.webp)
Post No. 12,672
Date uploaded in London – – – 4 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 48
இலங்கையிலுள்ள 52 ராமாயண ஸ்தலங்களில் மேலும் சில முக்கியமானவற்றைக் காண்போம் .
111.விபீஷணன் கோவில் VIBHISHANA DEVALAYA, Kelaniya
உலகிலேயே முதல் முதலில் வெளிநாட்டு அரசாங்கத்தை (FIRST EXILE GOVERNMENT IN THE WORLD) அறிவித்தது இந்துக்கள்தான். ராவணன் தம்பி விபீஷணனை ராமபிரான், இலங்கை மன்னனாக அறிவித்து இந்தியாவில் முடி சூட்டினார் . இதை ஆங்கிலத்தில் exile government எக்ஸைல் கவர்மெண்ட் என்பார்கள். விபீஷணனுக்கு ராமேஸ்வரத்திலும் இலங்கையிலும் கோவில்கள் உள்ளன. ராவண வதத்துக்கு முன்னதாகவே இலங்கை மன்னனனாக விபீஷணனுக்கு ராமர் முடிசூட்டினார்.)
கொழும்பு நகரிலிருந்து 5 மைல் தொலைவில் களனிய என்ற இடம் இருக்கிறது ; இங்கு களனி கங்கை நதி ஓடுகிறது. இதன் கரையில் விபீஷணனுக்குக் கோவில் கட்டப்பட்டுள்ள்ளது. இலங்கை முழுவதும் நதிகளை கங்கை என்ற பெயருடன் அழைப்பதைக் கவனிக்க வேண்டும். இந்து இலங்கை பின்னர் புத்த மத இலங்கையாக மாறியதற்கு இவை எல்லாம் சான்று.
(ராமேஸ்வரம் – தனுஷ்கோடி செல்லும் சாலையில் ராமேஸ்வரத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் கோதண்டராமர் கோவில் இருக்கிறது ; அங்கு ராமபிரானை விபீஷணன் வணங்கும் கோலத்தில் இருப்பதைக் காணலாம்) .
களனியா என்னும் இடத்தில் இப்பொழுது புத்த விஹாரமும் இருக்கிறது. இதன் பழைய பெயர் கல்யாணி. பழைய கல்யாணி 2200 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி பேரலைத் தாக்குதலில் கடலுக்குள் சென்றுவிட்டது பின்னர் களனிய தலை நகர் ஆனது.
ராவண வதததுக்குப் பின்னர் இங்கு விபீஷணன் முறையாகப் பட்டம் சூட்டிக்கொண்டு ஆட்சி செய்ததால் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையை ஆண்ட மன்னன், இன்று விபீஷணனுக்கு கோவிலை எழுப்பினான்
களனி விஹாரையில் முன்வாசல் தோரணத்தைக் கடந்ததும் வலது பக்கம் ஓர் சிறிய கட்டிடம் காணப்படுகிறது. இதுவே விபீஷணன் கோயிலாகும். இங்கு கப்புறாளைகள் பூஜைகளை செய்து வருகின்றனர். பெளத்தர்களும் வணங்கிச் செல்கிறார்கள் .
விபீஷணன் கோவிலை சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் போச்சுகீசிய மத வெறியர்கள் இடித்துத் தரைமட்டமாகினார்கள் .விக்கிரகங்களை ஆற்றில் வீசினார்கள். 1767 இல் கண்டியை ஆட்சி செய்த கீர்த்தி ஶ்ரீ ராஜசிங்க மன்னன், களனி விபீஷணன் கோவிலையும் , பெளத்த விஹாரையையும் மீண்டும் கட்டினார் .
12–ம் நூற்றாண்டு முதல் கோவில் பற்றிய செய்திகள், நூல்கள் மூலம் கிடைக்கின்றன. அண்மைக் காலத்தில் கோவில் புதுப்பிக்கப்பட்டது. கோவில் தூண்கள் , சுவரிலுள்ள சிற்பங்கள் முதலியவற்றில் இந்து மத செல்வாக்கைக் காணலாம்
ஒரு வியப்பான விஷயம் என்னவென்றால் இலங்கையில் ராவணனுக்கு கோவில் கிடையாது. ஆனால் பல இடங்களில் விபீஷணன் கோவில்கள் இருக்கின்றன. மேலும் இளநகையைக் காக்கும் 4 காவல் தெய்வங்களில் விபீஷணன் பெயர்தான் உள்ளது. ராமாயண தர்மத்தை புராதன இலங்கை நூலிழை பிசகாமல் கடைப்பிடித்தது . விபீஷணன் ஒரு நியாய வாதி என்பதால், பல குடும்ப , சமூக பிணக்குகளைத் தீர்ப்பதற்காக சிங்கள மக்கள் விபீஷண பகவானுக்கு நேர்த்திக் கடனும் வேண்டிக்கொள்கின்றனர்
ராம பிரான், , 14 ஆண்டு முடியும் தருவாயில் , பரதனைக் காப்பாற்றுவதற்காக நந்திக்கிராமத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக விரைந்து சென்றார் என்றும் அதனால் விபீஷண னுக்கு பட்டாபிஷேகம் செய்யும் பொறுப்பு லட்சுமணனிடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் கதை போகிறது. ஆகையால் இங்கு அதைக்காட்டும் சிலைகளும் பெரிய ஓவியங்களும் உள்ளன .
அருகில் குருகுலாவ என்ற இடமும் இருக்கிறது. இது, ராமர் அனுப்பிய குரு , புரோகிதர், பிராமணர்கள் தங்கி குருகுலம் நடத்திய இடம் ஆகும் .
Xxxx
112. சஞ்சீவி மலையின் ஐந்து துண்டுகள்

ராமாயண ஸ்தலங்கள் 52–ல் மூலிகை மலையான சஞ்சீவி மலையின் ஐந்து துண்டுகள் விழுந்த 5 இடங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இத்துடன் வில்லூண்டி தீர்த்தம், கன்னியா வெந்நீர் ஊற்றுகள் ஆகியவற்றையும் சேர்த்தால் 7 இடங்களுக்கு கணக்கு கிடைத்து விடும் . அவைகளையும் சுருக்கமாகக் காண்போம்..
ராமனும் ராவணனும் கடும் போரிட்டனர் . அதில் லெட்சுமணன் மூர்ச்சை அடைந்தவுடன் அவனுக்கு மரணம் சம்பவிக்காமல் இருக்க சஞ்சீவினி என்ற மூலிகை தேவைப்பட்டது.ஆயுர்வேத சிகிச்சையை நன்கு அறிந்த அனுமன், அந்த மூலிகைகக்காக இமய மலைக்குச் சென்றான். குறிப்பிட்ட மூலிகையைக் கண்டு பிடிக்க அவகாசம் இல்லை; இது URGENT MATTER அர்ஜென்ட் மேட்டர்; பெரிய எமர்ஜென்சி EMERGENCY என்பதால் மலையையே தூக்கிக்கொண்டு ஆம்புலன்ஸ் AMBULANCE வேகத்தில் பறந்து வந்தான். அப்பொழுது ஐந்து இடங்களில் அதன் துண்டுகள் விழுந்தன. அவையாவன :– தொளு கண்ட (குருநாகல ), ரீதிகல , ருமசால (ராம சைலம் )மலை , கச்சத் தீவு, தள்ளாடி (மன்னார் )
There are 5 Sanjeevani Mountains in Sri Lanka namely, Dolukanda (Kurunegala) / Ritigala Nature Reserve (Habarana) / Rumassala Mountain (Galle) / Kachchativu island (Jaffna) / Thalladi (Mannar)
Xxxx
113. இரண்டு ஊற்றுகள்

யாழ்ப்பாணத்தில் உள்ள வில்லூண்டி தீர்த்தம் இராமாயண ஸ்தலங்களில் ஒன்றாகும் ராமேஸ்வரம்- தங்கச்சி மடம் அருகில் கடலுக்கு நடுவில் உள்ள தூய நீர் வில்லூன்றித் தீர்த்தம் போலவே இதுவும் ஒரு அதிசய ஊற்று. யாழ்ப்பாண நகரின் மத்தியில் உள்ளது .. ராமர் படையின் தாகத் தைத் தீர்ப்பதற்காக ராமர் தனது வில்லினால் எய்த அம்பில் பொங்கிய ஊற்று இது. இப்போது 100 x 100 அடி குளமாக இருக்கிறது. பூமியிலுள்ள ஊற்றுகளில் இருந்து நீர் சுரக்கிறது
கன்னியா நீர் ஊற்றுகள்
நான் செப்டம்பர் மாதம் (2023) இலங்கை சென்றபோது 100 ரூபாய் கொடுத்து ஆர்வத்தோடு டிக்கெட் வாங்கினேன். அதில் உண்மையை மறைத்து , ராமர் பெயரை அடியோடு மறைத்து இது அனுராதபுர காலத்திலிருந்து இருந்துவரும் புத்த மத தலம் என்று அடித்த டிக்கெட்டைக் கொடுத்தனர். இது தொல்லியல் துறையின் சார்பில் அச்சிடப் பட்டுள்ளது.
இங்கு 7 ஊற்றுக்கள் இருக்கின்றன . இதுவும் ராமபிரானால் உண்டாக்கப்பட்டது என்பது ஐதீகம். அருகிலுள்ள இந்துக் கோவிலை சர்ச்சை- வழக்கு காரணமாக மூடி வைத்துள்ளனர்
இந்த வெந்நீர் ஊற்றுகளில் வெவ்வேறு வெப்ப நிலையில் நீர் வருவது ஒரு அதிசயம்தான் .
இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை இப்படி அதிசய ஊற்றுகள் இருக்கின்றன. அத்தனையும் இறைவன் சம்பந்தப்பட்டதே. ஆகையால் கன்னியா வெந்நீர் ஊற்றுகளும் ராம பகவானுடன் தொடர்புடையன என்று சொல்லுவதில் பொருள் உண்டு 107 டிகிரி c முதல் 86 டிகிரி c வரை வெப்பம் இருப்பதும் அந்த நீரில் நோய் தீர்க்கும் ரசாயன உப்புக்கள் இருப்பதும் ஆராய்சசியில் தெரிய வந்துள்ளது. நான் சென்ற போது ஆண்களும் பெண்களும் குளித்துக் கொண்டிருந்தனர். வெளியே வரும் வழி நெடுகிலும் கடைகள். அங்கு பல மூலிகைகளும் விற்கப்பட்டன.
Xxxxx
யாழ்ப்பாணம் முதல் கண்டி /கதிர்காமம் வரை ராமர் பெயர் கொடி கட்டிப் பறக்கிறது . மன்னார் அருகில் ராமர் அமைத்த ராமர் சேது பாலமும் இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது அதுவும் 52 புனித இடங்களில் ஒன்று .
114. ராம சேது (சிங்களத் தீவினுக்கோர் பாலம்)
இதுவும் 52 புனித ஸ்தலங்களில் ஒன்று.
ராமர் கட்டிய பாலத்தை நாஸா NASA விண்வெளி புகைப்படங்களும் உறுதி செய்கின்றன . இதை மக்கள் பயன்படுத்தும், இந்தியா- இலங்கை கடல் பாலமாக மாற்றவேண்டும் INDIA- SRI LANKA SEA BRIDGE . பாரதியார் சொன்ன ஆரூடங்களில் இன்னும் இரண்டு பலிதமாகவில்லை.
சேதம் இல்லாத ஹிந்துஸ்தானம் என்று பாடினார் பாரதி. ஆகையால் பங்களா தேஷ், பாகிஸ்தான் என்ற எல்லைகள் மறைந்து அகண்ட பாரதம் உருவாவது சத்தியமான உண்மை.
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
என்று பாடியதால் பாலம் அமைந்ததே தீரும் என்று 11 September 2015 கட்டுரையில் இதே பிளாக் BLOG கில் எழுதியுள்ளேன்
இந்தியா- இலங்கை ரயில்வே மற்றும் சாலைப் பாலம் அமைந்தே தீரும் .
மேலும் பல ராமாயண ஸ்தலங்களை அடுத்ததாகக் காண்போம்
தொடரும்…………………………………
Tags – இலங்கை, ராமாயண , தலங்கள் , 52, பகுதி 48, புனித ஆலயங்கள் , விபீஷணன், கோவில் சிங்களத் தீவினுக்கோர் பாலம்