
Post No. 12,788
Date uploaded in London – – – 1 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
செம்பு பொன்னாகும் சிவாயநம வெனில்
செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
செம்பு பொன்னாகும் ஸ்ரீயும் கிரியும் எனச்
செம்பு பொன்னான திருவம்பலவே.
-திருமூலர்
உலகெங்கிலும் ரசவாத ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது. இரும்பையும் ஈயத்தையும் தங்கமாக மாற்ற முடியுமா என்று சென்ற நூற்றாண்ட்டில் பிரபல விஞ்ஞானிகள் ரகசியமாக ஆராய்ச்சி செய்துவந்தனர். தமிழ் சித்தர்களும், சைவ அடியார்களும் இது பற்றி நிறைய பாடியுள்ளனர்.
தற்கால விஞ்ஞானிகள் கூற்றுப்படி ஈயத்தையோ இரும்பையோ தங்கமாக மாற்ற முடியாது. யுரேனியம் போ ன்ற கதிரியக்க மூலகங்கள் மட்டும் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை போல பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் வேறு வேறு மூலகமாக மாறி ஈயத்தில் முடியும்.
சூப்பர் நோவா போன்ற நட்சத்திரங்களில் மூலகங்கள் உருவாகின்றன என்பது அவர்களின் கண்டுபிடிப்பு. இதற்கு கற்பனைக்கெட்டாத வெப்பமும் அணுப்பிளப்பும் அவசியம். பூமியில் அதைச் செய்யமுடியாது என்பது அவர்கள் கருத்து.
இந்துக்கள் இந்த விஷயத்தில் எல்லோரையும் முந்திவிட்டனர். ரஷ்ய விஞ்ஞானி மெண்டலிவ் Periodic Table மூலக அட்டவணை வெளியிட்ட பின்னர்தான் மெர்குரி mercury என்னும் பாதரசமும் தங்கமும் அடுத்தடுத்த அணு எண் உடைய மூலகங்கள் என்பது உலகிற்குத் தெரியும். ஆனால் இந்துக்கள் இதை ஞான திருஷ்டியில் கண்டுபிடித்து ரசவாத நூல்களில் பாதரசத்தையே அதிகம் குறிப்பிடுகின்றனர். நாகார்ஜுனர் என்னும் புத்தமத துறவி 2800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கனாதர் ஆகியோர் இதில் வல்லவர்கள். கெளடில்யர் ஈழுதிய அர்த்த சாஸ்திர நூலும் இதைக் குறிப்பிடுகிறது . துரதிருஷ்ட வசமாக அவ்வளவு ரசவாத நூல்களும் அழிந்துவிட்டன. நூல்களின் பட்டியல் மட்டும் கிடைக்கிறது.
ஆயினும் டில்லியில் ஒருவர் இதை செய்துகாட்டி காந்திஜி முதலியோரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். டில்லியில் மிகவும் புகழ்பெற்ற பழைய கோவில் லெட்சம்சுமி நாராயணர் கோவில்; பிர்லா நன்கொடையால் கட்டப்பட்டதால் பிர்லா மந்திர் Birla Mandir என்பார்கள். அங்கே இரண்டு கற்களில் ரசவாத வைபவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதை பகவான்தாஸ் என்பவர் 2007ல் எழுதிய நூலில் அப்படியே வெளியிட்டார். பின்னர் டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற பத்திரிகைகள் அதைக் காப்பி அடித்தன. இதோ பகவான்தாஸ் எழுதிய விஞ்ஞான என்சைக்ளோபீடியாவில் தரும் தகவல்::-

Soapnut Tree
1941 மே மாதம் 27ம் தேதி பண்டிட் கிருஷ்ண லாலா சர்மா எங்கள் முன்னிலையில் செய்தது . இது. டில்லி பிர்லா மாளிகையில் நடந்தது; அவர் ஒரு தோலா (சுமார் 12 கிராம்) பாதரசத்தை 45 நிமிடங்களில் ஒரு தோலா தங்கமாக மாற்றினார்.அவர் சீயக்காய் மரக் காய் ஒன்றுக்குள் பாதரசத்தை விட்டார். பின்னர் அத்தோடு மூலிகைப்பொடி, மஞ்சள் நிறமுள்ள பொடிகளை கொஞ்சம சேர்த்தார். அதன் மீது களிமண்ணைப்பூசி கரி அடுப்பில் 45 நிமிடங்களுக்கு வைத்தார். கரி எரிந்து சாம்பலானாவுடன் அதன் மீது தண்ணீரைத் தெளித்தார். பாதரசம் இருந்த இடத்தில் தங்கக்கட்டி இருந்தது. ஒரு தோலாவை விட கொஞ்சம் எடை குறைவு என்ன பொடிகளை சேர்த்தார் என்பதையும் அவர் சொல்லவில்லை. இந்த பரிசோதனைக் காலம் முழுதும் அவர் 15 அடிகள் விலகியே நின்றார். அடுப்பு பக்கம் போகவே இல்லை . நாங்கள் எல்லோரும் வியப்படைந்தோம்
அதே கோவிலில் இன்னும் ஒரு கல்வெட்டுப் பலகை உள்ளது அதில் அவர் 1942ம் ஆண்டு செய்த அதிசயம் உள்ளது அப்போது அவர் ஒரு மருந்துச் சரக்கை பாதரசத்துடன் சேர்த்து அரை மணி நேரத்தில் தங்கத்தை உற்பத்தி செய்தார்
இது போல 1943ம் ஆண்டில் ரிஷிகேஸ் முதலிய இடங்களிலும் நடந்தது. கிருஷ்ண லாலா ரசவைத்யா என்பவர் மஹாத்மா காந்தி முதலியோர் முன்னிலையில் தங்கம் செய்து காட்டினார். அப்போது உருவாக்கப்பட்ட தங்கம் காங்கிரஸ் கட்சியின் சுதந்திரப் போராட்டத்துக்கு நன்கொடையாக கொடுக்கப்பட்டது
விக்கிப்பீடியாவில் ரசவாதத்தில் ஈடுபட்ட அல்லது அதுபற்றிப் பாடியவர்களின் பட்டியல் உள்ளது சம்பந்தர், சுந்தரர் முதலியோர் மர்மமான முறையில் தங்கம் பெற்ற செய்திகளும் பெரிய புராணத்தில் வருகிறது.

ரசவாத நூல்களின் பட்டியல் (ஆங்கிலத்தில்)

–subham—
Tags- ரசவாத நூல், தங்கம் பாதரசம், டில்லி கோவில் கல்வெட்டு, மூலகம் , திருமூலர்