ஆர். சேஷாத்ரிநாதன் எழுதிய இராமாயணம் – அயோத்தியா காண்டம்-கம்பர் – 2 (Post No.12,668)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,668

Date uploaded in London –  –  3 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

புத்தக அறிமுகம் : ஆர். சேஷாத்ரிநாதன் எழுதிய இராமாயணம் – அயோத்தியா காண்டம்-கம்பர் – பாகம் 2

பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் இந்த நூலை வெளியிட்டுள்ளார்.

நூலில் உள்ள அத்தியாயங்கள் இவை:

1.தைலமாட்டுப் படலம்

2. கங்கைப் படலம்

3. குகப் படலம்

4. வனம் புகு படலம்

5. சித்திரகூடப் படலம்

6. பள்ளிபடைப் படலம்

பிற்சேர்க்கை

இராமாயணம் பற்றிய ஆய்வு நூல் வரிசையில் திரு ஆர் சேஷாத்ரிநாதன் எழுதிய இந்த நூல் மூன்றாவது நூலாக அமைகிறது.

நூலுக்கு வழங்கிய முன்னுரையில், “இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் எளிதாக்கி மக்களிடையே கொண்டு செல்ல பல உபந்யாசகர்கள், சான்றோர்கள், சொற்பொழிவாளர்கள் அயராது பாடுபடுகின்றனர். இந்த வரிசையில் என்னுடைய சிறு முயற்சியாக பாலகாண்டத்தையும் அயோத்யா காண்டத்தையும் தொகுத்து வழங்கியுள்ளேன். கம்பரின் அயோத்தியா காண்டத்தைத் தொகுத்து இப்போது வழங்கியுள்ளதில் இந்த இரண்டாம் பாகம் மலர்கிறது” என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஆங்காங்கே கம்பரின் இனிய கவிதைகளோடு இராமாயண வெண்பா,  அருணாசலக் கவிராயரின் இராமநாடக கீர்த்தனை உள்ளிட்ட நூல்களிலிருந்து பாடல்களைத் தந்து ஒப்பிட்டு அவர் ஒவ்வொரு காட்சியையும் விவரிப்பது பல நூல்களின் சாரத்தை ஒருங்கே சேர்ந்து அருந்திய மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்த நூலுக்கு திரு ச.நாகராஜன் அணிந்துரை வழங்கியுள்ளார்.

அதில் ஒரு பகுதி இது:

“மொழிவளம் மொழிகுவேனோ மொழிகதைத் தருண முன்னிப்

பொழிவளம்  புகலு கேனோ! பொருள் வளம் புடைத்து விம்மிக்

கழிவளங் கழறு கேனோ! காவியக் கழனி யோங்கிச்

செழிவளஞ் சிரித்து முத்தந் தெரித்தொளி சிதறும் பாவை”

என்று ‘கம்பராமாயண கௌஸ்துப மணி மாலையில்’ கம்ப பக்தர் பேராசிரியர் கே.என். சிவராஜ பிள்ளை கம்பனை வியந்து பாராட்டுகிறார்.

ஆனால் இந்த வேக யுகத்தில் கம்பனை இனம் காட்ட ஒருவர் வேண்டுமே! இந்த வகையில் தான் இராமாயணக் கடலில் கம்பன் பொதிந்து வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான முத்துக்களை அறிய ஆவல் கொண்டு ஆராய்ந்து அதில் உள்ள பல நல் முத்துக்களைக் கண்டு அவற்றை உலகினருக்கும் தரவல்ல ஒருவராகத் திகழ்கிறார் திரு ஆர். சேஷாத்ரிநாதன்.

அவரது இராமாயண ஈடுபாடும் ஆய்வும் பாராட்டுக்கு உரியது.”

*

பிற்சேர்க்கையில் அவர் இந்த நூலை எழுத உதவிய நூல்களின் பட்டியலைத் தருகிறார்.

1) வால்மீகி ராமாயணம் 2) கம்ப ராமாயணம் 3) துளஸி ராமாயணம் 4) இராமாயண வெண்பா 5) நலுங்கு மெட்டு ராமாயணம் 6) இராமநாடகக் கீர்த்தனை 7) வீரபத்திர ராமாயணக் கும்மி 8) ராமாயண அம்மானை 9) ராமாயணக் கப்பல் உள்ளிட்ட நூல்கள்.

வியக்கிறோம். 

காலத்திற்கேற்ற அருமையான ஆன்மீக சேவையைப் புரிந்தமைக்காக திரு சேஷாத்ரிநாதன் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள் உரித்தாகுக.

அவர் தம் இந்தத் தமிழ்த் தொண்டு சிறக்க வாழ்த்துவோம்.

இந்த நூல் பற்றிய விவரங்களை www.pustaka.co.in இணைய தளத்தில் காணலாம். நூல் பற்றிய விவரங்களை 99803 87852 என்ற மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டும் பெறலாம். படிக்கடிஜிடல் வடிவத்தில் நூலைப் பெறஅச்சுப் பதிப்பாகப் பெற என இப்படி மூன்று விதங்களில் இந்த நூலைப் பெறலாம்.

***

Leave a comment

Leave a comment