
RAVANA CAVES AT ELLA IN SRI LANKA
Post No. 12,675
Date uploaded in London – – – 5 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxxx
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 49
இலங்கையிலுள்ள 52 ராமாயண ஸ்தலங்களில் ராவணன் தொடர்பான இடங்களைக் காண்போம் .
நுவர எலியா காயத்ரி பீடம்
நுவரெலியா நகரில் சீதைஅம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக தரிசிக்க வேண்டிய இரண்டு இடங்கள், காயத்ரி தேவி மந்திரும் ஸ்ரீலங்காதீஸ்வரர் சிவன் கோவிலும் ஆகும். முருகேசு சித்தர் என்பவரின் சமாதியும் இங்கு உளது. அவர் ஜெர்மனி நாட்டிற்குக் கடத்திவரப்பட்ட நர்மதை நதிக்கரை பாணலிங்கங்களைக் கொண்டுவந்து இங்கே ஸ்தாபித்தார் . அவர் 2007-ம் ஆண்டில் சமாதி அடைந்தார். இந்தக் கோவில்கள் 1970 முதல் இருக்கின்றன. ராவணன் மகன் மேகநாதன், சிவனை வழிபட்ட இடம் இந்தப் பகுதி என்பது பக்தர்களின் நம்பிக்கை.


MANDODARI PALACE AND SITA BATHING GHAT STEPS
115.சீதா தேவி சிறை இருந்த அசோக வனம்
நுவரெலியாவில் சீதை அம்மன் கோவிலை முன்னொரு கட்டுரையில் தரிசித்தோம். அதன் அருகிலேயே தாவரவியல் பூங்கா இருக்கிறது ; இதுதான் ராமாயண காலத்தில் அசோக வனம் ( Ashoka Vatika Converted as a Botanic Gardens) இதன் பெயர் Hakgala Botanical Garden ஹக்கல தாவரவியல் பூங்கா; இங்கு 10,000 வகைத் தாவரங்கள் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை ஆர்க்கிட் மலர்களும் ORCHID FLOWERS ரோஜா மலர் வகைகளும் ஆகும் .
xxx
116.சீதா கொடுவா என்றால் சீதையின் கோட்டை. என்று பொருள்; இங்கு மண்டோதரி அரண்மனை இருந்ததாகவும் சீதையும் இங்கு சில காலம் சிறை வைக்கப்பட்டதாகவும் செவி வழிச் ‘செய்திகள் கூறுகின்றன. இது அடர்ந்த காட்டுக்குள் குருளுபோதா கிராமத்தில் இருக்கிறது. (Sita Kotuwa’ is situated in ‘Gurulupotha’ village in thick forest of ‘Uwa’ region of Sri Lanka. ‘Kotuwa’ means fort.) அடர்ந்த காட்டுக்குள் ஒன்றரை கி.மீ நடந்தால் இந்த இடத்தை அடையலாம் . அங்கே பெரிய, உயரமான கருங்கல் படிகளைக் காணலாம். சீதா தேவி தினமும் குளிப்பதற்கு இந்தப் படிகள் வழியாகத்தான் போவாளாம் . அடர்ந்த காட்டுக்குள் இப்படிப் படிகள் இருப்பதைப் பார்த்தால் இங்கே ஒரு பெரிய கட்டிடம் இருந்திருக்க வேண்டும் என்பதை ஊகிக்கலாம்.
அரண்மனையின் உடைந்த தூண்களும், கற்களும் இருக்கின்றன .Gurulupotha’, there was a big palace of Ravana’s queen Maharani Mandodari.
ராவணன் வைத்திருந்த 18 விமானங்கள்
பரத்வாஜ முனிவர் எழுதிய வைமானிக சாஸ்திரம் இப்பொழுதும் ஸம்ஸ்க்ருதத்தில் கிடைக்கிறது . இதன் அடிப்படையில் ராவணன், 18 வகை விமானங்களை வைத்திருந்தான். அவைகளில் குபேரனிடமிருந்து பறித்த புஷ்பக விமானம் ஒன்று. அவனுடைய விமானங்கள் இறங்குவதற்காக ஆறு இடங்களில் விமான தளங்களை அமைத்திருந்தான் ; அவையாவன Veragantota வரகந்தோட , Thodupol Kanda தொடுபோல கண்ட , Ussangoda உஸ்ஸன்கோட்டை , Variyapola வரியபோல , Vatariyapolaவாதாரியபோல and Gurulupotha குருளுமபோத என்ற ஆறு விமான நிலையங்கள் ஆகும்.
xxx




SITA DEVI FIRE WALKING PLACE, BIG KEY TO SITA TEMPLE AT ELLA
117.சீதா தேவி அக்கினி பரீட்சை
சீதா தேவி தனது தூய்மையை நிரூபிக்க அக்னி பரீட்சை நடந்த இடம் ஒன்றும் இலங்கையில் உள்ளது . அங்கு இப்பொழுது புத்த விஹாரம் இருக்கிறது ( Buddhist temple built at the place where Sitamata went through Agni-pariksha, is named as ‘Divirumpola Rajmahaviharay’). அந்த விஹாரையின் பெயர் திவிரும்போல ராஜ மஹா விஹாரை. அங்கு நிறைய புத்தர் சிலைகளும் சுவரில் ராமாயண ஓவியங்களும் உள்ளன. அவைகளைப் பார்க்க கட்டணம் உண்டு. அங்குள்ள புத்த பிட்சு ராமாயணக் கதைகளையும் ஆங்கிலத்தில் சொல்கிறார்
சின்மயா மிஷன் இலங்கையில் ராமாயணம் என்ற புஸ்தகத்தை வெளியிட்டுள்ளது. அதில் நாம் அறியாத பல தகவல்கள் உள்ளன ( book published by Chinmaya Mission titled ‘Ramayana in Lanka’). இலங்கையிலுள்ள பெளத்தர்கள் Extremists தீவிரவாதிகள்; ஆதலால் ராமாயணத்தின் சுவடுகளை மறைத்துவிட்டனர் . இந்துக் கோவில்களுக்கு அருகில் புத்த விஹாரங்களைக் கட்டி, பழைய கோவில்களை இடம் தெரியாமல் செய்துவிட்டனர் .
அருகில் அஸ்வத்தத மரமும் சிறிய அறையும் உளது. அந்த இடத்தில் உள்ள சீதா தேவி சிலைகளையும் ஓவியங்களையும் சத்குரு அஞ்சலி காட்கில் பார்த்து வந்து பல தகவல்களைத் தெரிவித்தார் .சீதா தேவி அக்கினிக்குள் நுழையும் பெரிய உருவம் அங்கே இருக்கிறது.
சீதா தேவி அக்கினி பரீட்சை நடந்த சிறிய கோவில் அறைக்கு மிகப்பெரிய பூட்டும், மிகப்பெரிய சாவியும் உள்ளன
சீதா தேவி தீயில் புகுந்ததை நினைவு கூறும் வகையில் இன்று இந்தியா முழுவதும், இலங்கை முழுவதும், பூக்குழி இறங்கல், தீ மிதி விழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த தீ மிதி வைபவத்தைத் துவக்கிவைத்தவள் சீதா தேவி. 5000 ஆண்டுகளாக இன்றும் தமிழர்கள் இதைச் செய்து வருகின்றனர்.
118. ராவணன் குகை, ராவணன் எல்லா / நீர்வீழ்ச்சி
எல்லா (Ella) என்னும் சிற்றூர் நுவர எலியாவிலிருந்து ( ‘Nuwara Eliya’) 51 கி.மீ. தொலைவில் மலைப் பிராந்தியத்தில் இருக்கிறது. இந்த ஊரை ராவணன் எல்லா என்றும் கூறுவார்கள். ஊரிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் நீர்வீழ்ச்சி (எல்லா ) இருக்கிறது. அருகிலேயே ராவணன் குகையம் உளது
ராவணன் குகையின் நுழை வாயிலிலேயே பாறை வடிவமே கோர ராட்சத உருவத்தில் இருக்கிறது. குகைக்குள் சென்றாலும் அதே போல இராக்கத முகம் கொண்ட வடிவில் பாறைகள் இருக்கின்றன. குகைக்குள் சுரங்கப் பாதைகளும் உள்ளன. அவை வண்டிகள் செல்லும் அளவுக்குப் பெரிய சுரங்கப்பாதைகள். தமிழில் மயில்ராவணன் கோட்டை என்ற சொல் வழக்கு உண்டு. அதில் சென்றவர்கள் வழி தெரியாமல் திணறி அகப்பட்டுக் கொள்வார்களாம் . இதே போல கிரேக்க நாட்டிலும் இருந்தன அவைகளை மேஸ் MAZE என்பர்
ராவவன் கோட்டைக்குள் 200 மீட்டர் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. அரசாங்கமே பெரிய ராட்சத உருவத்தைக் காட்டி பெரிய பாறையையும் வழியை அடைக்கும்படி வைத்ததுள்ளது . ஊர்மக்கள் சொல்லும் காரணம் உள்ளே விஷ ஜந்துக்களும் வௌவால்களும் வசிக்கின்றன என்பதாகும். சாதாரண மனிதர்கள் சென்றாலே மூச்சுத் திணறலும், வாந்தியும் ஏற்படும் ஒரு சூழ்நிலை.
ராவணன் பல உரு எடுக்க வல்லவன், மாயா ரூபம் உண்டாக்கி ஜாலங்கள் செய்பவன் என்று வால்மீகி எழுதியது உண்மையே என்று இந்த குகைங்கள் நிரூபிக்கின்றன.


RAVANA ELLA (PICTURES ARE FROM JANA JAGRUTI WEBSITE; THANKS)
மேலும் காண்போம் .
TO BE CONTINUED……………………………..
TAGS- RAVANA CAVES, RAVANA ELLA, SITA ASOKA VANA, PART 49, SRI LANKAN TEMPLES, FIRE WALKING BY SITA, AGNI PAREEKSHA, ராவணன் குகை, ராவணன் எல்லா, நீர்வீழ்ச்சி