கூடல் மாணிக்யம் பரதன் கோவில் — Part 11 (Post No.12,749)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,749

Date uploaded in London – –  –  22 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 11

கோவில் எண் 10 –   கூடல் மாணிக்யத்தில் பரதனுக்கு கோவில்

ராம பிரான் தம்பிக்கு தனியாக கோவில் இருப்பது அபூர்வமே ; மலையாளி இந்துக்கள் தசரதனின் 4 மகன்களுக்கும் கோவில் கட்டிப் போற்றி வழிபடுகிறார்கள்

ஆயிரம் ராமனுக்கு ஒப்பானவன் பரதன் என்பான் கவிச் சக்கரவர்த்தி கம்பன்

2337.    ‘தாய் உரைகொண்டு தாதை உதவிய

     தரணிதன்னை,

‘‘தீவினை” என்ன நீத்து,

     சிந்தனை முகத்தில் தேக்கி,

போயினை என்றபோழ்து, புகழினோய்!

     தன்மை கண்டால்,

ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ,

     தெரியின் அம்மா! — கம்ப ராமாயணம்

பொருள் :–   புகழ் உடையவனே!;  (உன்)

தாயாகியகைகேயியின் ‘வரம்’ என்கின்ற வார்த்தையைக் கொண்டு;  (உன்) தந்தையாகிய தயரதன் அளித்த;  (கோசல நாட்டு) அரசாட்சியை;  தீயவினை வந்து சேர்ந்தது  போலக் கருதிக் கைவிட்டு;முகத்தில் கவலை தேங்கியவனாய்; (வனத்துக்கு) வந்தாய்; என்ற காலத்தில்; நல்லியல்புகளை  அறியுமிடத்து, ஆராய்ந்தால் ஆயிரம் இராமர் நின்கேழ்ஆவரோ – ஆயிரம் இராமர்கள் உளரானாலும் நின் ஒருவனுக்குச் சமானம் ஆவரோ; அம்மா!

பரதன் பெயரை நினைத்தாலே ஞானமும் பக்தியும் வரும்; வளரும் என்று ராஜாஜி, ராமாயணம் என்ற நூலில் குறிப்பிடுகிறார்

பரதன் கோவில் எங்கே இருக்கிறது ?

திருச்சூர் மாவட்டத்தில் திருச்சூர் நகரிலிருந்து 22 கிலோமீட்டரில் உள்ள இரிஞ்சாலக்குடா என்னும் ஊரில் பரதன் கோவில் இருக்கிறது . நாட்டிலேயே பரதனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் இது ஒன்றுதான்.

ஆயினும் ராமர் கோவில் போலவே இங்கும் விஷ்ணுதான் இருக்கிறார்; அவர் பெயர் சங்கமேஸ்வரன் ; கோவிலில் நான்கு குளங்கள் இருப்பது இதன் தனிச் சிறப்பு. பரதன் நான்கு கரங்களுடன், வலதுபக்க மேற்கரத்தில் தண்டம், கீழ் கரத்தில் அட்சமாலை, இடதுபக்க மேற்கரத்தில் சக்கரம், கீழ் கரத்தில் சங்கும் கொண்டு நின்ற வாறு கரிசனம் தருகிறார் .

குலிப்பிணித் தீர்த்தம் கோவிலுக்குள் இருக்கிறது. ஏனைய 3 குளங்கள் கோவிலுக்கு வெளியே உள்ளன.

வக்கையில் கைமால் என்ற நிலப் பிரபுவிடம் மீனவர்கள் கடற்கரையில் கண்ட ராம லட்சுமண பரத , சத்ருக்கன ஆகிய  4 சிலைகளைக் கொண்டுவந்து கொடுத்தவுடன் அவர் அவைகளை 4 இடங்களில் பிரதிஷ்டை செய்ததால்  அவை நாலம்பலம் (நான்கு+ அம்பலம்) என்று அழைக்கப்பட்டன

XXXX

TAMIL WORD AROUND THE WORLD

TEMPLE டெம்பிள் என்ற ஆங்கிலச் சொல் மத்திய கிழக்கில் மெசபொடோமியாவில் உள்ள தளி TELE  என்ற சொற்கள் எல்லாம் ஒரே மூலத்திலிருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது

TELE IN MESOPOTAMIA = TE(MP) LE

AMPLE= AMPALA = TEMPLE

XXXX

இனி கோவிலின் சிறப்புகளைக் காணலாம்

மீனவர்கள் அவைகளை மீட்டுக் கொணர்வதற்கு முன்னர், வக்கையில்  கைமால் கனவில் சிலைகளைக் கண்டதாகவும் அதனால்தான் அவர் மீனவர்களுக்கு கட்டளை இட்டார் என்றும் சொல்லப்படுகிறது

கோவிலில் உள்ள குலிப்பிணி  தீர்த்தக் குளம் பற்றியும் ஒரு கதை இருக்கிறது. ஒரு காலத்தில் இந்த இடம் எல்லாம் காடுகள் மண்டிக்கிடந்தன ; காட்டில் தவம் செய்த குலிப்பிணி மகரிஷி கங்கா தேவியை வேண்டிக்கொள்ளவே கங்கை இங்கு பாய்ந்ததாகவும் அதன் ஒரு பகுதியே என்று தீர்த்தக்குளமாக இருக்கிறது என்றும் செப்புவர். அந்தக்குளம் புனிதமாக கருதப்பட்டு அங்குள்ள மீன்களுக்கு உணவு படைப்பது மீனூட்டு என்ற நேர்த்திக் கடனாக இருக்கிறது

கூடல் மாணிக்யம் பெயர்க்காரணம்

இந்தக் கோவிலுக்கு கூடல் மாணிக்கம் என்ற பெயர் எப்படி வந்தது என்பதையும் பார்ப்போம். இறைவனின் நெற்றியில் ஒரு ஒளிக்கற்றை தோன்றியபோது அதை ஒப்பிட்டுப்பார்ப்பதற்காக காயம்குள ம்  ராஜா கையிலிருந்த மாணிக்கக்  கல்லை கொண்டுவந்தபோது இரண்டும் ஒட்டிக்கொண்டாதாம் ; இவ்வாறு இரண்டு மணிகளும் கூடியதால் கூடல் மாணிக்கம் ஆனது. இவை எல்லாம் செவி வழிக் கதைகள்.

சங்கமேஸ்வரன் பெயர் ஏன் ?

இரண்டு அல்லது மூன்று நதிகள் கூடும்  இடத்தை சங்கம் /  சங்கமம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லால் குறிப்பிடுவர். (சம்ஸ்க்ருதத்தில் ச, ஸ ஷ ஆகிய எழுத்துக்களில் துவங்கும் சொற்கள்தான் அதிகம். இதனால் தமிழில் ச என்னும் எழுத்தில் சொற்களே இருக்கக்கூடாது என்று தொல்காப்பியன் என்ற பிராமணன் தடை விதித்தார் . சங்க இலக்கியத்தில் உள்ள ஒரு லட்சம் சொற்களில் ச எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்; அவையும் ஸம்ஸ்க்ருதச் சொற்கள்!)

முன்னொருகாலத்தில் இரிஞ்சால குடா என்னும் இந்த ஊர் இரண்டு நதிகளின் சந்த்திப்பில்/ சங்கமத்தில்  இருந்தன. காலப்போக்கில் நதிகள் தனது போக்கை மாற்றிக்கொண்டன. ஆயினும் இன்றும் கூட ஆராட்டு என்னும் இறைவனைக் குளிப்பாட்டும் வைபவம் சாலக்குடி ஆற்றில் ஓராண்டும் குரு மலி ஆற்றில் ஓராண்டும் நடைபெறுகிறது .

இதனால் இங்குள்ள இறைவனை  சங்கமேஸ்வரன் என்றும் பக்தர்கள் பகர்வர்.

வினோத வழிபாடு

சங்கம ஈஸ்வரன் பெயருக்கு இன்னும் ஒரு  சுவையான கதை !

இந்தக் கோவிலின் சிறப்பு வினோதம் , விசித்திரம் என்ன வென்றால் பூஜை செய்யும் அர்ச்சகர் இறைவனை  சிவன் , விஷ்ணு, தேவி என்ற பெயர்களில் அர்ச்சிப்பார். இதற்குப் பின்னாலும் ஒரு கதை உண்டு. தளிப்பரம்பா என்ற ஊரைச் சேர்ந்த  ஒரு மஹான் கேரளத்தில் பல கோவில்களுக்கு விஜயம் செய்து பல கோவில்களின் சக்தியை அவர் கொண்டுபோன சங்குக்குள் அடக்கினாராம். அவைகளைத் தங்கள் ஊர் தெய்வத்திற்குகே கொடுக்க அவர் இவ்வாறு செய்தார். தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது பழமொழி அல்லவா? அதற்கு ஏற்ப அவர் கொண்டு போன சங்கு கூடல் மாணிக்யம் சந்நிதியில் விழுந்து உடைந்தது. அப்போது அந்த சங்கிலுள்ள எல்லா சக்தியும் இறைவனிடத்தில் சங்கமம் ஆனதால் (இணைந்ததால்) இறைவனின் திருநாமம் சங்கம ஈஸ்வரனாக மாறியது .

XXXX

கோவிலின் தனிச் சிறப்புகள்

கேரளத்தில் எல்லா பெரிய கோவில்களிலும் 5 பூஜைகள் நடக்கும் ; இங்கு மூன்று வேளை பூஜைகள் மட்டும்தான் ( தமிழ் நாட்டில் ஆறு கால பூஜை!)

கோவிலில் பரிவார தேவதைகள் சந்நிதிகள் கிடையாது .

தாமரை, துளசி தெச்சி பூக்கள் போன்ற சில மலர்களை மட்டுமே பூஜைக்கு ஏற்பார்கள் ;

தீர்த்தக் குளத்தில் மீன்களைத் தவிர வேறு தவளை, தண்ணீர் பாம்பு முதலிய பிராணிகள்  இராது ;

வழுதுணங்காய் (கத்தரிக்காய்) நைவேத்யம் : ஒரு பக்தருக்கு வயிற்று வலி ஏற்பட்ட பொழு து இறைவனே கனவில் தோன்றி 101 கத்தரிக்காய்களைக் கொண்டுவந்து நைவேத்தியம் செய்யச் சொன்னாராம் அவர் அப்படிச் செய்தவுடன் வயிற்று வலியும் நீங்கியது . அதுமுதல் வழுதுணங்காயை இறைவனுக்குப் படைப்பது வழக்கம் ஆகிவிட்டது .

xxxx

கோவிலின் கலை வேலைப்பாடுகள்

திருச்குர் – எர்ணாகுளம்  பாதையில் உள்ள இரிஞ்சலகுடா ரயில் நிலையத்திலிருந்து   5 மைல் தொலைவில் ஊர் இருக்கிறது. பெரிய கிழக்கு வாயில் வழியாக கோவிலை அடையலாம் அந்த அலங்கார வாயிலில் பல கண்கவரும் சிற்பங்கள் உண்டு.

கோவிலுக்குள் இரு புறச் சுவர்களிலும் வண்ண ஓவியங்கள் நம்மை வரவேற்கும்; இடதுபுறம் கூட்டம்பலம் ; வலது புறம் குளம்;  ஸ்ரீ கோவில் வட்ட வடிவில் இருக்கிறது மேலே தங்க ஸ்தூபி; கூரை முழுதும் செப்புத் தகடுகள் ; வெளிப்புறச்ச சுவர்களில் அழகிய மரச் சிற்பங்கள்

xxx

திருவிழாக்கள்

துலா மாத (அக்டோபர்- நவம்பர்)  திருவோண நட்சத்திரத்தன்று அறுவடையான புது அரிசி ஆண்டவனுக்கு  அர்பணிக்கப்படும் இதைத் தொடர்ந்து பெரிய விருந்து நடக்கும். மறுநாள் முக்கிடி என்னும் ஆயுர்வேத மருந்து நைவேத்யம் நடக்கும். இது பல நோய்களுக்கு நல்ல மருந்து .

மேடம்/ மேஷ மாதத்தில் (ஏப்ரல் – மே ) ஆண்டு விழா நடக்கிறது கேரளத்திலுள்ளா எல்லாக் கோவில்களிலும் நடக்கும் யானைகள் பவனி, சங்கீதம் முதலியன இங்கும் உண்டு.. திருவாங்க்கூர் மஹாராஜா பிரதிநிதி தச்சுடைய கைமால் தலைமையிலுள்ள கமிட்டி,  கோவில் நிர்வாகத்தை நடத்துகிறது .

–subham—

Tags- கூடல் மாணிக்யம் , பரதன் கோவில், சங்கமேஸ்வரன், குலி பினி , தீர்த்தம், முக்கிடி, வைக்கையில் ,கைமால் ,

Leave a comment

Leave a comment