
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 12,670
Date uploaded in London – – – 3 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Part 8
SLOKA 22
दाक्षिण्यं स्वजने दया परिजने शाठ्यं सदा दुर्जने
प्रीतिः साधुजने नयो नृपजने विद्वज्जने चार्जवम् ।
शौर्यं शत्रुजने क्षमा गुरुजने कान्ताजने धृष्टता
ये चैवं पुरुषाः कलासु कुशलास्तेष्वेव लोकस्थितिः ॥ 1.22 ॥
தாக்ஷிண்யம் ஸ்வஜனே தயா பரிஜனே சாட்யம் ஸதா துர்ஜனே
ப்ரீதிஹி ஸாது ஜனே நயோ ந்ருப ஜனே வித்வத் ஜனே ச ஆர்ஜவம்
சௌர்யம் சத்ரு ஜனே க்ஷமா குரு ஜனே காந்தா ஜனே த்ருஷ்டதா
யேசைவம் புருஷாஹா கலாஸு குசலாஸ்தேஷ்வேவ லோகஸ்திதிஹி -1-22
பாடல் 22-ன் பொருள்
ஒருவன் உறவினர்களிடத்தில் மரியாதை காட்ட வேண்டும்;
வேலைக்காரர்களிடம் அன்பாக இருக்க வேண்டும்;
புனிதர்களின் உறவுக்கு ஏங்க வேண்டும்;
ஆட்சியாளரின் விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும்;
கற்றோரிடம் பணிவுடன் இருக்க வேண்டும்;
எதிரிகளிடத்தில் வீரத்தைக் காட்ட வேண்டும்;
முதியோரிடம் சகிப்புத் தன்மை இருக்க வேண்டும்;
மனைவியிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்;
மனிதர்களின் திறமை, விவேகம், தந்திரம் மூலம்தான்
நல்ல சமுதாயம் வேரூன்றி நிற்கிறது
Xxx
உறவோர்க்குக் கண்ணோட்டம் ஊழியற்கிரக்கம்
மறவோர்க்கு வன்மை வழங்கல் –அறவோர்க்கு
மெய்யன்பு பாராளும் வேந்தர்கனுசரணை
கைவல்ய மாகுங் கணக்கு – 22
படித்தோர்க்கு ஒழுங்கு பகைவர்க்கு வீரம்
முடித்தோர்க் கடக்கம் முறையாம் — துடித்தவிடைப்
பெண்களுக்குத் திட்டம் பெரிதுங்கையாடுவார்
கண்களுக்கு மேல் பெற்றார் கண் -22
22. The stability of the world depends on those men alone, who are skilled in the arts and who display kindness to kinsfolk, compassion to others, deceit towards evildoers, friendship to good people, diplomacy to kings, honesty to the learned, bravery to foes, patience with elders and tact with women.
எல்லோரிடமும் அன்பு காட்டுதல்—
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு- 80
அன்பு இருக்கும் உடல் உயிருள்ள உடல்; அது இல்லாவிட்டால் அது பிணம் ( தோல் போற்றிய எலும்புக்கூடு)
xxx
பெரியார் துணைக்கு ஏங்கு—
உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்-442
இருக்கும் துன்பத்தைப் போக்கி, இனி துன்பம் வராமல் காக்கும் அறிவிற் சிறந்த பெரியோரை பேணுக

xxxx
SLOKA 23
जाड्यं धियो हरति सिञ्चति वाचि सत्यं
मानोन्नतिं दिशति पापम् अपाकरोति ।
चेतः प्रसादयति दिक्षु तनोति कीर्तिं
सत्सङ्गतिः कथय किं न करोति पुंसाम् ॥ 1.23 ॥
ஜாட்யம் தியோ ஹரதி ஸிஞ்சதி வாசி ஸத்யம்
மானோன்னதிம் திஸதி பாபம் அபாகரோதி
சேதஹ ப்ரஸாதயதி திஷு தனோதி கீர்த்திம்
ஸத்ஸங்கதிஹி கதய கிம் ந கரோதி பும்ஸாம் 1-23
பாடல் 23-ன் பொருள்
புனிதர்களின், அறிவாளிகளின் தோழமையானது ஒருவனின் அறியாமையையும் அறிவின்மையையும் நீக்கும்;
மந்த புத்தியை விலக்கும்; சுயமரியாதையை அதிகரிக்கும்; பாபங்களைப் போக்கும்; மனத்தில் மகிழ்ச்சியை எழுப்பும்; உற்சாகத்தை உயர்த்தும்; சமுதாயத்தில் புகழை ஈட்டித் தரும்; புனிதர்களின் கூட்டுறவால் கிடைக்காதது ஏதேனும் உண்டோ? செப்புக.
23. Association with good people removes dullness of the intellect, infuses one’s speech with truth, confers dignity, removes sin, gives clarity and joy to the heart and brings fame in all directions. Tell me, what does it not do for men?
உண்மையுரைப்பிக்கும் உயர்மதியை யுண்டாக்கும்
ஒண்மைதிகழ் மானத்தை ஓங்குவிக்கும் — எண்மை
மறத்தையழிக்கும் மனத்தைக் கொழிக்கும்
புறத் தெங்குங் கீர்த்தி பொலிவிக்கும் திறத்த பல
சொல்லியென் மேலோர் தொடர்பு போல் நன்மை செய
வல்ல தொன்றெங்கு மிலை மற்று –-23
ஆதிசங்கரரும் பஜகோவிந்தம் என்னும் துதியில் நல்லோர் சஹவாசம் முக்தி நிலைக்கு இட்டும் செல்லும் என்கிறார்:–
சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஸ்ஸலதத்வம்
நிஸ்ஸலதத்வே ஜீவன் முக்தி – பஜகோவிந்தம்.
திருவள்ளுவரும் சத்சங்கத்தின் பெருமையை, தொண்டர்தம் கூட்டை, ‘கேள்வி’ என்னும் அதிகாரத்தில் சொல்லுவார்:
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும் (குறள் 416)
கொஞ்சமாவது நல்லது கேளுங்கள்; அது உங்களுக்குப் பயன்படுகிறபோது நல்ல பெருமையைக் கொண்டுவரும் – என்கிறார்.
இன்னொரு குறளில் சறுக்கி விழும் நிலத்தில் நடக்கும்போது பயன்படும் ஊன்றுகோல் போல (walking stick வாக்கிங் ஸ்டிக்), புராண இதிஹாசச் சொற்பொழிவுகள் பயன்படும் என்பார்:
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் – குறள் 415
xxxxx
“நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே—நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று” —-(வாக்குண்டாம்)
xxxxxx
SLOKA 24
जयन्ति ते सुकृतिनो
रससिद्धाः कवीश्वराः ।
नास्ति येषां यशःकाये
जरामरणजं भयम् ॥ 1.24 ॥
ஜயந்தி தே ஸுக்ருதினோ ரஸஸித்தாஹா கவீஸ்வராஹா
நாஸ்தி யேஷாம் யச: காயே ஜராமரணஜம் பயம்-1-24
ஆழ்ந்த கல்விகற்ற, நவ ரசங்களை கட்டுக்குள் வைத்திருக்கும் புலவர்களின் புகழ் என்றும் குன்றாது. அப்பேற்பட்ட புலவர்கள் என்றும் வெல்வர். அவர்களுடைய புகழ் அழியும் என்ற பயமே இல்லை.
‘கவி’ என்ற ஸம்ஸ்க்ருத சொல்லுக்குப் புலவர் என்ற பொருளும் , நெடுநோக்குடைய அறிஞர் என்றும் பொருளும் உண்டு. உண்மையில் வேத காலக் கவிஞர்கள் அப்படித்தான் இருந்தனர்.

Poets are Great men!
May There be glory to wise men who are learned and accomplished poets.. there is no fear that their fame shall wither or perish- 24
24. Victorious are the fortunate great poets, who have mastered the Rasas. Their body of fame knows no fear of old age and death.
உள்ளதொன்றுரைகின்ற ஒண் கவியாற் பாவாணர்
எள்ளும் மரணபவ மின்றியே – வில்லரிய
சத்தியமா ஞானியர் போல் தாவாத கீர்த்தியொடு
நித்தியமா வாழ்வார் நிசம் –24
—- subham —-
Tags- Nitisataka part 8, bhartruhari part 8, 4 languages, respect, poets