வைக்கம் போராட்டமும் திராவிட பித்தலாட்டமும்-Part 2 (Post.12,787)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,787

Date uploaded in London – –  –  1 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

திருவநந்தபுரத்தில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் மஹாத்மா காந்தி, வைக்கம் போராட்ட வீரர்கள் யார் யார் என்று பட்டியல் இடுகிறார்.:

13-1-1937

“உங்கள் தாய்மொழியில் பேச வேண்டும் என்று எனக்கு ஆசை; அருமையான இசை போலக் கேட்கும் உங்கள் (மலையாள) மொழியை இன்னும் கற்றுக்கொள்ள முடியாதது வருத்தமாக இருக்கிறது;   அதே நேரத்தில் தேசீய மொழியான ஹிந்துஸ்தானியை நீங்கள் அறியாததும் வருத்தம் அளிக்கிறது. ஆகையால் மொழிபெயர்ப்பினை நாட வேண்டி இருக்கிறது.

விழாக் கொண்டாட்டக் கூட்டத்துக்கு தலைமை தாங்க என்னை அழைத்தமைக்கு நன்றி நீங்கள் கொடுத்த வரவேற்பு பத்திரத்துக்கு நன்றி. நீங்கள் உங்கள் மனமார்ந்த நன்றி.யை ஏற்கனவே திருவாங்கூர் மஹாராஜாவுக்கும் மஹாராணிக்கும் சசிவோத்தம ஸர் சி பி ராமசுவாமி அய்யருக்கும் தெரிவித்துவிட்டீர்கள் அதிலும் உங்கள் சந்தோஷத்திலும் பங்குகொள்ள எனக்கும் ஆசை. உங்கள் முகங்களில் அந்த சந்தோஷம் தெரிகிறது. ஏதோ ஒரு  காலத்தில் உங்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமை ( கோவிலுக்குள் எல்லா ஜாதியினரும் செல்லும் உரிமை) இப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. யார் எப்பொழுது இந்த உரிமையைப் பறித்தார்கள் என்று  நமக்குத் தெரியாது. ஆனால் வைக்கம் போராட்ட வரலாற்றினை நீங்கள் அழகாக பட்டியலிட்டுவிட்டீர்கள் .

காலஞ் சென்ற புனிதர் நாராயண குருவுக்கு நீங்கள் நன்றி சொன்னீர்கள்; துணிச்சல் மிக்க மாதவனுக்கு நன்றி சொன்னீர்கள் இந்த நேரத்தில் மேலும் இரண்டு பேரை நினைவு கூறுவோம்; .காலஞ் சென்ற கிருஷ்ண சுவாமி (அய்யர்) ,அவருக்கே உரித்தான பாணியில், கீத  கோவிந்தத்திலிருந்து பிராரத்தனை பாடுவார் (காந்திஜியின் பிரார்த்தனைக் கூட்டங்களில் ) . அவர் தீவிர பிராமணன்; சமயப்பற்றுமிக்கவர்; ஆயினும் எல்லா ஜாதி இந்துக்களும் கோவிலுக்குள் வரவேண்டும் என்று அவர் போராடினார் . இப்போது நம்மிடையே இருக்கும் கேளப்பன் நாயரையும் நான் மறக்கவில்லை. இன்று நாம் காணும் வைபவத்துக்கு இவர்கள்தான் வித்திட்டார்கள் .

நம்பூதிரி  பிராமணர்கள்

நமக்கு உதவிய பழைய சம்பிரதாயக்காரர்களையும் நாம் மறக்கக்கூடாது அவர்களை நம் பக்கம் இழுப்பதுதான் எனக்கு கஷ்டமாக இருந்தது.அவர்களும் மற்ற பழம் சம்பிரதாயக்காரர்களும்  காலத்தின் உண்மை நிலையை அறிந்திராவிடில் மகாராஜாவின் பணி நடந்திராது.

இந்த நேரத்தில் மூத்த மஹாராணியையும் நான் நன்றியுடன் நினைவு கூறுகிறேன். அவரை பல ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தேன். வைக்கம் சத்தியாக்கிரகத்துக்கு அவரும் அவருடைய கணவரும் ஆதரவு தெரிவித்தனர். இன்று அவரும் மகிழ்ச்சிக்கடலில் மிதக்கிறார் என்று நம்புகிறேன்.

Xxxx

எட்டமானூர் சொற்பொழிவு 19-1-1937

அழகான வாசகம் அடங்கிய  சம்ஸ்க்ருத மொழி வரவேற்பினையும் வற்கலை  உடையையும் அளித்தமைக்கு மிக்க நன்றி ; இந்த  மரவுரி(வற்கலை) ஆடையை நான் அணிவேன் என்று சொல்லமாட்டேன். ஏனெனில் இது மிகவும் மதிப்புடையது . ஆகையால் இதை மகன்வாடி கிராமத்தில் அமையும் கிராம கைவினைப் பொருட்கள் கண்காட்சியில்  வைக்கப்போகிறேன். அந்த மியூசியத்தை இது அலங்கரிக்கும்

(வற்கலை என்னும் மரவுரியை காட்டிற்குச் சென்ற ராம லட்சுமணர்கள் அணிந்தனர்; பரதனும் அதே உடையில் வந்ததை கம்பன் அழகாக பாடுகிறான்)

இங்குள்ள ஆலயத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்கள்; என்னுடன் ஒரு புலைய ஜாதிப்பையனும் துணிச்க்கலாக கோவிலுக்கு வந்தான் . இப்படி ஒரு காட்சியை நான் காண்பேன் என்று சில மாதங்களுக்கு  முன்னர் நான் நினைத்தும் பார்த்திருக்கமுடியாது.

இதில் கடவுளின் கைவண்ணத்தை நான் காண்கிறேன் பல பொதுக்கூட்டங்களில் சொல்லி வருவதை இங்கும் சொல்கிறேன் ; கோவிலுக்குள் எல்லா ஜாதியினரும் நுழைந்து கும்பிடலாம் என்ற மகாராஜாவின் பிரகடனத்துக்கு இறைவனே காரணம்! கடவுள் தான் மஹாராஜா கைகள் மூலம் பிரகடனத்தில் கை எழுத்திட்டுள்ளார்.

xxxxx

பந்தளத்தில் காந்திஜி சொற்பொழிவு 20-1-1937

கேரளத்தில் நான் ஒப்பற்ற ஒரு விஷயத்தைக் காண்கிறேன்  எங்கும் ஊசி விழுந்தாலும் கேட்கும் Pin Drop Silence  அளவுக்கு அமைதி காக்கிறார்கள் கட்டுக்கோப்புடன் இருக்கிறார்கள்   என்னுடைய கேரள விஜயத்தை நான் மத சமபந்தமான யாத்திரையாகவே கருதுகிறேன் .

நேற்று இதே நேரத்தில் நான் கோட்டயத்தில் சொற்பொழிவாற்றினேன்; கடல் போலக் கூட்டம் ; நான் பயந்து கொண்டு நடுங்கிக்கொண்டே மேடை ஏறினேன்; ஏனெனில் மைக் Microphone  இல்லாத கூட்டம் அது. கூட்டத்தினை ஏற்பாடு செய்தோர் எவ்வளவோ முயன்றும் மைக் வரவில்லை. கூட்டத்தினர் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக அமைதி காத்தனர். இதை நான் ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் இந்தக்கூட்டங்கள் எல்லா வற்றிலும் மதம் சமபந்தப்பட்டிருக்கிறது எல்லோரும் கோவிலுக்குள் வரலாம் என்று மன்னர் வெளியிட்ட பிரகடனமே தெய்வீக செயல் என்றே கருதுகிறேன். இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டால் என்ன நிகழுமோ ஏது நடக்குமோ என்று பயப்பட்டிருப்பார்கள். இங்குள்ள இளம் வயது மஹாராஜா துணிச்சலாக பிரகடனம் செய்தார்.

xxxx

வீரர்கள் பட்டியல்

காந்தி நிறுவனமான நவஜீவன் காரியாலயம் மூலம் மஹாதேவ் தேசாய், வெளியிட் ட   புஸ்தகத்தில் திராவிட கன்னட ராமசாமி நாயக்கர் பெயர் எங்குமே இல்லை; அனால் தமிழ்நாட்டில் , திராவிட பித்தலாட்டக்காரர்கள்  ஏதோதோ சொல்லி ஊரை ஏமாற்றி வருகிறார்கள். கூட்டத்தை வேடிக்கைபார்க்கப்  போனவன் எல்லாரும் புரட்சி வீரர் என்று சொன்னால்,   உண்மையான புரட்சி வீரர்கள் உலகை விட்டே ஓடிப்போய் விடுவார்கள் . இந்தப் புஸ்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும். முழுவதும் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் ..

வீரர்கள் பட்டியல்

T K Madhavan டி .கே மாதவன்

T R Krishnaswami Iyer டி .ஆர் .கிருஷ்ணசுவாமி ஐயர்

Kelappan Nair கேளப்பன்  நாயர்

C K Parameswaram Pillai சி. கே. பரமேஸ்வரன் பிள்ளை

M Govindan எம் .கோவிந்தன்

Ramachandran  ராமசந்திரன்

Aiyyan Kali அய்யன் காளி

Raman Pillai ராமன் பிள்ளை

Padmanabha Pillai பத்மநாப பிள்ளை

Yogakshema Sabha of  Malayali  Brahmins – Nambudiris மலையாளி நம்பூதிரி பிராமணர்களின் யோக க்ஷேம சபை

Kshatriya Mahasabha க்ஷத்ரிய மகாசபை

Nair Service Society நாயர் சர்வீஸ் சொசைட்டி NSS

Kesava Menon  கேசவ மேனன்

C Rajagopalachari சி ராஜ கோபாலாச்சாரி  (ராஜாஜி)

C P Ramaswami aiyyar சி.பி ராமசுவாமி ஐயர்

S N D P Yogam with Shri Narayan Guru எஸ். என். டி .பி .யோகம், நாராயண குரு அமைப்பு

Dr M E Naidu , Nagerkoil டாக்டர் எம்.இ . நாயுடு , நாகர்கோவில்

இவர்களில் நம்பூதிரி பிராமணரின் Nambudiri Yogakshema Sabha யோக க்ஷேம சபை, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது எல்லோருக்கும் வியப்பைத் தந்தது என்று மகாதேவ தேசாய் முன்னுரையில் குறிப்பிடுகிறார்

இவர்கள் எல்லோரும் கிளர்ச்சியைத் துவங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே, பாரதி இதே கருத்தைப் பாடி தூங்கிக்கொண்டிருந்தவர்களை உசுப்பிவிட்டதை இந்துக்கள் நன்றியுடன் நினைவு கூறவேண்டும் .

விடுதலை விடுதலை விடுதலை ! பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை.

—SUBHAM—

TAGS- வைக்கம் போராட்டம், திராவிட பித்தலாட்டம், வைக்கம் வீரர்கள், ஐயர் பங்கு

Leave a comment

Leave a comment