
Post No. 12,689
Date uploaded in London – – – 8 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 13
பர்த்ருஹரி ஸ்லோகங்கள் 37,38, 39
பர்த்ருஹரியின் நீதி சதகப் பாடல்களைத் தொடர்ந்து காண்போம்
SLOKA 37 நீதி சதகம் 37
அரசனுக்கு ஆபத்து கெடு மதி உடையவரின் ஆலோசனை;
சந்யாசிக்கு ஆபத்து பந்தங்கள் (மடம், சொத்து, சுகம்);
புதல்வனுக்கு ஆபத்து அதிக செல்லம்;
அறிவாளிக்கு ஆபத்து தொடர்ந்து படியாமை;
குடும்பத்துக்கு ஆபத்து கெட்ட மகன்/ மகள்;
நற்பெயர்க்கும் மரியாதைக்கும் ஆபத்து கெட்டவர் சஹவாசம்;
புத்திக்கு ஆபத்து கள் குடித்தல்;
விவசாயத்துக்கு ஆபத்து நிலத்தைக் கவனியாமை/ பராமரிக்காது இருத்தல்;
அன்புக்கு ஆபத்து உறவினரை விட்டு வெளிநாடு செல்லல்;
வளத்துக்கு ஆபத்து விவேகமின்மை;
செல்வத்துக்கு ஆபத்து மெத்தனம்.– நீதி சதகம் 37
xxxx
மன்னன் மதியில்லா மந்திரியால் மா ஞானி
துன்னு சங்கத்தால் சுதன்- செல்வந் தன்னாலோர்
வேதியன் வேத மறப்பால் விளங்கு குலம்
தீதுசெறி மைந்தனால் சீரொ ழுக்கம் — நீதியிலாத்
தீ நட்பால் நாணம் தி யங்கு மது பானத்தால்
ஆன பயிர் மேற்பார்வையற்றதனால் -தூ நட்பு
தேசாந்தர வாழ் க்கை செய்வதால் மெய்க்காதல்
மா சாந்த மற்ற மனமதலா ல் – தேசார்
பெருஞ்செல்வம் நீதியிலாப் பேதமையால் நீர்மை
சுருங்குமென்று நீயறிந்து சொல்– 37
வள்ளுவன் ஈரடியில் ஏழுக்கும் மேலான சொற்களில் சொல்லுவதை பர்த்ருஹரி மிகச்சொற்பமான சொற்களில் சொல்கிறான்.
दौर्मन्त्र्यान्नृपतिर्विनश्यति यतिः सङ्गात्सुतो लालनात्
विप्रो नध्ययनात्कुलं कुतनयाच्छीलं खलोपासनात् ।
ह्रीर्मद्यादनवेक्षणादपि कृषिः स्नेहः प्रवासाश्रयान्
मैत्री चाप्रणयात्समृद्धिरनयात्त्यागप्रमादाद्धनम् ॥ 1.37 ॥
த்ரௌர் மந்த்ர்யான் ந்ருபதிர் விநஸ்யதி யதிஹி சங்காத் ஸுதோ லாலனாத்
விப்ரோ அனத்யயனாத் குலம் குதநயாத்சீலம் கலோபாசனாத்
ஹ்ரீர்மத்யாதனவேக்ஷணாதபி க்ருஷிஹி ஸ்நேஹக ப்ரவாஸாஸ்ரயான்
மைத்ரீ சா ப்ரணயாத் ஸம்ருத்ததிரனயா த்யாகப்ரமாதாத்தனம்
37. A king is ruined by evil counsel, a Sanyasi by attachment and a child by indulgence. A Brahmin is ruined by not studying (the Vedas), a family by a wicked son and good conduct by serving an evil-doer. Modesty is lost by wine, cultivated land by neglect, and affection by a sojourn abroad. Friendship is destroyed by lack of solicitude, abundance by mismanagement, and wealth by careless spending.
வள்ளுவன் சொல்லுவான்,
நிலத்தியல்பால் நீர்திரிந்தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்பதாகும் அறிவு – 451
நல்ல மழை நீர் எந்த நிலத்தில் விழுகிறதோ, அதன் குணத்தை அடையும்; அது போல நல்லவர்கள் யாருடன் சேருகிறார்களோ அந்த குணத்தையே அடைவர் என்பான் வள்ளுவன்
ஆக வள்ளுவனும் பர்த்ருஹரியும் உரைப்பது ஒரே உண்மையையே!
கள் குடிப்பது பற்றி இந்துக்கள் அறைவது போல வேறு எவரும் பறைந்தது இல்லை. வள்ளுவனுக்குத் தெரியும்- தமிழர்கள் குடியால் அழிவர் என்று; ஆகையால் பத்துக் குறள்களில் பிட்டுப் பிட்டு வைக்கிறான். பர்த்ருஹரி ஒரே வரியில் சொன்னான்.
கள்ளுக் குடிப்பவன் ஒளியிழப்பர் (921)- அதாவது முகத்தில் தேஜஸ் போய்விடும்; மதிப்பும் மரியாதையும் அழிந்து விடும்
‘நஞ்சுண்பார் கள்ளுண்பவர்’- 926; என்ன அழகான வாக்கியம்; வள்ளுவனுக்கு இணை வள்ளுவனே! அவர்கள் நடைப்பிணங்கள் என்றும் அதே குறளில் சாடுகிறார்.
xxxx
SLOKA 38
தானம் போகோ நாசஸ்திஸ்த்ரோ கதயோ பவந்தி வித்தஸ்ய
யோன ததாதி ந புங்தே தஸ்ய த்ருதீயா கதிர்பவதி – 38
दानं भोगो नाशस्तिस्रो
गतयो भवन्ति वित्तस्य ।
यो न ददाति न भुङ्क्ते
तस्य तृतीया गतिर्भवति ॥ 1.38 ॥
பொருள்
“ஒருவனுடைய செல்வம் மூன்று வழிகளில் கரைகிறது; தானம் கொடுப்பதாலோ, தனக்குப் பயன்படுத்துவதாலோ, இழப்பதாலோ போய்விடும். முதல் இரண்டு வழிகளைப் பயன்படுத்தாதோருக்கு மூன்றாவது வழி திறந்தே இருக்கிறது”.-38
சாணை கடைமணியுஞ் சத்திரந் தேய்க்கை க்கழுந்து
பேணு மதி சூரனும் பீடார் மதம் பொழிந்து
மா ணு முடல் வாடகரு வாரண முங்கவி கார்த்திகையிற்
காணுமணல் மேடு திகழ் காணாரும் பூரணையில்
வானிலவும் நல்வழியிலன் வாய்ந்த தருமந்தன்னில்
நாணுதலி ல் செல்வமும் நன்று– 38
38. Charity, enjoyment, and ruin are the three ways of wealth to go spent. He who neither gives nor enjoys has the third course (left for his wealth).
பணத் தழிவுக்கோரருஞ்சற் பாத்திரதானம்
கணக்கின்றி தானுகர்தல் காணா -திணக்கமற்ற
கள்ளன் எடுத்தலென்று காசினியிற் கண்டவழி
உள்ளபடி மூவா உ ணர்ந்தெவரும் கொள்ளுவதால்
முன்னிரண்டிற் செல்லவிடான் மூன்றாம் வழிய தனில்
அன்னதிழப்பான் அயர்ந்து –38
xxx
பழமொழி 400 என்னும் தமிழ் நூல் இதை இன்னும் அழகாகச் சொல்லும்.
நாய் கையில் கிடைத்த தேங்காய் போல என்று
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம் – தழங்கருவி
வேய்முற்றி முத்து திரும் வெற்ப அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம் –பழமொழி 216
பொருள்
“ஒலிக்கும் அருவிகளையுடைய மூங்கில் முதிர்ந்து முத்து உதிரும் மலை நாட்டையுடையவனே !
மற்றவர்க்கும் கொடுக்காமல் தானும் அனுபவிக்காமல் உள்ளவன் பெற்ற செல்வம் நாய் பெற்ற தேங்காய் போன்றதன்றோ!”
நாயிடம் தேங்காய் கிடைத்தால் அதைப் பயன் படுத்தாமல் உருட்டிக்கொண்டு இருக்கும்.மற்றவர்களையும் நெருங்க விடாது.
Xxx
SLOKA 39
மணிஹி சனோல்லீடஹ ஸமரவிஜயீ ஹேதிதலிதோ
மதக்ஷீணோ நாகஹ சரதி ஸரிதஹ ஸ்யானபுலினாஹா
கலாசேஷஸ் சந்த்ரஹ ஸுரத்ம்ருதிதா பால வனிதா
தனிம்னா சோபந்தே கலிதவிபவாஸார்திஷு நராஹா – 39
मणिः शाणोल्लीढः समरविजयी हेतिदलितो
मदक्षीणो नागः शरदि सरितः श्यानपुलिनाः ।
कलाशेषश्चन्द्रः सुरतमृदिता बालवनिता
तन्निम्ना शोभन्ते गलितविभवाश्चार्थिषु नराः ॥ 1.39 ॥
பொருள்
ரத்தினக் கல்லை அறுத்து அறுத்து பட்டை தீட்டினாலும் ஜொலிக்கத்தான் செய்கிறது;
விழுப்புண் அடைந்தாலும் வெற்றி பெற்ற வீரனின் முகம் பெருமித ஒளி வீசுகிறது;
யானையானது மத நீர் அனைத்தும் வடிந்தும் கம்பீரமாகக் காட்சி தருகிறது;
நதியானது தண்ணீர் குறைந்த காலத்திலும் அழகுடன் தோன்றுகிறது;
அமாவாசைக்கு அடுத்த இரண்டாவது நாளிலும் நிலவு அழகாகத்தான் ஒளிர்கிறது;
காதலனுடன் கட்டிப் புரண்டு காலையில், களைப்புடன் எழுந்தபோதும் மனைவியின் அழகு குன்றவில்லை;
பணக்காரன், அவனது செல்வம் முழுதையும் தர்மம் செய்தபோதும் பொலிவுடன் திகழ்கிறான்.
39. A gem polished on a grindstone, a victor of a battle injured with weapons, an elephant weakened by rutting, a river’s sandy bed shrunken in autumn, the moon with a single digit left, a young woman weary with love sports and people whose wealth is reduced by giving to seekers – all these shine due to their emaciation.
இவற்றில் ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட்டுப் பார்த்து ரஸிக்கலாம்.
இருந்தபோதும் கவிஞன் சொல்ல வரும் விஷயம், கையில் உள்ள எல்லாவற்றையும் தானம் கொடுத்தபோதும் செல்வந்தனுக்குப் புகழும் புண்ணியமும் எஞ்சி நிற்கும் என்பதாகும்.
காளிதாசனின் ரகுவம்ஸ காவியத்திலும், சங்க இலக்கியப் புற நானூற்றிலும் தானத்தினால் ஒருவனுக்கு ஏற்பட்ட வறுமையை புலவர்கள் புகழ்கிறார்கள்.
அதே போல ஒரு வீரனுக்கு உடலில் ஏற்பட்ட காயங்கள் அழகு தருமேயன்றி அழகைக் குறைக்காது என்பதையும் தமிழ், ஸம்ஸ்க்ருத நூல்கள் பன்முறை பகர்கின்றன.
To be continued………………………………………….
Bhartruhai, Niisataka, in Tamil, 37,38,39