நிறைகுடம் தளும்பாது! (Post No.12,792)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,792

Date uploaded in London –  –  3 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

நிறைகுடம் தளும்பாது!

ச.நாகராஜன் 

நிறைகுடம் தளும்பாது! 

நிறைகுடம் தளும்பாது. ஆனால் அரைகுறையாக நிரப்பப்பட்ட குடமோ கடகடவென சத்தமிட்டுக் கொண்டே இருக்கும்.

இது எதைக் குறிக்கிறது. நன்கு படித்த ஒருவன் அதிகம் படிக்காதவரைப் பார்த்து கர்வப்பட மாட்டான். ஆனால் அரைகுறையாகப் படித்தவனோ தன்னைப் பற்றித் தம்பட்டம் அடித்துக் கொள்வான். (தனக்குத் தெரியாததே இல்லை என்பான்.)

சம்பூர்ண கும்போ ந கரோதி சப்தமர்தோ கடோ

கோஷமுபைதி நூனம் |

வித்வான்குலீனோ ந கரோதி கர்வம்

குணைர்விஹீனா  பஹூ ஜல்பயந்தி ||

பாம்பைக் காட்டிலும் கொடியவன் வில்லன்! 

ஒரு அழகிய சுபாஷிதம். பாம்பையும் வில்லனையும் ஒப்பிடுகிறது.

பாம்பு கொடியது. வில்லனும் கொடியவன். ஆனால் வில்லனோ பாம்பை விட சற்று அதிகம் கொடியவன். எப்படி? பாம்போ ஒருவனை மட்டுமே கொல்கிறது. ஆனால் வில்லனோ அநேகம் பேரைக் கொல்கிறான்.

இதை விளக்கும் சுபாஷித ஸ்லோகம் இது:

சர்ப: க்ரூர: கல: க்ரூர: சர்பாத் க்ரூரதர: கல: |

சர்ப ஏகாகினம் ஹந்தி கல: சர்வவிசாஷக: ||

வீடு வீடாவது இல்லத்தரசியாலேயே!

 ஒரு வீடை வீடு என்று எப்போது சொல்ல முடியும். அது வெறும் கட்டிடமாக இருக்கும் போது அதை வீடு என்று சொல்ல முடியாது. ஆனால் அந்த வீட்டில் இருக்கும் இல்லத்தரசியே அதை வீடாக ஆக்குகிறாள். அப்படி ஒரு இல்லத்தரசி இல்லாத வீடு காட்டிற்குச் சமானம்.

ந க்ருஹம் க்ருஹமித்யாஹ்ர்க்ருஹிணி க்ருஹமுச்யதே |

க்ருஹம் து க்ருஹிணிஹீனம் காந்தாரமிதி மன்யதே ||

வளத்திற்கான எரிபொருள்கள் ஏழு

 வளத்தை ஊக்குவிக்கும் எரிபொருள்கள் ஏழு.

அவையாவன : 1) உறுதி 2) பொறுமை 3) தயை 4) சுத்தம் 5) காருண்யம் 6) மிருதுவான பேச்சு 7) நண்பர்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருக்கும் தன்மை

இந்த ஏழும் வளத்தை ஊக்குவிக்கும் எரிபொருள்களாகும்.

த்ருதி: க்ஷமா தயா சௌசம் காருண்யம் வாக்நிஷ்டூரா |

மித்ராணாம் சானபித்ரோஹ: சப்தைதா: சமித: ச்ரிய: ||

 மனிதனை உயர்த்தும் எட்டு குணங்கள் 

மனிதர்களின் குணாதிசயத்தை உயர்த்த எட்டு குணங்கள் உள்ளன.

அவையாவன: அறிவு, உயர்ந்த குலம், கட்டுப்பாடு, கல்வி, வீரம்,

வார்த்தையில் கட்டுப்பாடு, தனது தகுதிக்குத் தக்கபடி தானம், நன்றி.

ஆக இந்த எட்டுக் குணங்கள் இருந்தால் ஒரு மனிதன் உயர்ந்தவனாக ஆகி விடலாம்.

 அஷ்டௌ குணா: புருஷம் தீபயந்தி ப்ரக்ஞா ச

கௌல்யம் ச தப:  ச்ருதம் ச |

பராக்ரமச்சாபஹுபாஷிதா ச தானம் யதாசக்தி

க்ருதக்ஞதா ச ||

ரகசியமாகக் காக்க வேண்டிய விஷயங்கள் ஒன்பது

 ஆயுர்வித்தம் க்ருஹசித்ரம் ரஹஸ்யம் மந்த்ரமோஷதம் |

தபோ தானாவமானௌ ச நவ கோப்யானி காரயேத் ||

ஒன்பது விஷயங்களை ஒருவன் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அவையாவன : 1) ஒருவனின் ஆயுள் 2) செல்வம் 3) வீட்டின் நிலைமை (ஏதேனும் சொல்லக்கூடியதாக இல்லாமல் இருந்தால் சொல்லக் கூடாது) 4) ரகசியம் 5) மந்த்ர (உபதேசம்)

6) மருந்து (எடுத்துக் கொள்ளும் சிகிச்சை மற்றும் மருந்து) 7) தவம் 8) தானம் 9) தான் பட்ட அவமானம்

***

Leave a comment

Leave a comment