூணாம் க்ருஹு

வித்யாம் ப்ந்துஜனோ விதேச கமனே வித்யா பராதேவதா

வித்யா ராஜஸு பூஜ்யதேந து தனம் வித்யா விஹீனஹ பசுஹு -20

20. Learning is enhanced beauty. It is a hidden, guarded treasure. It gives enjoyment, fame and happiness. It is the greatest of great things. When travelling to foreign lands, it is a friend. It is the supreme deity. It is learning, not wealth that is venerated by kings. A person who is bereft of learning is indeed a beast.

கல்வி என்பது ஒருவனுக்கு அழகு சேர்க்கிறது;

அவனுடைய ரஹஸிய செல்வம் அது;

வளமும், மகிழ்ச்சியும், புகழும் நல்குவது.

‘குரு’க்களுக்கு எல்லாம் ‘குரு’ கல்வி;

வெளி நாடு சென்றால் தெரியாத மக்களிடையே இருக்கையில் அது ஒருவனுக்கு நண்பன்; கல்வியே உயர்ந்த கடவுள்.

மன்னர்களிடையே செல்வத்துக்கு மதிப்பு இல்லை; ஆனால் கற்ற கல்விக்கு மதிப்பு உண்டு. கல்வி கற்காதவன் ஒரு விலங்கு.

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்

கற்றாரோடு ஏனையவர்– குறள் 410

பொருள்:-நல்ல புத்தகங்களைப் படித்தவர்க்கும், படிக்காதவர்க்கும் உள்ள வேறுபாடு மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடே (படிக்காதவன் எல்லாம் மிருகம்)

கல்வியே பூணாகும் கல்வியே வைப்பாகும்

கல்வியே பேரின்பம் கற்பிக்கும் –கல்வியே

மன்னன் மதிப்பாம் மகாதேவனாங் குருவாம்

துன்னு சுற்றமாகுந் தொடர்ந்து – 20

XXXXX

SLOKA 21

क्षान्तिश्चेत्कवचेन किं किम् अरिभिः क्रोधो‌स्ति चेद्देहिनां

ज्ञातिश्चेदनलेन किं यदि सुहृद्दिव्यौषधं किं फलम् ।

किं सर्पैर्यदि दुर्जनाः किम् उ धनैर्विद्या‌नवद्या यदि

व्रीडा चेत्किम् उ भूषणैः सुकविता यद्यस्ति राज्येन किम् ॥ 1.21 ॥

க்ஷாந்திஸ் சேத் கவசேன கிம் கிம் அரிபிஹி அஸ்தி சேத தேஹினாம்

ஞாதிஸ்சேத் அநலேன கிம் யதி சுஹ்ருத்திவ்யௌஷதம் கிம் பலம்

கிம் ஸர்ப்பையதி  துர்ஜனாஹா கிம் உதனைர்வித்யா அனவத்யா யதி

வ்ரீடா சேத் கிமு பூஷணைஹி ஸுகவிதா யத்யஸ்தி ராஜ்ய்ரேன கிம் 1-21

பர்த்ருஹரியின் நீதி சதகம் பர்த்ருஹரி பாடல் 21

பாடல் 21-ன் பொருள்

மன்னிக்கும் குணம் உள்ளவனுக்கு கவசம் எதற்கு?

கோபம் உள்ளவனுக்கு எதிரிகள் எதற்கு?

ஒருவனுக்கு அறிவு இருந்தால் தீயதை எரிக்க தீ எதற்கு?

உண்மை நண்பன் இருந்தால் மருந்து தேவையா?

தன்னைச் சுற்றிலும் கெட்டவர்கள் இருந்தால் பாம்புகள் எதற்கு?

நல்ல விவேகம் இருந்தால் பணம் எதற்கு?

நல்ல குணங்கள் இருந்தால் ஆபரணங்கள் எதற்கு?

கவிதையை ரசிக்கத் தெரிந்துவிட்டால் அவனுக்கு ராஜ்யம், அரசாட்சி எதற்கு?

21.  When one has forgiveness, what need is served by an armour? When there is anger, why do people need (other) enemies? What use is there for fire when kinsfolk exist (to cause destruction)? What purpose can medicines serve when there is a friend (to help healing)? If there are evil people, serpents are not necessary and neither is wealth, when there is defect-free learning. What is the use of ornaments when one has modesty, and if one has beautiful poetry, even kingship has no value.

மன்னிக்கும் குணம்–

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்துவிடல்- 314

உனக்கு துன்பம் விளைவித்தவர்க்கு நன்மைகள் பல செய்து அவர்கள் வெட்கப்படும்படி செய்க; அவர் செய்த கெடுதிகளையும் மறக்க.

தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்

என் குற்றமாகும் இறைக்கு- குறள் 436

தன்னுடைய குற்றத்தை ஆராய்ந்துவிட்டு, மற்றவர் குற்றத்தை

ஆராய்க; இதில் என்ன கஷ்டம்?

பொறுமையே சட்டை பொறாமை பகைவர்

வெறுமை மனத்தாயத்தார் வெந்தீ மறுவிலா நேசர்

மருந்து நிலவுலகிற் பொல்லாத

நீசரரவம்  நிசம் –

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்பொடு உடனுறைந்தற்று- 890

ஒரே கருத்து இல்லாதவருடன் வாழ்தல், குடிசையில் பாம்புடன் வசிப்பது போலாகும்.

கோபம் பற்றி வள்ளுவன்

சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி இனம் என்னும்

ஏமப் புணையைச் சுடும்- 306

(சேர்ந்தாரைக் கொல்லி= ஆஸ்ரயாசஹ)

கோபப்பட்டவனை கோபம் என்னும் நெருப்பே அழித்துவிடும்; அவனுக்குத் துணையாக நின்றாரையும் அழித்துவிடும் (நெருப்பு போல)

—–subham——-

Tags- Bhartruhari, Part 7, 4 languages, Slokas 19,20, 21

Leave a comment

Leave a comment