
Sita Devi Temple in Sri Lanka
Post No. 12,669
Date uploaded in London – – – 3 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 47
108.மருதநர் மடம் ஆஞ்சநேயர் கோவில்
Maruthanamadam Anjaneyar Kovil – Jaffna


மேலும் ஒரு ஆஞ்சனேயர் கோவில் பற்றிக் காண்போம்.. யாழ்ப்பாணத்திலுள்ள மருதன மடம் அனுமார் கோவில் அதன் கோபுரத்தாலும் 72 அடி உயர அனுமனின் கம்பீரமான சிலையாலும் புகழ் பெற்று விளங்குகிறது.. யாழ்ப்பணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
காங்கேசன் துறை நோக்கிப் பயணம் செய்யும் எவரும் கோபுரத்தையும் அனுமார் சிலையையும் பார்க்காமல் இருக்க முடியாது..மருதனமடம் ஆஞ்சநேயர் கோவிலின் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று, , பிரமிக்க வைக்கும் 72 அடி உயர அனுமன் சிலை ஆகும். கலங்கரை விளக்கம் போல இந்த கோபுர அமைப்பை தொலைவிலிருந்து பார்க்க முடியும்..

மருதனமடம் ஆஞ்சநேயர் கோவிலில் தினசரி பூஜைகள் தவிர, செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. இந்த நாட்கள் அனுமாருக்குப் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன,
கோவிலின் மண்டபம் மிகப்பெரியது ; வண்ண, வண்ண சிலைகளும் ஓவியங்களும் அலங்கரிப்பதோடு மிகவும் சுத்தமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இது ராமாயண காலத்துடன் நேரடி தொடர்புடையது அல்ல; ஆயினும் ராமாயணத்தில் அனுமன் கதாபாத்திரம் இல்லையேல் கதையே இல்லை என்பது நமக்குத் தெரியும். கண்ணகி மதுரையை எரித்து அதர்மத்தை அழித்தாற்போல , இலங்கையில் அதர்மத்தை அழிக்க உதவியவன் அவன். ஆகவே இலங்கைத் தமிழர்கள் என்று மறவாத மா வரன் ஆஞ்சனேயன் ; இந்து மதத்தில் ஒரே மஹாவீரன் பட்டம் பெற்றவன் அனுமன்தான். சமண மதத்தில் 24ஆவது தீர்த்தங்கரராக வந்த மஹாவீரர் என்ற மற்றொரு மாவீரனையும் உலகமே போற்றும்.
XXXXX
109. சீதா தேவி கோவில் , நுவரெலியா

இலங்கையிலுள்ள ராமாயண திருத்தலங்களில் மிகவும் பிரசித்திபெற்றது நுவரெலியா சீதை அம்மன் கோவில் ஆகும் இலங்கைத் தீவின் நடுநாயகமாகத் திகழ்வது மலையகம். இங்கு சீதா எலிய என்னும் இடத்தில் சீதை அம்மன் கோவில் அமைந்துள்ளது.. நுவரெலியா நகரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் கோவில் இருக்கிறது இங்கேதான் இராவணன் சீதா தேவியை சிறை வைத்திருந்த அசோக வனம் இருந்தது எலிய என்றால் சமவெளி என்று அர்த்தம் . அருகில் சீதா கொண்ட என்ற ஓடை இருக்கிறது அங்குள்ள பள்ளங்களை ராவ ணனின் யானைகள் நின்ற கால் சுவடுகள் என்பர். இன்னும் சிலர் அனுமனின் கால் சுவடுகள் என்பார்கள். ஹக்கலா தாவரவியல் பூங்காவிலிருந்து 1 கிமீ தொலைவில் கோவில் உள்ளது. கோவில் அருகிலுள்ள கருப்பு நிற மண், இலங்கை நகருக்கு அனுமன் எரியூட்டியதால் ஏற்பட்டது என்று பக்தர்கள் கருதுகிறார்கள்.
சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, ஓடையில் மூன்று சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.. காலை பூஜை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை பூஜை பிற்பகல் 2 மணி முதல் 6:30 மணி வரையிலும் நடக்கிறது.
கோவில் சுவர்களில் ராமாயணக் காட்சிகளை ஓவியமாக வைத்துள்ளார்கள். அமைதியான சூழ்நிலையிலுள்ள சிறிய கோவில்தான் இந்த கோவிலில் ராமர், சீதா தேவி, லக்ஷ்மணன், அனுமன் , கிருஷ்ணர், கணேசர் ஆகியோரைத் தரிசிக்கலாம் .
சிவமயம் சங்கர சுவாமி இந்தக் கோவிலை ஸ்தாபித்தார். 5000 அடி உயர த்தில் அமைந்த இந்த மலைப் பிராந்தியத்தில் காட்டு மலர்கள் அதிகம் பூக்கின்றன. அவகைகளை பூஜைக்குச் சீதா தேவி பயன்படுத்தியதால் மலர்களுக்குக் கூட சீதா தேவியின் பெயர்கள்தான் !
இலங்கை அரசாங்கம் 2023ல் சீதா தேவி கோவில் தபால் தலையையும் வெளியிட்டு ராமாயணத்தைச் சிறப்பித்துள்ளது.
Xxxx
110.ருமசெல்ல / ராமா சைல அனுமார் மலை Rumasalla Mountain / Raama Saila= Herb Mountain
இலங்கையின் தென் கோடியில் இந்து மஹா சமுத்திரத்தின் கடலோரமாக காலி GALLE நகரம் இருக்கிறது. அங்கே அனுமார் சிலையும் அனுமன் மலையும் இருக்கிறது . ராம சைல = என்பது இப்போது ரூம செல என்று மருவிவிட்டது . சைலம் என்ற சமஸ்க்ருதச் சொல்லுக்கு மலை என்று பொருள் . இது ராமாயண சுற்றுலாவில் முக்கிய இடமாகக் கருதப்படுகிறது.
கடற்கரைப் பக்கத்தில் அடர்ந்த மலை, காடு , பீச்/ BEACH கடற் கரை அனைத்தும் கொண்டது ராம சைலம்.
லட்சுமணன் மூர்ச்சை அடைந்த போது அவனை உய்ப்பிக்க அனுமன் இம்மலைக்குச் சென்று சஞ்சீவி பர்வதத்தை/ மலையைக் கொணர்ந்தான் என்பது ராமாயணம் அறிந்தோருக்கு நன்கு தெரியும். உலகில் ரிக் வேதத்துக்கு அடுத்தபடியாக மூலிகை வைத்தியம் வருவது ராமாயணத்தில்தான் . . அனுமன் கொண்டு வந்த இமயமலைத் துண்டுகள் ஐந்து இடங்களில் விழுந்ததாகவும் அதில் ஒரு மருந்து மலை இங்கே விழுந்ததால் இது ராம சைல = RAMA SAILA = RUMA SALLA என்று பெயர் பெற்றதாகவும் பக்கதர்கள் பகர்கிறார்கள் .

இப்போது அங்கு இரண்டு அனுமன் சிலைகள் உள்ளன . ஜப்பானியர் கட்டிய சமாதான/ அமைதி பகோடாவில் PEACE PAGODA இந்துக் கடவுளருடன் ஆஞ்சனேயர் சிலையும் இருக்கிறது . விஷ்ணு , முருகன் சிலைகளும் ஜப்பானியர் கட்டிய புத்த விஹாரத்தில் இருக்கின்றன. இங்கு 150 வகையான மூலிகைகள் வளருவதை தாவரவியல் அறிஞர்கள் பட்டியலிட்டுள்ளதால் ராமாயண மருந்து மலை / சஞ்சீவி மலையின் பகுதி இதுவே என்பதும் உறுதியாகிறது
To be continued…………………………………
—SUBHAM—–
TAGS — இராமாயண தலங்கள், இலங்கை, ரூமசெல்ல , ராம சைல , ஆஞ்சனேயர் , சஞ்சீவி பர்வதம், மலை, மூலிகை, மருந்து மலை ,Part 47,