
Post No. 12,738
Date uploaded in London – – – 19 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
PART 24-Slokas 77, 78, 79

Sub marine fire- Vadamukagni; Badavagni; Hindu discovery
इतः स्वपिति केशवः कुलमितस्तदीयद्वीषा-
मितश्च शरणार्थिनां शिखरिणां गणाः शेरते ।
इतोऽपि वडवानलः सह समस्तसंवर्तकै-
रहो विततमूर्जितं भारसहं च सिन्धोर्वपुः ॥ ७७॥
இதஹ ஸ்வபிதி கேஶவஹ குலம் இதஸ்ததீயத்விஷாம்
இதஶ்ச ஶரணார்தினாம் ஶிகரிணாம் கணாஹா ஶேரதே |
இதோஅபி படவானலஹ ஸஹ ஸமஸ்தஸம்வர்தகைரு
அஹோ விததம் ஊர்ஜிதம் பாரஸஹம் ச ஸின்தோர்வபுஹு –77
கடலிடத்தில் ஓர் பால் கரியமால் வாழ்வார்
ஆடலரக்கர் ஓர் பால் அமர்வார் — திடமுடைய
மாமலைகள் ஓர்பால் வடவானலமொரு பால்
தாமிருக்கும் மேன்மை பெரிதாம் –77
77. To one side lies Vishnu. Elsewhere, the clan of his foes (the demons) lives. In another part rest the group of mountains seeking refuge. In yet another side, the marine fire resides along with all the apocalyptic clouds. Oh, how vast, mighty and capable is the expanse of the ocean.
ஒரு புறத்தில் விஷ்ணு; மறுபுறத்தில் கடலில் ஒளிந்திருக்கும் அரக்கர்கள்; இன்னொரு புறத்தில் கடலில் தஞ் சம் புகுந்த மலைகள், இன்னொரு புறமோ உலகினை அழிக்க காள மே கத்துடன் காத்து நிற்கும் வட முகாக்கினி இந்தக் கடல்தான் எவ்வளவு பெரியது! எவ்வளவு சக்தி வாய்ந்தது !
xxxxxxxxxxxxxxxxxxxxxxx
तृष्णां छिन्धि भज क्षमां जहि मदं पापे रतिं मा कृथाः
सत्यं ब्रूह्यनुयाहि साधुपदवीं सेवस्व विद्वज्जनम् ।
मान्यान् मानय विद्विषोऽप्यनुनय प्रख्यापय प्रश्रयं
कीर्तिं पालय दुःखिते कुरु दयामेतत् सतां चेष्टितम् ॥ ७८॥
த்ருஷ்ணாம் சிந்தி பஜ க்ஷமாம் ஜஹி மதம் பாபே ரதிம் மா க்ரு தாஹா
ஸத்யம் ப்ரூஹ்யனுயாஹி ஸாதுபதவீம் ஸேவஸ்வ வித்வஜ்ஜனம் |
மான்யான்மானய வித்விஷோ அ ப்யனுனய ப்ரக்யாபய ப்ரஶ்ரயம்
கீர்திம் பாலய து:கிதே குரு தயாம் ஏதத்ஸதாம் சேஷ்டிதம் || 1.78 ||
ஆசையகற்றி அரும்பொறை மேற்கொண்டு
மோச மதத்தை முறுக்கியழித்– தேசுகின்ற
து ற்செய்கையின் மனத்தை த் தோயா தடக்கி மெய்யே
பற்பலர்க்கும் பேசிப் பணிவுடனே சற் சனங்கள்
போம் வழியிற் சென்று புலவர் ப் பணிந் தெளியோ ர்
ஆம்பலர்க்கும் நன்மை செயற் காதரித்து தாம் பகைமை
பூண்டோர்க்கும் நீதி புரிந் தறிவால் மாண்டோர்க்
கடக்கம் செலுத்தி அரும்புகழ்க்கு பங்கத்
தொடக்க மிலாத துகள் தீர் நடக்கையுடன்
வாழ்ந்து துயரப் படுவோர்க்கன்பு வழங்குவதே
ஆழ்ந்தறிவின் மேலோர்க் கழகு –78
78. Check (your) desire, practice patience, give up pride, and do not take pleasure in sinful deeds. Speak the truth, follow the path of good people, and serve the learned people. Respect those who deserve respect, appease enemies, and conceal your merits. Protect (your) good reputation and show mercy to those in sorrow. This is the definition of good people.
உங்கள் ஆசையைக் கட்டுப்படுத்துங்கள் கர்வத்தினை விடுங்கள் ;பாவ காரியங்களில் இன்பத்தினை நாடாதீர்கள்;உண்மையே பேசுங்கள் நல்லோரைப் பின்பற்றுங்கள்;கற்றோருக்கு சேவை செய்யுங்கள் மரியாதை கொடுக்க வேண்டியவர்களை மதித்து நடங்கள் உங்கள் பெருமைகளை தம்பட்டம் அடிக்காதீர்கள் துக்கத்தில் உழல்வோருக்கு உதவுங்கள் எதிரிகளுக்கும் தயவு காட்டுங்கள் ;இதுவே நல்லவரின் இலக்கணம் – 78
xxxxxxxxxxxxxxx
मनसि वचसि काये पुण्यपीयूषपूर्णाः
त्रिभुवनमुपकारश्रेणिभिः प्रीणयन्तः ।
परगुणपरमाणून् पर्वतीकृत्य नित्यं
निजहृदि विकसन्तः सन्ति सन्तः कियन्तः 79
மனஸி வசஸி காயே புண்ய பீயூஷபூர்ணாஸ்
த்ரிபுவனம் உபகாரஶ்ரேணிபிஹி ப்ரீணயன்தஹ |
பரகுணபரமாணூன்பர்வதீக்ருத்ய நித்யம்
நிஜஹ்ருதி விகஸந்தஹ ஸந்தி ஸந்தஹ கியந்தஹ—79
மனமாதி மூன்றால் மருவு நற்செய்கை
தினமாற்றல் என்கின்ற தெய்வ க் – கன மருந்தாற்
பூரணரா யார்ர்க்கு மன்பு பூண்டுதவி செய்வதற்குக்
காரணராய் மற்றவர் பாற் காணுகின்ற — ஏர ணுவா ம்
சற்குண மேனுமதைத் தாமலை போலே மதித்து
நிற்கு மனங்கொண்ட நிமல – சற்குணர்கள்
இவ்வுலகில் எங்கும் இருப்போர் சிலராவார்
தெய்வ கதியா மிதனைத் தேர்– 79
79. There are a few good people, filled with the nectar of purity in thought, word and action, pleasing the three worlds with a series of beneficial acts. They make a mountain of the tiniest virtues of others and rejoice in their heart.
சொல்லிலும் செயலிலும், சிந்தனையிலும் தூய்மை உடைய சிலர் இருக்கின்றனர்; நல்ல செயல்களினால் முருவுளக்கங்களையும் அவர்கள் திருப்திப்படுத்துகிறார்கள் மற்றவர்களிடத்தில் கடுகளவு நல்ல குணம் இருந்தாலும் அதை மலை போலக் காட்டி மகிழ்வார்கள்- 79
–subham–
Tags- பர்த்ருஹரி , நீதிசதகம் , பகுதி 24, ஸ்லோகம் 77,78, 79, Bhartruhari, Nitisataka, part 24, slokas 77,78,79 Badavagni