
Post No. 12,793
Date uploaded in London – – – 3 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 22
கோவில் எண்கள்- 22, 23
பாடல் பெற்ற வைணவ தலங்கள் திருவல்லா, திருக்கடித்தானம் கோவில்கள்
இவை இரண்டும் 108 வைணவ தலங்களின் பட்டியலில் உள்ளன
இரண்டு ஸ்தலங்களையும் திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் செய்துள்ளார்.
திருவல்லா க்ஷேத்திரத்தை நம்மாழ்வாரும் பாடியதால் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கோவில் என்பது உறுதியாகிறது.
ஒவ்வொரு கோவிலையும் தனித் தனியே சேவிப்போம்
XXXX

திருவல்லா
திருவல்லா திருவாழ் மார்பன் கோவில்
கொல்லம்- எர்ணாகுளம் ரயில் மார்க்கத்தில் திருவல்லா ரயில் நிலையம் இருக்கிறது அங்கிருந்து 5 கி.மீ உள்ளே சென்றால் கோவிலை அடையலாம்.
திருவல்லா அல்லது செங்கன்னூரில் தங்கினால் குறைந்தது 6 வைணவ திருக்கோவில்களில் பெருமாளை சேவித்து விடலாம். . கோட்டயத்திலிருந்து 25 கி.மீ; செங்கனூரிலிருந்து 10 கி.மீ .
ஸ்ரீ வல்லப க்ஷேத்ரம் என்று சம்ஸ்க்ருதத்தில் சொல்லுவார்கள்
திருவாழ் மார்பன் கோவில் என்பது சுருங்கி பேச்சு வழக்கில் திருவல்லா ஆகிவிட்டது
மூலவர் – கோலப் பிரான் , திருவாழ் மார்பன் ஸ்ரீ வல்லபன்
எட்டு அடி உயரத்தில்நின்ற திருக்கோலம், கிழக்கு நோக்கிய பெருமாள்
தாயார் – செல்வக்கொழுந்து நாச்சியார் , வாத்சல்ய தேவி
பெருமாள் பெயரும், தாயார் பெயரும் அழகான தமிழ் சொற்கள்
தீர்த்தம்- பம்பா நதி, கண்டாகர்ண தீர்த்தம்
விமானம் – சதுரங்க கோல விமானம்
XXXXX
சிறப்பு அம்சங்கள்
சுதர்சன சக்ரம் ஸ்தாபிக்கப்பட்டதால் மந்திர சக்தி அதிகமுள்ள இடம் .
பொன் தகடு போர்த்திய ஜொலிக்கும் த்வஜ ஸ்தம்பம் / கொடி மரம் நம்மை வரவேற்கும் .
கோவிலைப் பற்றிய 2 கதைகள்
1.கண்டாகர்ணன் என்பவன் தீவிர சிவ பக்தன். தன் காதுகளில் சிவ நாமம் தவிர வேறு எதுவும் விழாமல் இருக்க இரண்டு TWO BLUE TOOTHS ப்ளூ டூத்களை காதில் மாட்டி இருந்தான். அதாவது இரண்டு மணிகள் ; கண்டா என்றால் ஒலி எழுப்பும் BELL மணி; கர்ணன் என்றால் காது EAR . சிவ நாமம் தவிர வேறு இறைவன் பெயர் கேட்கும் இடங்களைக் கடந்து செல்லுகையில் தலையை அசைப்பான். அது மணி ஒலியை எழுப்பும் .
இவனது குருட்டுத்தனமான பக்தியைக் கண்ட இறைவன் அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயில் மண்ணு என்பதை உபதேசித்தார் ; சிவ பெருமானே அவனுக்கு எட்டெழுத்து மந் திரமான ஓம் நமோ நாராயணாய என்ற அஷ்டாக்ஷரத்தை ( 8 எழுத்து) உபதேசம் செய்தார் . அவன் இங்கு வந்து பெருமாளை வழிபட்டு முக்தி அடைந்தான் என்பது முதல் சம்பவம் .
சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்பதை உணர்த்த சிவனே, சங்கர நாராயணன் ஆகவும் ஹரிஹரன் ஆகவும் தோன்றினார்
(கண்டா கர்ணன் என்ற பெயரில் கேரள காவுகளில் ஒரு தெய்வம் வணங்கப்படுகிறது. அது வேறு)
2. சங்கர மங்கலத்தமை என்னும் பெண்ம ணி அருந்ததி போல பத்தினி; அந்த பதிவிரதை ஏகாதசி விரதம் இருந்து துவாதசி பாரணை செய்யும் விஷ்ணு பக்தை ; துவாதசியன்று ஒரு பிரம்மசாரியை அழைத்து விருந்தும் படைப்பாள் ; இதற்கு தோலகாசுரன் என்பவன் இடையூறு செய்து வந்தான் . ஒருமுறை பகவானே பாரணைக்கு வரும் பிரம்மச்சாரி போல வந்து அசுரனை வீழ்த்தினார் அப்போது விஷ்ணு அந்த பெண்ணுக்கு முழு தரிசனம் கிடைக்காதபடி மான் தோல் ஆடை (கிருஷ்ணாஜினம் ) போர்த்தி இருந்தார். பதிவ்ரதையின் வேண்டுகோளின் படி மார்பில் உறையும் லட்சுமியையும் தரிசிக்க அருள்புரிந்தார். அந்தப்பெண்ணும் பெருமாளையும் தாயாரையும் ஒரு சேரக் கண்டு பரவசம் அடைந்தார். இந்தக் காட்சியை அருளிய தலம் ஆதலால் இதை திருவல்லா (திரு வாழ் மார்பன் ) என்பார்கள் .
மங்களா சாசனம்
திருமங்கை ஆழ்வார் – 1808-1817, 2674
நம்மாழ்வார் – 3205-15
XXXXX

திருக்கடித்தானம் அற்புத/ அம்ருத நாராயணன் கோவில்
இந்தக் கோவில் கோட்டயம்- திருவல்லா சாலையில் இருக்கிறது ; ரயிலில் சென்றால் செங்கணாச் சசேரியில் இறங்கி உள்ளே இரண்டு மைல்கள் பயணம் செய்தால் கோவிலை அடையலாம்.
மஹாபாரத கால பாண்டவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கோவிலைப் புதுப்பித்ததை நாம் அறிவோம். அவ்வகையில் சகாதேவனால் திருப்பணி செய்யப்பட் ட கோவில் இது .
1.தருமன் திருப்பணி செய்த கோவில் –திருச் சிற்றாறு / திருச்செங்குன்றூர்
2.பீமன் திருப்பணி செய்த கோவில்- திருப்புலியூர்
3.அர்ஜுனன் திருப்பணி செய்த கோவில்- ஆரண்முழா / திருவாறன் விளை
4.நகுலன் திருப்பணி செய்த கோவில் — திருவண் வண்டூர்
5.சகாதேவன் திருப்பணி செய்த கோவில்–திருக்கடித்தானம்
மூலவர் பெயர் – அற்புத/ அம்ருத நாராயணன்
தாயார் – கற்பகவல்லி
தீர்த்தம் – பூமி தீர்த்தம்
விமானம் – புண்யகோடி விமானம்
ப்ரத்தியட்சம் ஆனது – ருக்மாங்கதன் முன்னிலையில்
தல வரலாறு

STORY OF SPACE TRAVEL
ருக்மாங்கதன் என்பவன் சூரிய வம்சத்து அரசன்; ஏகாதசி விரத த்தை நாட்டு மக்களுக்கு கட்டாய சேவை ஆக்கி வரலாற்றில் இடம்பெற்றவன் ஒரு கடிகை நேரத்தில் (24 நிமிடங்கள்) தவம் செய்தாலே விஷ்ணுவை அடையலாம் என்பதைக் காட்டிய மன்னன்.
மன்னர் அரண்மனை தோட்டத்தில் இருந்த மலர்களை தேவர்கள் திருடி இறைவனுக்கு அர்ப்பணித்தனர். இதை அறிந்த மன்னர் அவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டான். திருடியவர்கள் தேவ லோகத்துப் பிரஜைகள் என்று அறிந்தவுடன் திரும்பிப்போங்கள் என்று கட்டளையிட்டான் தேவ லோகத்திலிருந்து இங்கு வந்த தேவர்கள், திரும்பிச் செல்ல முடியாமல் தவித்தனர். அப்பொழுது கடிகை நேரத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொள்ள 3 இடங்கள்தான் ROCKET LAUNCH CENTRES பாரத நாட்டில் உள்ளன என்பதை அறிந்தனர் ; ஆயினும் விண் வெளிப்பயணம் INTER GALACIC TRAVEL மேற் கொள்ள எரிபொருள் FUEL வேண்டுமே என்று தவித்தனர். அப்பொழுது ருக்மாங்கதன் என்பவன் ஏகாதசி விரதம் இருந்து ஏராளமான தபோ சக்தியை வைத்துள்ளான். அதனை நீங்கள் கெஞ்சிக் கதறி வாங்குங்கள் என்று அசரீரி கேட்டது. ருக்மாங்கதன் பெரிய தியாகி. தேவர்கள் கேட்டதைக் கொடுத்தான்; இதனால் தேவர்கள் எளிதில் விண் வெளியில் ஏகி , தேவ லோகத்தை அடைந்தனர். அந்த ராக்கெட் தளம் இது என்பதால் ருக் மாங்கதன் என்ற மன்னனின் பெயர் இந்த தலத்துடன் சம் ப்ந்தப்பட்டுள்ளது
நொடிப் பொழுதில் அல்லாவிடிலும் ஒரு கடிகைப் பொழுதில் தியானம் செய்தால் பலன் கொடுக்கும் தலம் இது .
STORY OF PUNCTUALITY
திருக்கடித்தானம் பற்றிய இன்னும் ஒரு கதை; கடிகைப் பொழுது என்று பெயருள்ள கோவிலில் ஒரு கோவில் சிப்பந்தி கோவில் கதவைத் திறக்க தாமதம்ஸ் செய்தான் ; அவனைக் கல்லாகப் போகும்படி சபித்தனர்; அவனுடைய கல் உருவத்தையும் கோவில் வாசலில் காணலாம். எல்லா நற்குணங்களையும் மக்கள் அறிய இப்படி ஒவ்வொரு கோவிலிலும் ஒரு கதை இருக்கும். பங்க்சுவாலிட்டி PUNCTUALITY என்னும் நேரம் தவறாமையைக் கற்பிக்க சிறுவர்களுக்கு இதைக் காட்ட வேண்டும் .
கழுவெட்டிக் கல்லு கதை ANTI CORRUPTION STONE

செம்பகசேரியை ஒரு குறு நில மன்னர் ஆண்டு வந்தார் ; அவர் ஒரு பிராமணர்/ நம்பூதிரி ; அவர் படாடோபமும் அகந்தையும் மிக்கவர்; தான் பெரிய ஆள் என்பதைக் காட்ட, வேண்டுமென்றே விதிகளை மீறுவார் ; ஒரு முறை கோவில் மூடிய பின்னர் வந்தார்; கோவில் சேவகன் மீண்டும் கதைவத் திறக்க தயங்கி நின்றான்; மன்னர் அவனுக்கு பணம் கொடுத்து கோவிலைத் திறக்கச் சொன்னார்; இதை அறிந்த பெரிய மன்னர் சேவகன் தலையை வெட்ட உத்தரவிட்டார் . குறுநில மன்னனும் இறந்தான். அந்த விஷயத்தை நினைவுபடுத்த , மக்களை எச்சரிக்க மன்னரின் கழுத்துவெட்டிய சிலை உள்ளது.
இந்தக் கோவிலில் நரசிம்மன், கிருஷ்ணன் சந்திரன், சந்நிதிகளும் இருக்கின்றன .
கருவறையின் தெற்குப்பகுதியில் உள்ள தட்சிணாமூர்த்தியையும் விநாயகரையும்சிறிய ஜன்னல் மூலமாகத்தான் தரிசிக்க முடியும்.
நரசிம்மரின் உக்கிரத்தைக் குறைக்க பால் பாயாசம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. நரசிம்மருக்கு பூஜைகள் நடைபெறும்போது ‘நாராயணீயம்’ சொல்லப்படுகிறது.
கேரள பாணி கட்டிடக் கலை ; 108 வைணவ தலங்களில் ஒன்று.
இக்கோவிலைச் சுற்றி சிதலமடைந்த மண்டபம், மற்றும் வெளிப்புற வாயிற் கதவருகேயுள்ள சுவர்ச் சிற்பங்களில் பெண்கள் குடைபிடித்து நடன மிடுதல் போல சிற்பங்கள் இருக்கின்றன .
திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் – 3502- 12
—சுபம்—-
TAGS பாடல் பெற்ற, வைணவ தலங்கள், திருவல்லா, திருக்கடித்தானம்
கேரள மாநிலத்தின், புகழ்பெற்ற 108 கோவில்கள், PART 22
கோவில் எண்கள்- 22, 23