
Bhaartruhari meeting his Old Wife
Post No. 12,698
Date uploaded in London – – – 10 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 15
பர்த்ருஹரி ஸ்லோகங்கள் 44,45, 46
பர்த்ருஹரியின் நீதி சதகத்திலுள்ள நூறு பாடல்களில் இது வரை 43 பாடல்களைக் கண்டோம். மேலும் சில பாடல்களைத் தமிழ் இலக்கியத்துடன் ஒப்பிட்டு மகிழ்வோம்
இதோ பாடல் 44
நீதி சதகம்- பர்த்ருஹரி 44
SLOKA 44
यद्धात्रा निजभालपट्टलिखितं स्तोकं महद्वा धनं
तत् प्राप्नोति मरुस्थलेऽपि नितरां मेरौ ततो नाधिकम् ।
तद्धीरो भव वित्तवत्सु कृपणां वृत्तिं वृथा मा कृथाः
कूपे पश्य पयोनिधावपि घटो गृह्णाति तुल्यं जलम् ॥ 44॥
யத்தாத்ரா நிஜபாலபட்டலிகிதம் ஸ்தோகம் மஹத்தா தனம்
தத்ப்ராப்னோதி மருஸ்தலேபி நிதராம் மேரௌ ச நாதோதிகம்
தத்திரோ பவ வித்தவத்சு க்ருபணாம் வித்திம் வெருதா மா க்ருதாஹா
கூபே பஸ்ய பயோநிதாவபி கடோ க்ருஹ்ணாதி துல்யம் ஜலம்- 44
“ஒருவனுடைய நெற்றியில் பிரம்மா எழுதிவைத்த அளவே அவனுக்கு செல்வம் கிடைக்கும். அவன் பாலைவனத்தில் வசித்தாலும் இது கிடைக்கும். மேரு மலையில் வசித்தாலும் இதைவிடக் கூடுதலாக எதுவும் கிடைக்காது. ஆகையால் பொறுமையுடன் இரு. பணக்காரர்களிடம் சென்று அடிபணிந்து முகத்துதி செய்யாதே. ஒரு குடத்தைக் கடலில் முக்கினாலும், கிணற்றில் முக்கினாலும் குடத்தின் அளவுக்கே தண்ணீர் கிடைக்கும்”.
44. Whatever is the wealth written on one’s forehead, a little or lots, one will attain that even in a desert, and not more even on the golden mountain, Meru. Therefore, be fearless and do not grovel before the rich. Know that a pitcher takes in the same quantity of water from a well as from the ocean.
கிட்டத்திலுள்ள கிணற்றில் முகத்தாலும்
எட்டி கடலில் எடுத்தாலும் — ஒட்டுநீர்
ஒன்றேயா மேருவினும் ஊழின் படியன்றி
இன்றேயாம் பொன் எண் –44
தலைவிதிப்படியே செல்வம் கிட்டும் என்பதை விளக்க ஒரு கதை, இந்து சமய நூல்களில் உள்ளது:–
வித்யாரண்யர் என்பவர் தென்னாட்டில் துலுக்கர்களின் ஆட்சிக்கு சாவு மணி அடித்த பெரிய மஹான். அவர் இளம் வயதில் செல்வம் வேண்டி தவம் இருந்தார். இவரது தவத்தை மெச்சிய தேவி, அவர் முன் தோன்றி,
அன்பனே! உன் தவத்தை மெச்சுகிறோம் ஆனால் இந்த நற்பிறப்பில் உமக்கு செல்வம் கிடைக்க வழியில்லை. உமது தலைவிதி அப்படி.
ஆயினும் வேறு ஏதாவது ஒரு வரம் கேள்; அதைத் தருகிறேன் என்றாள்.
வித்யாரண்யர் யோசித்தார். தேவியயையே மடக்கி விடுவோம் என்று ஒரு கிடுக்கிப் பிடி போட்டார். நான் ஸந்யாஸம் வாங்கினால் அது அடுத்த பிறவிதானே. இப்போதே ஸந்யாஸி ஆகிறேன். அடுத்த பிறவிக்கான செல்வத்தைக் கொடு என்று கேட்டார்.
தேவியும் சிரித்துக் கொண்டே ‘டன்’ கணக்கில் அவர் முன் தங்கப் பாளங்களை வைத்துவிட்டு மறைந்து விட்டாள்
வித்யாரண்யரோ ஸத்யம் தவறாத மஹா யோகி. ஸந்யாஸம் எடுத்த அடுத்த நிமிடமே அவருக்குப் புரிந்தது; எதிலும் பற்று இருக்கக் கூடாது என்பது.
அடடா! தேவியிடம் ஏமாந்துவிட்டோமே. ஸந்யாசமும் செல்வமும் ‘சூடான ஐஸ்க்ரீம் என்பது போல ஆயிற்றே’ என்று உணர்ந்தார். அந்தக் காலத்தில் துலுக்கர்களின் அட்டஹாசம் பெருகிக்கொண்டே வந்தது; இந்து தர்மம் அழிபட்டு வந்தது. அவர் கண் முன்னால் இரண்டு ஆட்டு இடையர்கள் தென்பட்டனர். அவர்களிடம் பிரம்மாண்டமான செல்வத்தைக் கொடுத்து படை திரட்டச் சொன்னார். அவர்களும் உரிய பயிற்சி பெற்று மாபெரும் படை திரட்டி விஜய நகரப் பேரரசை நிறுவி தென்னாட்டில் புகுந்த துலுக்கப் படைகளை விரட்டி அடித்தார் கள்.
விதிப்படி செல்வம் கிட்டும் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. பர்த்ருஹரி சொல்லுவது போல, பாலைவனத்தில் இருந்தாலும் செல்வம் கிட்டும் என்பதற்கிணங்க ஹரிஹரன், புக்கன் என்ற இருவருக்குச் செல்வம் போய் சேர்ந்து விஜய நகரப் பேரரசு உதயமானது.
விதியே வலியது என்னும் வள்ளுவன் கருத்து
திருவள்ளுவரும் தமிழ் வேதமான திருக்குறளில் மிகத் தீவிரமாக விதியின் வலிமையை விளக்குகிறார்.
கர்ம வினை என்பதுதான் இந்துமத்தின் சிறப்புக் கொள்கை. இந்து மதத்தைத் தொடர்ந்து பாரதத்தில் எழுந்த பிற மதங்களான சமணம், பவுத்தம்,
சீக்கியம் ஆகியனவும் கர்மவினைக் கொள்கையில் நம்பிக்கை கொண்டுள்ளன.
இதோ விதியை வலியுறுத்தும் முக்கியக் குறள்கள்
வள்ளுவனும் விதியின் காரணமாகவே ஒருவனுக்கு செல்வம் கிடைக்கிறது என்னும் பர்த்ருஹரி கருத்தை ஆதரிக்கிறான்:
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி- 371
பொருள்
ஒருவனுக்கு பணம் வரக்கூடிய தலைவிதி இருக்குமானால் அவனுக்கு முயற்சி தோன்றும்;அவன் தலைவிதி பணம் வரக்கூடாது என்றால் அவனை சோம்பல் ஆட்கொள்ளும்
பிரம்மாதான் நெற்றியில் எழுதுகிறான் என்பதை வள்ளுவனும் ஒப்புக்கொள்கிறான்
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது- 377
கோடி கோடியாகப் பொருள் சேர்த்து இருந்தாலும் நம் விதியை வகுக்கும் இறைவன் எழுதியபடியே நடக்கும்
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்- 380
தலை விதியை விட, வேறு வலி மையானது ஏதேனும் இருக்கிறதா?
அவ்வையார்
ஒரு குடத்தை எவ்வளவு தண்ணீரில் முக்கினாலும், குடத்தின் கொள் அளவுக்கே தண்ணீர் மிஞ்சும் உள்ளே தங்கும் என்பதை பர்த்ருஹரியிடமிருந்து அவ்வையாரும் எடுத்தாண்டுள்ளார்.
இதோ அந்தப் பாடல்
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி – தோழி
நிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்
விதியின் பயனே பயன்.
18.Though you dip the measure deep in the deep sea water, it will not contain four measures. O Maid ! Though riches and husband are choice, the happiness of the couple hangs on fate or destiny.
மூதுரைப் பாடல் இது. இதை எழுதிய அவ்வையார் சங்க கால அவ்வையார் அல்ல. பர்த்ருஹரிக்குப் பல நூறு நூற்றாண்டுகள் பிறப்பட்டவர். பர்த்ருஹரி சொன்ன பல கருத்துக்கள் அவருக்குப் பின்னர் தோன்றிய பதினென் கீழக்கணக்கு நூல்களிலும் உள.
இன்னொரு சிறப்பு- பிரம்மாதான் ஒருவனுடைய தலையில் அல்லது நெற்றியில் எல்லாவற்றையும் எழுதிவைக்கிறான் என்பதாகும்.
எழுத்துமுறையைக் கண்டுபிடித்தது இந்தியாதான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. கல்வி, எழுத்து, படைப்பு, விதி ஆகியவற்றுக்குப் பிரம்மாவும், அவருடைய மனைவி ஸரஸ்வதியுமே அதிதேவதைகள் என்பது இமயம் முதல் குமரி வரையுள்ள நம்பிக்கை.
XXX
SLOKA 45
अकरुणत्वम् अकारणविग्रहः
परधने परयोषिति च स्पृहा ।
सुजनबन्धुजनेष्वसहिष्णुता
प्रकृतिसिद्धम् इदं हि दुरात्मनाम् ॥ 1.45 ॥
Ruthlessness, unfounded hostility, desire for another’s wealth and wife, envy towards good people and relatives – these are naturally found in the wicked–45
கெட்டவனுக்கு இயல்பாகவே கொடுஞ்செயல்கள் வரும்.
காரணம் இல்லாமலேயே சண்டைக்கு வருவான்.
மற்றவர் செல்வத்துக்கும் மனைவியர்க்கும் ஆசைப்படுவான்.
நல்லோரைக் கண்டால் சீறி விழுவான்.
தனது குடும்பத்தினரையே நிந்திப்பான்.
ராவணன் இந்த எல்லா கெட்ட குணங்களையும் உடையவன்.
குபேரனின் புஷ்பக விமானத்தைப் பறித்தான்;
சிவ பெருமானின் கயிலை மலையை அசைத்தான்;
ராமனின் மனைவியைக் கவர்ந்தான்.
தேவர்களைத் துன்புறுத்தினான்.
இதை பர்த்ருஹரி அழகாகஒரே ஸ்லோகத்தில் சொல்லிவிட்டார்.
அகருணத்வமகாரணவிக்ரஹக பரதனே பரயோஷிதி ச ஸ்ப்ருஹா
ஸுஜன பந்துஜனேஸ்ஹ்வஸஹிஷ்ணுதா ப்ரக்ருதி ஸித்தமிதம் ஹி துராத்மனாம்-45
காரணமில்லாக் கலகம் தயையின்மை
சீரணவு நல்லோர் பாற் பேர் பகைமை – ஏணவும்
சுற்றம் வெறுத்தல் துயர் சேர் பிறனுடைமை
பற்றிலிவை தீயோர் தம் பண்பு — 45
XXXX
எல்லா ராக்ஷசர்களும், நல்லோரைத் துன்புறுத்தியதால்தான் விஷ்ணு பல அவதாரங்களை எடுக்க நேரிட்டது.
திருவள்ளுவரும் தமிழ் வேதமான திருக்குறளில் கயவர்களின் குணத்தை வருணிக்கிறார்
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ் -குறள் 1079
பிறர் நன்றாக உடுப்பதையோ உண்பதையோ கண்டால்,கயவர்கள், பொறாமை கொண்டு அதற்கும் குற்றம் காண வல்லவர் ஆவார்கள்.
ஈசாப் கதையில் வரும் ஆடு- ஓநாய் கதை போலத்தான். வலிய சண்டைக்கு இழுத்து ஆட்களைக் கொல்லுவர். ரிஷி முனிவர்கள் காடுகளில் பழங்களையும் தேனையும் சேகரித்து உண்டு அமைதியான வாழ்க்கை நடத்தியபோதும் அவர்களுடன் வம்புச் சண்டைக்குப் போனவர்கள் அரக்கர்கள்.
பிறன் மனை நோக்காத பேராண்மை
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்- குறள் 146
பிறருடைய மனிவியை நாடிச் செல்பவனுக்கு நான்கு கெடுதிகள் எப்போதும் வரும்/ இருக்கும்:–
பகைமை, பாவம், பயம், உலகமே பழித்துரைக்கும் வசவுகள் இவை நான்கும் நீங்காமல் நிற்கும்.
Xxx

picture of a snake charmer
பாம்பு நீர் குடித்தால் விஷமாகும்; பசு நீர் குடித்தால் பால் ஆகும்!
SLOKA 46
दुर्जनः परिहर्तव्यो
विद्ययाஉलकृतोஉपि सन् ।
मणिना भूषितः सर्पः
किम् असौ न भयङ्करः ॥ 1.46 ॥
துர்ஜனஹ பரிஹர்தவ்யோ வித்யயாஅலக்ருதோ அபிஸன்
மணினா பூஷிதஹ ஸர்பஹகிம் அஸௌ ந பயங்கரஹ- 1-46
கற்றவர்களாயினும் தீய குணம் இருந்தால் அவர்களைத் தவிர்க்க வேண்டும். பாம்பின் தலையில் மாணிக்கம் இருந்தாலும் அது ஆபத்தானதல்லவா? –பாடல் 46
46. An evil person is to be avoided, even if adorned with learning. Is the cobra, despite being decorated with a gem, not fearsome?
அரவின் தலையில் அருமணி உண்டேனும்
விரவும் பயத்தால் விலக்க — விரைகுவ போல்
தீயவர்பாற் கல்வி சிறந்தாலும் மற்றவரை
நீயகன்று தூரத்தில் நில்
XXXXX
தீயவர்பால் கல்வி சிறந்தாலு மற்றவரைத்
தூயவரென்றெண்ணியே துன்னற்க– சேயிழையே!
தண்ணொளிய மாணிக்க சர்ப்பந் தரித்தாலும்
நண்ணுவரோ மற்றதனை நாடு– நீதிவெண்பா
பொருள்
பாம்பிடம் ஒளிமிக்க மாணிக்கக் கல் இர்ந்தாலும் யாராவது அதை நெருங்குவார்களா? அதே போல கெட்டவர்களிடம் கல்வி அறிவு இருந்தாலும் நாடக் கூடாது.
பசுவுக்கு நீர்–பால்; பாம்புக்கு நீர் – விஷம்
பாம்புண்ட நீரெல்லாம் நஞ்சாம் பசுவுண்ட
தேம்படு ஹெண்ணீர் அமுதமாம் – ஓம்பற்கு
ஒளிஆய்ம் உயர்ந்தார்கண் ஞானம் அதுபோற்
களியாம் கடையாயார் மாட்டு– –அறநெறிச்சாரம்
பொருள்
பாம்புகள் குடிக்கும் நீர் எல்லாம் விஷமாக மாறுகிறது;
கயவர்கள் கற்கும் ஞன நூல்கள் அவர் மாட்டு மயக்கத்தையே விளைவிக்கும்;
பசு மாடுகள் குடிக்கும் தண்ணீர் இனிய பாலாக மாறும்;
உயர்ந்தோர் கற்கும் ஞான நூல்கள் அவர்கள் மாட்டு அறிவினை வளர்க்கும்.
தீயோர்கள் கற்றாலும் கற்றதையெல்லாம் தவறாக வியாக்கியானம் செய்வர்.
— subham —
tags– நல்லோர்,தீயோர், பாம்பு, பசு, விஷம், பால், Slokas 44,45,46, Nitisataka