லட்சுமணன் கோவில்:இலங்கைத் தீவின்108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- 51 (Final Part)Post.12,682

RAVANA PRAYING TO SHIVA IN TRINCOMALEE

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,682

Date uploaded in London – –  –  7 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இலங்கைத் தீவின் 108 புகழ்பெற்ற இந்து ஆலயங்கள்- 51(Final Part)

126. யுத்த கணவ ராம – ராவண போர்க்களம்

ராமனும் ராவவணனும் சண்டையிட்ட இடத்தை யுத்த கணவ Yudhaganawa என்று சிங்களத்தில் சொல்கிறார்கள் . இது வஸ்கமுவ , Wasgamuwa என்னும் ஊரில் இருக்கிறது . இங்குதான் ராவணன் மகன் மேகநாதன் பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகித்ததால் லெட்சுமணன் நினைவிழந்து கீழே விழுந்தான்; உடனே ஜாம்பவானின்  ஆலோசனையின் பேரில் அனுமன் இமய மலைக்குச் சென்று ஸஞ்சீவினி பர்வதத்தைக் கொண்டுவந்தான். இதை மெய்ப்பிக்கும் வகையில் இமயமலை ஆல்பைன் வகைத் Alpine flowers தாவரங்கள் இங்கு வளர்கின்றன. இவை ஐஸ்கட்டி snowy regions உண்டாகும் மலை உயரத்தில் மட்டும் வளரக்கூடியவை 

தமிழர்களின் மிகப்பெரிய முருகன் தலமான கதிர்காமத்தையும் கூட ராமாயணத்துடன் தொடர்பு படுத்துவர். ராமனின் படைகளுக்கு உதவுமாறு கதிர்காம முருகனை இறைவன் பணித்தாராம்.

127.ராமன் போட்ட அணுகுண்டு Dunuvila lake தனு விலா ஏரி

மஹாபாரதத்தில் கர்ணன், ராமாயணத்தில் மேக நாதன், இறுதியில் ராமபிரான் போட்ட பிரம்மாஸ்திரங்கள், அணு ஆயத்தங்கள் NUCLEAR WEAPONS என்று 15 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டுரை எழுதினேன்.  இவை வெவ்வேறு சக்தி உடைய அணுகுண்டுகள். ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா 2 அணுகுண்டுகளை வீசி பல லட்சம் அப்பாவி  மக்களை  படுகொலை செய்ததை உலகம் அறியும். அந்த குண்டுகள் கொசுவுக்கு சமானம். இப்போது அமெரிக்கா , ரஷ்யாவிடமுள்ள அணு குண்டுகள் இமய மலைக்குச் சமம். இது போல எதிரிக்குத் தக்க அணு ஆயுதங்களையே ராமன், கர்ணன், மேகநாதன் முதலியோர் பிரயோகித்தனர் . ராமபிரான் போட்ட அணுகுண்டு தனுவிலா ஏரி  பகுதியிலிருந்து போடப்பட்டது  “Dhunu” means “arrow” and “Vila” means “Lake,”. தனு என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் வில்லினைக் குறிக்கும். எல்லா என்பது நீர்நிலை/ ஏரி ; அப்போது ராவணன் போரினை லக்கலா ( Laggala is derived from the Sinhala term “Elakke Gala“, which means Target Rock) என்ற இடத்திலிருந்து வழி நட த்தினான் . சிங்களம் என்பதில் பாதி சம்ஸ்க்ருதம் பாதி தமிழ் இருப்பதை மொழி அறிந்தோர் அறிவர். இங்கு இலக்கு என்பதே லக்கல. உண்மையில் அதுவும் லட்சியம் என்ற ஸம்ஸ்க்ருதச்  சொல்லில் இருந்து பிறந்ததே. ராவணன் அங்கிருந்தே ராமன் படைகளைக் குறிவைத்தானாம்.

பிரம்மாஸ்திரத்தினால் இறந்த ராவணனின்  சடலம் யஹங்கல (Yahangala) என்னும் இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. (meaning “Bed Rock” in Sinhala. This is situated along the Mahiyanganaya – Wasgamuwa road. King Ravana’s body was kept upon this rock so his countrymen could pay their last respects to their dear departed king). இந்தப் பாறையை தொலை தூரத்திலிருந்தும் காண முடியும் .

128.ராமன் பூஜித்த லிங்கங்கள்

ராவணன் 50% பிராமணன்; ஆகையால் அவனைக் கொன்றதால் பிரம்ம ஹத்தி பாவம் ராமனைப் பற்றிக்கொண்டது அதைப் போக்குவதற்கு அவன் 4 இடங்களில் சிவ லிங்கங்களை ஸ்தாபித்து பூஜித்தான். அவைகளில் ஒன்று உலகப் பிரசித்திபெற்ற ராமேஸ்வரம்  . ஏனைய மூன்றும் இலங்கையில் உள்ளன. அவை சிலாவம் அருகிலுள்ள மானா வாரிதிருக்கே தீஸ்வரம், திருகோணமலை . இவைகளை முந்தைய கட்டுரைகளில் விரிவாகப் பார்த்துவிட்டோம். மானாவாரி ராமலிங்கம் கோவில் முன்னேஸ்வரத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.. அத்தோடு ராமபிரான், முன்னேஸ்வரம் கோவிலிலும் வழிபட்டதாக ஐதீகம். .Chilaw, Manavari Temple is the first place where Lord Rama installed and prayed the Shivalinga. It is called as Ramalingam .

129.ராவணன் சிலை, திருகோணமலை

ராவணன் வெட்டு

திருகோணமலை கோவிலுக்கு வலது புறத்தில் ஒரு பெரிய பாறை வெட்டப்பட்டது போல, இரண்டு பகுதிகளாக நிற்கின்றன. இதை ராவணன் வெட்டு என்று அழைக்கிறார்கள் ; ராவணன் தன் வாளால் வெட்டியதால் பாறை பிளந்ததாக கதை. அருகில்  ராவணன் சிலையும் உள்ளது ; இந்தப் பகுதி சுமார் 300 அடி ஆழம்  உடையது; கடல் நீர் சுழற்சி காரணமாக அருகில் சென்றால் படகுகளையும் இழுப்பதாக  மீனவர் கூறுவர்  .

XXXXXX

அனுமன் கொண்டுவந்த சஞ்சீவி மலை 5 இடங்களில் விழுந்ததைக் கண்டோம். இதில் ஒரு இடத்தின் பெயர் தள்ளாடி. மலை யின் பாரம் தாங்காமல் அங்கு அனுமன் தள்ளாடியதால் இந்தப் பெயர் என்று சி.எஸ். நவரட்னம் 1964-ம் ஆண்டில் எழுதிய  புஸ்தகத்தில் A SHORT HISTORY OF HINDUISM IN CEYLON கூறுகிறார். அந்த இடம் மன்னார் அருகில் உள்ளது.

HANUMAN- NIKUMBHA FIGHT FROM WIKIPEDIA

130.லெட்சுமணன் கோவில்

சபரகமுவவில்  லட்சுமணன் வழிபாடு  நடப்பதாக சி.எஸ் நவரட்னம் தன்னுடைய ஆங்கில நூலில் குறிப்பிடுகிறார். இது பற்றிய விவரங்கள் இல்லை ஆனால் சிங்கள பெளத்தர்களும் லட்சுமணன் பெயரை வைத்துக் கொள்கின்றனர். மேலும் பல கோவில்கள் புத்தமதமாக்கப்பட்டுவிட்டன. இந்துக்கோவில்களை இடித்து பெளத்த விஹாரங்களை மன்னர்கள் கட்டியதை மஹாவம்சம் என்ற நூலே பெருமையாக எழுதியுள்ளது.

ராவணனின் சகோதரன் கும்பகர்ணன். அவனுடைய மகன் நிகும்பன். கொழும்பு அருகிலுள்ள ஊரின் இன்றைய பெயர் நீர்க்கொழும்பு. இதுவே நிகும்பன் என்ற பெயரின் மரூஉ என்று CONVERTED CHRISTIAN சைமன் காசி செட்டி SIMON CASIE CHETTY (1807-1860) எழுதியுள்ளார் .

COBRA HOODED CAVE

131. பாம்பின் படத்துடன் உள்ள குகை Cobra Hooded Cave

சிகிரியா என்னும் மலை, குகை ஓவியங்கள் முதலியன இந்தியாவின் அஜந்தா குகை ஓவியம் போல பிரசித்தமானவை . அங்கு பாம்பு படம்  விரித்தாடுவது போலத் தோன்றும் மலை முகடு Cobra Hooded Cave

இருக்கிறது . அங்குள்ள குகையிலும்  சீதாதேவி சிறை வைக்கப்பட்டதாக கர்ண பரம்பரைக் கதைகள் சொல்லப்படுகின்றன. Parumaka naguliya lene’.  பருமக நகுலீய லேனே என்று எழுதி வைத்துள்ளனர். இதில் நகுலிய the word ‘naguliya’ refers to Sita என்பது சீதா தேவியைக் குறிக்கும் சொல் ஆகும்.

இவை தவிர மேலும் பல மலைக்  குகைகளையும் ராமபிரான், ராவணன் ஆகியோருடன் தொடர்புபடுத்திப் பேசுவார்கள். இவைகளை ஆராய்வதைவிட இவை பற்றி பாமர மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை  நாம் போற்ற வேண்டும்; அது பக்தியையும் சுற்றுலாவையும் வளர்ப்பதோடு ராமாயணம் போதிக்கும் நற்குணங்களையும் தக்க வைக்கிறது . சொல்லாலும்  கல்லாலும்  வில்லாலும் புகழ் பெற்ற ராமாயணத்தை எல்லாரும் போற்றுவதில் வியப்பும் உண்டோ !!

இலங்கையில் புகழ்பெற்ற 108 இந்து ஆலயங்கள் கட்டுரைத் தொடர் இத்தோடு முடிவடைகிறது 4000 கோவில்களில்  ஒரு சிறு பகுதியையே கண்டோம். இதை எழுதி முடிக்கும் தருவாயிலே மேலும் பல கோவில்கள் உருவாகாகக்கூடும் .

பக்தி பெருகட்டும்; முக்தி கிடைக்கட்டும்

–சுபம்—

Tags- லட்சுமணன் கோவில், ராவணன் சிலை, ராவண போர்க்களம் , 108 Sri Lankan Temples, Final part, கட்டுரைத் தொகுப்பு நிறைவு, இலங்கைத் தீவின், 108 புகழ்பெற்ற, இந்து ஆலயங்கள்- 51,

Leave a comment

Leave a comment