
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,674
Date uploaded in London – – 5 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
சம்ஸ்கிருத மொழியின் பெருமை! – 1
ச.நாகராஜன்
பாரதீய பண்பாட்டிற்கான தேசீய மொழி சம்ஸ்கிருதம். அதில் இல்லாதது எதிலும் இல்லை.
கோடிக் கணக்கான நூல்களைக் கொண்ட ஞானப் பொக்கிஷம் சம்ஸ்கிருதம்.
உலகில் உள்ள மொழிகளில் மிக மிக அதிகமான சொற்களைக் கொண்ட ஒரே மொழி சம்ஸ்கிருதமே.
102078 கோடியே 50 லட்சம் வார்த்தைகள் சம்ஸ்கிருத மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றை கணினிப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்த ஆரம்பித்தால் இன்னும் ஒரு நூற்றாண்டிற்கு இவற்றைப் பயன்படுத்த முடியும்.
மற்ற மொழிகளை விட குறைந்த வார்த்தைகளை வைத்து ஒரு வாக்கியத்தை அமைத்து, சொல்ல வந்த கருத்தை இந்த மொழியில் மட்டுமே சொல்ல முடியும்.
அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகமே சம்ஸ்கிருதத்திற்காக உள்ளது.
ஃபோர்பஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையின் படி (Forbes July 1987) சம்ஸ்கிருதமே கணினிப் பயன்பாட்டிற்கு உகந்த மொழியாகும்.
திருத்தப்பட்ட செம்மொழி சம்ஸ்கிருதம். நாஸா சம்ஸ்கிருதத்தைப் பற்றிக் கூறுகையில், “Only unambigouous spoken language on the planet” – நேரடியாகப் பொருள் விளக்கம் தரும்படி பூமியில் பேசப்படும் ஒரே மொழி சம்ஸ்கிருதமே – என்று கூறுகிறது.
உத்தரகண்ட் மாநிலத்தில் சம்ஸ்கிருதமே அதிகாரபூர்வமான அங்கீகரிக்கப்பட்ட மொழியாகத் திகழ்கிறது.
சம்ஸ்கிருத மொழியின் அடிப்படையில் ஆறாவது மற்றும் ஏழாவது தலைமுறை சூப்பர் கணினிகள் அமெரிக்காவில் உருவாக்கப்படுவதாக நாஸா அறிவித்துள்ளது.
ஆறாவது தலைமுறை கணினி உருவாக்கத்திற்கான இலக்கு 2025ஆம் ஆண்டு என்றும், ஏழாவது தலைமுறை கணினி உருவாக்கத்திற்கான இலக்கு 2034 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு இலக்கையும் எட்டிய நிலையில் உலகெங்கும் சம்ஸ்கிருதம் கற்க வேண்டும் என்ற ஆர்வம் பெருமளவில் உருவாகும்.
மிக மேம்பட்ட விஞ்ஞான நூல்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. இவை வேதங்கள், உபநிடதங்கள், ஸ்ருதி, ஸ்மிருதி, புராணங்கள், மஹாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட நூல்களாகும். நாஸா 60000 சுவடிகளைக் கொண்டுள்ளது. (Reference : Russian State University, NASA etc. NASA posseses 60,000 palm leaf manuscripts, which they are studying).
சம்ஸ்கிருதம் கற்பதால் மூளைத் திறன் கூடுகிறது. இதைக் கற்கும் மாணவர்கள் கணிதம், விஞ்ஞானம் உள்ளிட்ட பாடங்களில் அதிக மதிப்பெண்களைப் பெறுகின்றனர்.
லண்டனில் உள்ள ஜேம்ஸ் ஜூனியர் ஸ்கூல், சம்ஸ்கிருதம் கற்பதை கட்டாயமாக ஆக்கியுள்ளது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் முதல் இடத்தை ஆண்டுதோறும் பிடிக்கின்றனர்.
இதைப் பின்பற்றி அயர்லாந்திலும் இப்போது சம்ஸ்கிருதம் பயில்விக்கப்பட்டு வருகிறது.
சம்ஸ்கிருதத்தைப் பேசும் போதும் படிக்கும் போதும் உடலில் உள்ள ஆற்றல் புள்ளிகள் செயல்படுத்தப்படுகிறது. இதனால் மன அழுத்தம் குறைகிறது. வியாதிகள் வருவது தடுக்கப்படுகிறது. ஆற்றல் கூடுகிறது. மனம் சாந்த நிலையை அடைகிறது.
நாக்கில் உள்ள அனைத்து நரம்புகளையும் பயன்படுத்த வைப்பது சம்ஸ்கிருத மொழி ஒன்றே தான். அதைப் பேசும் போது ஆற்றல் புள்ளிகள் ஊக்குவிக்கப்படவே இரத்த ஓட்டம் சீர்படுகிறது.
இரத்த அழுத்தம், டயபடீஸ், கொலஸ்ட்ரால் மிகுதி உள்ளிட்டவை கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன, (ஆதாரம் அமெரிக்கன் ஹிந்து யுனிவர்ஸ்டியின் தொடர் ஆராய்ச்சி முடிவுகள்)
இது வெறும் மொழி மட்டுமல்ல. மனித சிந்தனைக்கும் ஆன்மாவுக்கும் பாலமாக செயல் படும் ஒன்று. பௌதிகத்திற்கும் உளவியலுக்கும்; பரு உடலுக்கும் நுண்ணுடலுக்கும்; கலைக்கும் பண்பாட்டிற்கும்; இயற்கைக்கும் அதைப் படைத்தவனுக்கும்; படைக்கப்பட்ட அனைத்திற்கும் அதைப் படைத்தவனுக்கும் இடையிலான ஒரு மொழியாகத் திகழ்கிறது.
உலகின் தலையான மதங்களான ஹிந்து மதம், புத்த மதம், ஜைன மதம் ஆகியவற்றிற்கான அறிவு சால் மொழியாக சம்ஸ்கிருதம் விளங்குகிறது.
(புத்த மதத்தில் பாலி மொழியுடன் கூட; ஜைன மதத்தில் ப்ராக்ருத மொழியுடன் கூட)
உலகின் நாட்காட்டியில் (காலண்டரில்) சிறந்து விளங்குவது
(சம்ஸ்கிருதத்தில் அமைக்கப்பட்டுள்ள) ஹிந்து நாட்காட்டியே. ஏனெனில் இது நிலவியலின் படி சூரிய மண்டல இயக்கத்தை ஒட்டி அமைந்துள்ளது. (ஆதாரம் ஜெர்மன் ஸ்டேட் யுனிவர்ஸிடி).
ஹிந்து ஶ்ரீ சக்ர அமைப்பை ஒட்டி பாதுகாப்பு அமைப்பு ஒன்றை இங்கிலாந்து இப்போது ஆராய்ச்சி செய்து வருகிறது.
சான்ஸ்கிரிட் எஃபெக்ட் – SANSKRIT EFFECT – இந்த வார்த்தை நியூரோ விஞ்ஞானியான ஜேம்ஸ் ஹார்ட்ஸெல் என்பவரால் (NEURO-SCIENTIST JAMES HARTZELL) உருவாக்கப்பட்டது. வேத மந்திரங்களை ஓதி மனனம் செய்வதன் மூலம் மூளையில், மூளைச் செயல்பாட்டில் நீண்ட கால மற்றும் குறுகிய கால நினைவுத்திறனுக்கான பகுதிகள் பெரிதாக ஆகின்றன. இதுவே சான்ஸ்கிரிட் எஃபெக்ட்.
இன்னும் இது போன்ற ஏராளமாம சிறப்புகள் சம்ஸ்கிருத மொழியில் உள்ளன.