இலங்கையில் பிராமணர் ஆட்சி –Part 2 (Post No.12,696)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,696

Date uploaded in London – –  –  10 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 Second part

மட்டக் களப்பில்  ராம நாதன் என்ற பிராமணனுக்கு முதலாவது ராஜ சிம்மன் அளித்த சாசனம் நமக்குக்  கிடைக்கிறது. பல நாட்டுப் பகைவர்களை முறியடித்து மன்னர்களைவென்ற  ராஜ சிம்ம மஹாராஜா

ராமநாத பிராமணனுக்கு , பின் வரும் நிலங்களை தானம் செய்கிறான் .

……….. …..இந்த சாசனத்துக்கு ஊறு விளைவிப்பவன் , காசி ராமேஸ்வரம், கதிர்காமம், மாணிக்க கங்கை ஆகிய இடங்களில் பாவம்  செய்வதால்  கிடைக்கும் பலன்களுக்குச் சமமான துன்பத்தை அனுபவிக்கக்கடவது என்று சாசனம் முடிகிறது.

xxxx

கண்டி மன்னன் இரண்டாவது ராஜசிம்மன்

இலங்கை மன்னர்களின் ராஜ சபையில் பிராமண வேத பண்டிதர்கள் இருந்து வேத மந்திரங்களை ஓதி வாழ்த்தியதை சேவுள் சந்தேசய (அழகையா வண்ண Thotagamuwe Sri Rahula Thera (1408 – 1491) என்ற  காவியமே பாராட்டுகிறது. ராஜ சிம்மன்  அரசவையில் சேர, சோழ , பாண்டியர்கள் மற்றும் தோல்வி அடைந்த மன்னர்கள் வணங்கி நிற்க, வேத மந்திரங்களை பிராமணர்கள் உச்சரிக்க , அரசன் தெய்வம் போல் வீற்றிருந்தான் என்கிறது ஒரு செய்யுள் .

xxxx

இது ஒரு புறமிருக்க 1640ம்  ஆண்டில், இரண்டாவது ராஜ சிம்மன் படேவியாவுக்கு பிராமண அமைச்சரை தூது அனுப்பிய செய்தியும் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து பல பிராமண குடும்பங்கள் ஹாலந்து நாட்டுக்குக் குடியேறி கல்வி கற்று, பெரிய பதவி வகித்ததும் தெரிகிறது. 400 ஆண்டுகளுக்கு முன்னரே இப்படிப் பிராமணர்கள் வெளிநாட்டுகுச்  சென்று  கல்வி கற்றதை வேறு எங்கும் காணமுடியவில்லை..

படேவியா – இந்தோனேஷியாவின் ஜாகர்த்தா

Batavia was the capital of the Dutch East Indies. The area corresponds to present-day Jakarta, Indonesia. Batavia can refer to the city proper or its suburbs and hinterland, the Ommelanden, which included the much larger area of the Residency of Batavia in the present-day Indonesian provinces of Jakarta, Banten and West Java.

அசோக மாமன்னன்,  எப்படி பிராமணர்களை கல்வெட்டுகளில் முதலில் குறிப்பிட்டு மதிப்பு கொடுத்தானோ அவ் வாறே  இலங்கையின் சமகால மன்னனான தேவநாம்பி(ரி)ய திஸ்ஸவும் பிராமண ர்களுக்கு மதிப்பு கொடுத்தான். 2300 ஆண்டுகளுக்கு முன்னர் ஜம்புகோளத்தில் (சம்பந்துறை ),  புனித அரசமரம் / போ தி மரம்  வந்து இறங்கியபோது அங்கு இரண்டாவது ஸ்தானம்,  திவக்க (திவாகரன்) என்ற பிராமணருக்கு அளிக்கப்பட்டது . அசோகன் மகள் சங்கமித்திரா, தேரர் மஹிந்தர், பிராமணர் திவாக ஆகிய மூவர் தான் அரசமர வரவேற்பு விழாவை முன்னின்று நடத்தினர்.

பதித்யாவின் (Batitya)  ஆட்சிக்காலத்தில் வினய நூல் பற்றி பிக்குகளிடையே மோதல் ஏற்பட்டது. அதற்கான வியாக்கியானத்தை இரண்டு கோஷ்டிகள் வெவ்வேறுவிதமாக விளக்கியது. உடனே மன்னன் , சகல கலா வல்லவனான ஆன ஒரு பிராமண மேதாவியை நடுவராக நியமித்தான். அவர் சொன்னதை எல்லோரும் ஏற்றார்கள் . அந்த அளவுக்கு மன்னரும், பெளத்தர்களும் பிராமணர்களை மதித்தார்கள்.

xxx

சோதிட நூல் சரஜோதி மாலை

இலங்கையில் மிகவும் பிரபலமான ஜோதிட நூல் சரஜோதி மாலை. இதை 700 ஆண்டுகளுக்கு முன்னர் , 1310ல் போஜ ராஜன் என்ற பிராமணர் இயற்றினார்.இன்றும் தமிழ் ஜோதிடர்கள் இதை பயன்படுத்துகின்றனர்.அவர் மூன்றாம் பராக்கிரம பாஹு காலத்தில் வாழ்ந்தவர்.

பின்னர் யாழ்ப்பாண மன்னர் ஒருவர் காலத்தில் செகராஜசேகரமாலை என்ற இன்னும் ஒரு சோதிட நூல் , சோமன் என்ற பிராமணரால் இயற்றப்பட்டது  வடக்கு வன்னி பிரதேச வரலாற்றைக் கூறும் வையா பாடல் என்பதை வையாபுரி அய்யர் இயற்றினார்.

ஆறாம் பராக்கிரம பாஹு காலத்தில் வாழ்ந்தவர்..ஸ்ரீ ராமச்சந்திர கவி பாரதி இந்தியத் தமிழரான அவர் , இலங்கையில் வாழ்ந்துவந்தார்; அவர் புத்தர் மீது சம்ஸ்க்ருத மொழியில் 100 பாடல்களை பக்தி சதகம் என்ற பெயரில் பாடினார்..

அராலி ராமலிங்க ஐயர், முதல் பஞ்சாங்கத்தை 1667-ல் இலங்கை இந்துக்களுக்காக கணித்தார்;. 400 ஆண்டுகளாக அதைத் தமிழர்கள் பின்பற்றிவருகிறார்கள் .

கடந்த சில நூற்றாண்டுகளில் வாழ்ந்த புகழ்பெற்ற இலங்கைத் தமிழ் பிராமணர்கள் :–

வட்டுக்கோட்டை கணபதி ஐயர் 1709-1784

இணுவில் நடராஜ  ஐயர் 1854-1905

வண்ணார் பண்ணை சுவாமிகள் பெரியதம்பி  ஐயர் ; அவர் 120 ஆண்டுகள் உயிர்வாழ்ந்து சேவை ஆற்றினார்..

xxx

அரசவையில் பிராமணர்கள்  ; இலங்கை கிளியோபாட்ரா

இலங்கை வரலாற்றில் மிகவும் கெட்ட பெயர் எடுத்த அரசி Anulka அனுலா. அவள் CLEOPATRA  கிளியோபாட்ரா போன்ற்வள் .சோர நாகனின் மனைவி; 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தாள் BCE 12-16 . அவள் கணவனுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு , அடுத்தடுத்துப் பலரை மணந்தாள் . நெளியா என்ற பிராமண புரோகிதரையும் மணந்தாள் .

xxxx

ஆறாம் பராக்கிரம பாஹு ஆண்ட காலத்தில் பிரமணர்களுக்குக் கிடைத்த சலுகைகள் குறித்து கோகில சந்தேச (குயில்விடு தூது )விரிவாகவே பேசுகிறது.

சங்க காலத்துக்கு முன்னர் உலகப் புகழ்பெற்ற ஸம்ஸ்க்ருதக் கவிஞன் காளிதாசன் இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் வாழ்ந்தான். அவன் ரகுவம்சம் இயற்றியதை அறிந்த இலங்கை அறிஞர்கள் மஹாவம்சம்சூள வம்சம் என்ற பெயர்களில் வம்ச வரலாறுகளை எழுதினர்க;ள். காளிதாசன் எழுதிய மேக சந்தேசம் உலகப் புகழ்பெற்ற தூத காவியம் ஆகும். இதைப் பார்த்து இலங்கை எழுத்தாளர்கள் ஏராளமான சந்தேச (தூத்து ) காவியங்களை எழுதினார்கள் .

xxx

பிராமணர்களுக்கு கிடைத்த நில தானம், ஸ்வர்ண / gold தானம் முதலியன பற்றி எழுதினால் அது நீண்ட பட்டியல் ஆகிவிடும் . தமிழ்நாட்டில் மங்கலம் ஏ நிற பெயரில் முடியும் கிராமங்கள் அனைத்தும் பிராமணர்களுக்கு மன்னர்கள் கொடுத்த ஊர்கள் ஆகும். இதை பிரம்மதேயம் என்பார்கள்; இறைவனுக்காக கொடுத்தால் அதை தேவதானம் என்பார்கள் .

இலங்கையில் பிராமணர்களுக்கு கிடைத்த தானங்கள் பற்றித் தனியாக எழுதுகிறேன்.

வேத சடங்குகள்

இலங்கை மன்னர்கள் பெளத்தர்களாக இருந்தாலும் பலரும் வேத  கால பட்டாபிஷேக சடங்குகளைப் பின்பற்றினார்கள் . இன்னும் பல இடங்களில் பெளாத்தர்களே வேத மாடலில் Vedic Model  புதிய சடங்குகளை உண்டாக்கி மன்னர்களைத் திருப்திப்படுத்தினர்

ஆறாவது பராக்கிரம பாஹு அளித்த நில தானம் , குடுமுரி ராசா கல்வெட்டில் விரிவாக உள்ளது. பெயர்களை பார்க்கையில் அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்பதும் தெரிகிறது . இந்த மன்னனின் தகனச் சடங்குகள் வேத மந்திரங்கள் ஒலிக்க நடந்தது.

xxxxx

கரிகாலன் காலத்து பிராமணர்கள்

2000 ஆண்டுகளுக்கு முன்னர் சோழநாட்டை  ஆண்ட கரிகாலன் பருந்து (எருவை) வடிவ யாக குண்டம் அமைத்து பெரும் யாகம் செய்தது சங்க இலக்கியத்தில் பாடப்பட்டுள்ளது. அவன் ரிக் வேதத்தில் சொன்னபடி ஏழு அடிகள் நடந்து சென்று விருந்தினருக்கு குட் பை Good Bye சொன்ன செய்தியையும் பாவலர்கள் பாடிச்சென்றனர். அவன்தான் இலங்கை ஏழாரன் என்றும் இல்லை அவன் சமகாலத்தில் ஆண்டவன் ஏலாரன் (7 மன்னர்களை வென்று ஏழு ஆரம் /மாலை அணிந்தவன்) என்றும் பேசுவர் பலர். பெளத்த மத நூல்களே அவனை மிகவும் புகழ்ந்து பேசும். அவன் காலத்தில் த்வார மண்டல என்னும் கிராமத்தில் வாழ்ந்த குண்டலி என்ற பிராமணன் மூலமாக துத்தகாமினி பல பொருட்களை பெற்றான் என்ற செய்தியும் வரலாற்றில் பதிவாகி உள்ளது.

xxxx

பிராமண புரட்சியும் தமிழர் ஆட்சியும்

2000 ஆண்டுகளுக்கு முன்னர்  வல கம்பாவின் (29-17 BCE ) முதல் ஆட்சி ஆண்டில் மஹாகாமத்தில் திஸ்ஸ என்ற பிராமணன் மன்னருக்கு எதிராக, சாணக்கியன் போல புரட்சிக்கொடி உயர்த்தினான். அப்போது பெரும் குழப்பம் ஏற்பட்டது தமிழ் நாட்டிலிருந்த 7 தமிழ்த் தலைவர்கள் பெரும் படைகளுடன் வந்து ஆட்சியைக் கைப்பற்றினர் .

மஹாசேனன் என்ற மன்னன் இந்துக்கோவில்களை இடித்து பெளத்த விஹாரங்களை  எழுப்பிய செய்தி மகாவம்ச நூலில் உள்ளது. அவன் அப்படி புத்த விஹாரை கட்டிய ஊர்களில் ஒன்று காலந்த  என்ற பிராமணன்  ஊராகும். அவன் பெயரைக் குறிப்பிட்டு அந்த ஊரிலும் மஹாசேனன் புத்த விஹாரம் எழுப்பினான் என்று சொல்லுவதால் அந்தப் பிராமணன் எவ்வளவு புகழ்பெற்றவன் என்பதும் புலனாகிறது.

இந்தியாவில் புத்தர் காலத்தில் மிகப்புகழ்பெற்ற பிராமணர்கள் பெளத்த மதத்தை தழுவினார்கள்; ஏனெனில் புத்தருக்கு பிராமணர்கள்  மீது அபார மதிப்பு; பிராமணர்கள்  படுகொலை செய்தாலும், அவர்கள் ஆட்ச்சியைக் கவிழ்த்தாலும் அவர்கள் செய்தது சரியே என்றும், அவர்களைத் தண்டிக்கக்கூடாது என்றும்  தம்மபதம் என்னும் வேதப்  புஸ்தகத்தில் இரண்டு ஸ்லோகங்களில் பாடியுள்ளார்  (முழு விவரம் எனது பழைய கட்டுரையில் உள்ளது)

தம்மபதம் என்னும் புஸ்தகம் பெளத்தர்கள் வேத புஸ்தகம்.  . அதில் கடைசி அத்தியாயம் முழுவதும் பிராமணர்களின் புகழ்பாடுகிறது. அதில்   பிராமணர்கள் யார் என்று  மனு ஸ்ம்ருதி போலவே வரையறையும் செய்துள்ளார். இலங்கையில் புத்தரைப் பின்பற்றிய  காம தேவ என்ற பிராமணன் சபரகமுவவில் சமன் தேவாலயத்தை நிறுவினான்

இலங்கையில் உள்ள பாலி  மத நூல்களை படிக்கையில் ஒரு விஷயம் தெளிவாகிறது. ஏதோ யாழ்ப்பாணத்திலுள்ள இந்துக்கோவில்களுக்கு வந்த தமிழ் நாட்டுப் பிராமணர்தான் இலங்கையில் வசித்தனர் என்று கருதி விடக்கூடாது  விஜயன் காலத்துக்கு முன்னரே, அதாவது 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் வடகோடி யாழ்ப்பாணம் முதல் தென் கோடி கதிர் காமம், காலி Galle நகர்வரை பிராமணர்கள் இருந்ததையும் அவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே 50 ஆண்டுகள் இலங்கையை ஆண்டதையும் பெளத்த மத நூல்கள்தான் நமக்குச் செப்புகின்றன. அமைசர்களாகவும் புரோகிதர்களாகவும், அரசர்களாகவும், தூதர்களாகவும், நூலாசிரியர்களாகவும் பிராமணர்கள் இருந்தனர் .

அடுத்து இந்து சாம்ராஜ்யத்தை இலங்கையில் நிறுவிய ஆரிய சக்கரவர்த்திகள் பிராமணர்களா ? என்பதை ஆராய்வோம்

தொடரும் ………..

இலங்கை, பிராமணர் ஆட்சி, பகுதி 2

Leave a comment

Leave a comment