
Post No. 12,743
Date uploaded in London – – – 20 November , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

PART 25-Slokas 80, 81, 82
किं तेन हेमगिरिणा रजताद्रिणा वा
यत्राश्रिताश्च तरवस्तरवन्त एव ।
मन्यामहे मलयमेव यदाश्रयेण
कङ्कोलनिम्बकुटजा अपि चन्दनाः स्युः ॥ ८०॥
வெள்ளி மலை யான கைலாசத்திலும் தங்க மலையான மேருவிலும் வளரும் மரங்கள் , மற்ற எல்லா மரங்கள் போலத்தானே இருக்கின்றன; அவைகளால் என்ன பயன்? ஆனால் மலய மலையோ கசப்பான கங்காள, கூடஜ, வேப்ப மரங்களையும் சந்தன மர வாசனையால் கமழச் செய்கின்றதே ; ஆகையால் அதைப் போற்றுவோம் .– 8080. Of what avail are the golden and silver mountains, the trees growing on which remain the same trees. We respect the Malaya Mountain, inhabiting which even Kankola, Neem and Kutaja become sandal trees.
கிம் தேன ஹேமகிரிணா ரஜதாத்ரிணா வா
யத்ராஶ்ரிதாஶ்ச தரவஸ்தரவந்த ஏவ |
மன்யாமஹே மலயம் ஏவ யத்ஆஶ்ரயேண
கங்கோலநிம்பகடுஜா அபி ச ந் தனாஃ ஸ்யுஃ –80
xxxxxx
रत्नैर्महार्हैस्तुतुषुर्न देवा
न भेजिरे भीमविषेण भीतिम् ।
सुधां विना न प्रययुर्विरामं
न निश्चितार्थाद्विरमन्ति धीराः – 81
81. The Devas were not content with the precious gems (that emerged from the ocean). They did not take fright at the terrible poison. They did not stop till they obtained ambrosia. Courageous ones do not turn back from the determined goal.
பாற்கடலைக் கடைந்த தேவர்கள் அதிலிருந்து வந்த ரத்தினங்களுடன் திருப்தி அடைந்து நின்றுவிடவில்லை.; விஷம் வெளியே வந்த போதும் பயந்து ஓடவில்லை ;அமிர்தம் கிடைக்கும் வரை கடைவதை நிறுத்திவில்லை ; துணிவுள்ளவர்கள் லட்சியத்தை அடையும் வரை பின்வாங்க மாட்டார்கள் .
ரத்னைர்மஹார்ஹைஸ்துதுஷுர்ன தேவா
ன பேஜிரே பீமவிஷேண பீதிம் |
ஸுதாம் வினா ன பரயுர்விராமம்
ன னிஶ்சிதார்தாத்விரமன்தி தீராஃ -81
அமுதம் பெற சுரர் பாலாழி கடைந்தார்
அமுதம் பெறு முன்னர் ஆலம் — திமிதிமெ ன்று
மேலெழுந்ததற் கஞ்சார் மேலா மரத்தனங்கள்
பாலெழுந்தவற்றை ப் பரிந்து மன மா லெழுந்து
நாட்டார் அதுகாறும் நாடி எவராலும்
தேடா அமுதம் திரளுமட்டும் — வாடார்
பிடித்த பிடிவிடார் பெற்றி போல் நெஞ்சந்
தடித்த துணிவுடை யார் தாமும் — முடித்தன்றி
எண்ணி முடியுங் கருமம் எப்படியும் கைவிடார்
மண்ணிலே நின்ற வழக்கு — 81
xxxxxx
क्वचित् पृथ्वीशय्यः क्वचिदपि च पर्यङ्कशयनः
क्वचिच्छाकाहारः क्वचिदपि च शाल्योदनरुचिः ।
क्वचित् कण्ठाधारी क्वचिदपि च दिव्याम्बरधरो
मनस्वी कार्यार्थी न गणयति च दुःखं न च सुखम् ॥ ८२॥
82. Sometimes sleeping on the (bare) earth and sometimes on a couch, sometimes eating only vegetables and sometimes tasting rice, sometimes wearing rags and beautiful clothes at other times : A brave person bent upon (accomplishing) a task does not care for comfort or hardship.
ஒரு குறிக்கோளை அடைய விரும்ம்பும் லட்சியவாதி பஞ்சு மெத்தையிலும் தூங்குவான்; தரையிலும் படுப்பான் வெறும் பழம் காய்களையும் சாப்பிடுவான்; சமைத்த சாதத்தையும் சாப்பிடுவான் கந்தையையும் அணிவான்; பட்டுப் பீதாம்பரங்களையும் அணிவான்;
இன்ப துன்பங்களைப் பொருட்படுத்தான்.
க்வசித்ப்றுத்வீஶய்யஃ க்வசிதபி ச பரங்கஶயனஃ
க்வசிச்சாகாஹாரஃ க்வசிதபி ச ஶால்யோதனருசிஃ |
க்வசித்கன்தாதாரீ க்வசிதபி ச திவ்யாம்பரதரோ
மனஸ்வீ கார்யார்தீ ன கணயதி துஃகம் ன ச ஸுகம் || 1.82 ||
காரியஞ் சாதிக்கும் கருத்துடையோன் பூசயனம்
ஓரிட த்தில் கொள்ளுவான் ஓரிட த்தில் பஞ்சசு மெத்தை
நேரிடினும் பள்ளி கொள்வான் நிண் ணயமாய் க் காய்கறிகள்
சேர உண்ணுவான் ஓரிட த்தில் தெண்ணீராகாரமுண் பான்
ஓரிட த்தில் கந்தை வு கந்தணிவான் ஓரிட த்தில் சீரிய
பட்ட ணிவான் சேர்ந்த மற்றோரிடத்தில்
கோரிய நன்மை வந்து கூடின் மகிழ்ச்சியும்
முரிய தீமை வந்து மூளின் விசனமும்
பூரியனாய் க் கொள்ளான் பெருந்துணிவுடனே
நேரியனாய் வாழ்வான் நிசம்
–subham–
tags- Bhartruhari’s Nitisataka , Part 25 , Slokas 80,81,82