ராவணன் விமான நிலையம்: இலங்கைத் தீவின் 108 புகழ்பெற்ற இந்து ஆலயங்கள்- Part 50 (Post.12,678)

Ramayana Lanka

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,678

Date uploaded in London – –  –  6 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 50

119.ராவணன் விமான நிலையம்

ராவணன் 6 விமான தளங்களை வைத்திருந்தான்.அவைகளில் ஒன்று வேரகந்தோட Weragantota ; சிங்கள மொழியில் விமானம் இறங்கும் இடம் என்று பொருள். ராவணனுடைய விமானம் மயில் உருவத்தில் இருந்ததாக வால்மீகி எழுதியுள்ளார். சிங்கள மொழியிலும் ராவணன் விமானத்தை பறக்கும் மயில் Dhandu Monara”  என்றுதான் அழைக்கிறார்கள்  5000  ஆண்டுகளுக்கு முன்னர் ராமாயணம் நடந்திருந்தாலும் இன்று கூடச் செவி வழிச் செய்திகளும் கதைகளும் மாறாமல் உள்ளன. சங்க இலக்கியத்தில் உள்ள 2 ராமாயாணச் செய்திகளும் வால்மீகியிலோ , கம்பனிலோ இல்லை என்பதைப் பார்க்கையில் இலங்கையில் நமக்குக் கிடைக்கும்  செய்திகளையும் சேர்த்து பெரிய ராமாயணம் இயற்றலாம்.

ராவணனின் விமான தளங்கள் / நிலையங்கள்

பெயர்களைப் பார்த்தாலே  அவைகள் விமானம் தொடர்புடையவை என்பது சொல்லாமலே விளங்கும்

Thotupolakanda (“Mountain Port” in Sinhala) at Horton plains மலை வழி / துறை

Weragantota (“Place of Aircraft” landing in Sinhala) in Mahiyangana விமான நிலையம்

Ussangoda (“Area of Lift” in Sinhala) in the Southern coast மேலே புறப்படும் இடம்

Wariapola (“Aircraft Port” in Sinhala) in Matale and Kurunagala. விமான இருப்பிடம்

Dolukanda, part of Sanjeevini hill fell here.

120.நாகத் தீவுக்கு பெயர் காரணம்

இலங்கையை நாகர் நாடு  Nagadipa என்று மணிமேகலை, மஹாவம்சம் முதலிய நூல்கள் குறிப்பிடுகின்றன . அனுமான்  இலங்கைக்குப் பறந்து வருகையில் 3 தடைகளை சந்தித்தான். அவர்களில் ஒருவரான சுரஸா தேவி, நாகர் இன பெண் என்பதையும் நினைவிற் கொள்ளவேண்டும். இதனால்தான் மணிமேகலை முதலிய தமிழ்க் காப்பியங்கள் இலங்கையை நாகர் தீவு என்று அழைத்தது. பிற்கால சீன யாத்ரீகன் கூட நாகர் இனப் பெண்களின் கொடூரச் செயல்களை குறிப்பிடுகிறான் .

121.கொண்ட கலை Kondagala, ; சீதையின் முடி

Ussangoda உசன கொட எனும் இடத்தில் கரிய மணல் காணப்படுவதற்கு அனுமன் இலங்கையை எரித்தபோது ஏற்பட்ட கரி என்றும் மக்கள் பகர்வர். 5000 ஆண்டுகள் கழிந்தாலும் சில இடங்களாவது ராமாயணத் தடயங்களைக் காப்பாற்றி வருகிறது. அதைவிட மக்களின் வாய்மொழி வரலாறு நமக்குச் சான்றாகத் திகழ்கிறது .

இதே வட்டாரத்தில்  Kondagala கொண்ட கல என்று ஒரு ஊர் இருக்கிறது. விமான வேகத்தில் சீதா தேவியின் தலைமுடி கலைந்து பறந்ததை  மக்கள் பார்த்துச் சொன்ன இடம் இது. கொண்டை கலைந்தது என்பதன் மரூஉ கொண்டகல ஆகும் .

122.சீதா கோலி – அரிசி உருண்டை

இலங்கையில் உள்ள ஒவ்வொரு கல்லையும் மண்ணையும் பெளத்த மதத்தைச் சேர்ந்த சிங்கள மக்களே ராமாயணத்துடன் தொடர்பு படுத்திப் பேசுகின்றனர். காலத்தினால் அழியாத காவியம் அன்றோ ராமாயணம். இந்த வட்டாரத்தில் அரிசிச் சோறு சிதறினால் போல் காணப்படுகிறது. இதை சீதா கோலி என்று கிராம மக்கள் குறிப்பிடுகிறார்கள். இராவணன் கொடுத்த  அரிசிச் சோற்றை சீதை தூக்கி எறிந்ததன் மிச்சம் மீதி என்பது கிராம மக்களின் நம்பிக்கை. இந்த அரிசி மணியை பெட்டிக்குள் வைத்திருந்தால் நல்ல அறுவடை கிடைக்கும்  என்று விவசாயிகளும், குழந்தைகளின் வயிற்று நோயைத் தீர்க்க இதைக் கொடுக்கவேண்டும் என்று தாய்மார்களும்  நம்புகின்றனர் .

123.சீதையின் அக்கினி பரீட்சை , ராவணன் கோட்டை

சீதையின் அக்கினி பரீட்சை  பற்றி முந்தைய கட்டுரையில் எழுதிவிட்டேன். அந்த இடத்தின் பெயரே சீதை செய்த சத்தியப் பிரமாணதின் பேரில் உள்ளது திவு ரும்போல என்ற இடத்தின் பெயருக்கு

Divurumpola is the place where it happened and the name itself means “the Place of Oath”. சபதம்/ சத்தியம் செய்த இடம் என்று பொருள்.

அருகில் ராவண கொட Ravanagoda என்ற இடம் இருக்கிறது , இங்கு குகைகளும் சுரங்கங்களும்  அதிகம் அருகில் ஸ்த்ரீ புரம் Istripura இருக்கிறது Istripura means “Area of Women” in Sinhala. ராவணன் சீதையையும் மற்ற பெண்களையும் வைத்திருந்த இடம் இது. இவை அனைத்தும் காலகால மாகச் சொல்லப்பட்டுவரும் விஷயங்கள். இன்று நேற்று இட்டுக்கட்டப்பட்ட கதைகள் அல்ல.

124.கொண்ட கட்டு கல Konda Kattu Gala

கொண்ட கட்டு கல என்பது பின்னல் போல பல குகைகள் இருக்கும் இடம் ராவணனின்  ஆட்சிக்குட்பட்ட அத்தனை இடங்களையும் இணைக்கும்

வழித் தடங்கள் இவை. ஏனெனில் இவை யற்கையாக அமைந்த குகைகள் அல்ல, மனிதனால் உருவாக்கப்பட்டவை என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவில் உள்ள எல்லோரா, அஜந்தா, எலிபெண்டா குகைகளைப் பார்க்கையில் இதில் வியப்பு ஒன்றும் இல்லை. கலுதர  Kalutara was once where King Ravana’s palace and a tunnel existed என்னும் இடத்தில் இப்போது புத்தர் கோவில் இருக்கிறது அங்குதான் குகை வாயில், ராவணன் கோட்டை/ அரண்மனை இருந்திருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சி யாளரின் முடிவு.

125.பாதாள லோகம் வரை ராவணன் சுரங்கம்

மனிதர்களால் உண்டாக்கப்பட்ட குகை வாசல்கள் இருக்கும் இடங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

வெலிமட  Welimada,,பண்டாரவெல Bandarawela, சேனபிடிய Senapitiya (Halagal), ராம்போட  Ramboda, லபுக்கெல்லா Labookelle, வரியப்போல Wariyapola/Matale, சீதா கொடுவா (Sitakotuwa/Hasalaka).

மயில் ராவணன் கோட்டை  கதை தமிழில் மிகவும் பிரசித்தம் அஹிராவண் என்பவன் ராவணவனுடை ய  சகோதரன் . அவனைத் தமிழில் கொச்சை மொழியில் மயில்ராவணன் என்பார்கள் . அவன் கோட்டைக்குள் புகுந்தவர்கள் வெளியே வரமுடியாது. ஏனெனில் எல்லாம் சிக்கலான குகை (MAZE) வழிகள் . அவனைப் பார்க்க ராவணன் அந்தக்கோட்டடைக்குள் செல்லும் வாசலும் உளது . மஹா பலி பாதாள லோகத்துக்கு அனுப்பப்பட்டார் என்று வாமனாவதாரத்தில் படிக்கும்போது அவர் தொலை தூர தீவுகளுக்கு அனுப்பப்பட்டார் என்றே பொருள். ஆகையால் மயில்ராவணன் லோகமும் பிற தீவுகளுக்குச் செல்லும் ரகசிய பாதைகள் ஆகும். ஏனெனில் சில சுரங்க வாசல்கள் கடலுக்கு அருகிலுள்ள மலைகளில் இருக்கினறன. இதனால்தான் ராவணன் முதலிய அரக்கர்களை தந்திரம் மிக்கவர்கள், மாயா ஜாலக்காரர்கள் என்று வருணிக்கின்றனர் . அதாவது ஒளிவு மறைவுகளும் நெளிவு சுழிவுகளும் நிறைந்த நேர்மையற்ற பாதை அரக்கர் பாதை .

To be continued……………………………………..

*****************************

Tags– Ramayana Lanka, Tourist places,  Part 49, இலங்கை, 108 புகழ்பெற்ற , இந்து ஆலயங்கள், ராவணன் விமான நிலையம்

Leave a comment

Leave a comment