மஹாத்மா காந்தியின் கிண்டல், நக்கல், பகடி ,ஜோக்ஸ் -1 (Post No.12,794)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,794

Date uploaded in London – –  –  3 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxxxx 

காந்திஜி மஹா நக்கல் பேர்வழி; அவர் கேட்கும் கேள்விகளை சீரியஸாக எடுத்துக்கொண்டு அன்பர்கள் பதில் சொல்லுவார்கள். அவரோ பொக்கை வாயால் ஒரு சிரிப்பு சிரித்த பின்னரே அவர் கிண்டல் செயகிறார் என்பது புரியும்.

காந்தியின் பெர்சனல் செக்ரடரி / அந்தரங்க செயலாளர் மஹாதேவ தேசாய்.  காந்தியின் எல்லா சொற்பொழிவுகளையும் புஸ்தகமாக வெளியிட்டவர். இவர் 1937ல்  வெளியிட்ட திருவாங்கூர் இதிகாசம் என்ற நூல்  திராவிடகன்னட ராமசாமி நாயக்கரின் முகத்திரையை கிழித்துவிட்டது; 251 பக்க நூலில் 20 பேருக்கு மேல் பாராட்டப்பட்டுள்ளனர். இந்த வைக்கம் சத்திய கிரகத்துக்கு புரட்சி என்ற மொழியை சூட்டியவரும் காந்திதான் . அந்தப் புஸ்தகத்திலோ காந்திஜியின் சொற்பொழிவிலோ திராவிட நாயக்கர் பெயர் மருந்துக்கும் இல்லை

எல்லா இந்துக்களும் திருவாங்கூர் சமஸ்தானத்துக்குச் சொந்தமான 2000 க்கும் மேலான கோவில்களில் செல்லலாம் என்ற பிரகடனத்தை திருவாங்கூர் மகாராஜா 12-11- 1936-ல் வெளியிட்டார். அந்த வெற்றி விழாவில் பேசுவதற்கு காந்திஜி அழைக்கப்பட்டார். கேரளத்துக்கு இந்த முறை வருவதை அவர் ஒரு சமய யாத்திரை என்றே கருதினார். 24 கேரள கோவில்களுக்குச் காந்திஜி சென்றார்..

தில்ரூபா கொண்டுவா !

1937 ஜனவரி 10ஆம் தேதி புனே நகரிலிருந்து காந்தி, தேசாய் குழு புறப்பட்டது .காந்தியின் உறவினர் கனு காந்தி என்னும் இளைஞரை காந்தி அழைத்து ,

ஏய் , தில்ரூபா இசைக்கருவியை மறக்காமல் எடுத்துக்கோ என்றார்

உடனே தேசாய் இடை மறித்து ,

ஏய் காந்தி, எப்பவும் வேண்டாத விஷயங்களைக் கொண்டு வராதே என்று எங்களை கண்டிப்பாய். நான் ஏற்கனவே ராட்டை முதலிய நூல் நிற்கும் விஷயங்களை பாக்PACK  செய்துவிட்டேன். தில்ரூபா எதுக்கு ? என்றார்

உடனே காந்தி சொன்னார் ,

அப்படியா , என்று கேட்டு சிரித்துவிட்டு, அந்த நூல் சம்பந்தமான கட்டைத்தறிகளை எல்லாம் கீழே போட விரும்பினால் போடு;. ஆனால் தில்ரூபா கட்டாயம் வேணும் . இப்போது திருவாங்கூருக்குச் செல்லும் பயணமொரு சமய  யாத்திரை . நாம் எல்லா இடமும் துளசி ராமாயணம் பாராயணம் செய்ய வேண்டும்; ஒரு வேளை , கடவுள் சித்தம் அதுவானால் , பொது இடங்களிலும் இராமாயண பாராயணம் நடக்கக்கூடும். அங்கு தில்ரூபா கிடைக்காமல் போகக்கூடும் என்றார் .

இதைக்கேட்டதும் மஹாதேவ தேசாய் மெளனம் ஆகிவிட்டார்..

மனத்தளவில் அவர் என்ன செய்ய வேண்டும் என்று காந்திஜி முன்னரே திட்டமிட்டுவிட்டது இதில் தெரிகிறது  அப்படித் திட்டம் போட்ட வாறே 24 கோவில்களுக்குச் சென்று அவற்றை வானளாவ புகழ்ந்தும் பேசினார்

XXXXX

காந்தி,  2 பசு மாடுகள் வேணும் !

திருவனந்தபுரம் அனந்த பத்ம நாப சுவாமி கோவிலில் பிரம்மாண்ட மான பொக்கிஷங்களை பார்த்துவிட்டு காந்திஜி ஹரிஜன பையன்கள்  ஹாஸ்ட லுக்கு  வந்தார். கோவிலில் எல்லாம் தங்கக் குடங்கள்!!!

அப்போது வைக்கம் போரட்டத்தில் முக்கியப்பு ள்ளியான கோவிந்தன் சொன்னார்:

காந்திஜி எங்களுக்கு 2 பசுமாடுகள் மிகவும் தேவைப்படுகிறது; குஜராத்திலிருந்து அனுப்புங்களேன் .

காந்திஜி, சிரித்துக்கொண்டே, அதுக்கென்ன அனுப்புகிறேன்; பணத்தை முதலில் கொடு .

எங்ககிட்ட பணமே இல்லையே என்றார் கோவிந்தன்.

 அட திருவந்திபுரம் கோவில் முழுக்க தங்கக்குடங்களைப் பார்த்தேன் ஒன்றைத்  திருடிக்கொண்டு வா என மேலும் பலமாக சிரித்துக் கொண்டே சொன்னார்.

திருவாங்கூர் போன்ற இந்து சமஸ்தானத்தில் திருட்டு என்பதே கிடையாது . பிராமணர்களுக்குத் தங்கக் குடங்களில் இருந்து பால் வார்க்கிறார்கள்; எங்களைப் போன்ற ஏழை  எளிசுக்கு பித்தளைக் குடங்களில் இருந்து நீர் மோராவது ஊத்தச் சொல்லக் கூடாதா ? இப்போதுதான் தீண்டாமை போய்விட்டதே  என்கிறார் கோவிந்தன்.

காந்திஜி அப்படியே விஷயத்தை மழுப்பிவிட்டார்.

XXXXXX

உலகிலேயே பெரிய யானையா !!!

ஜனவரி 13, 1937ல். திருவானந்தபுர வெற்றிவிழா பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் பல்லாயிரக்கணக்கண க்கான ஈழவ ஜாதி மக்கள் கூடி பெரிய ஊர்வலம் நடத்தினர்; பெரிய முகப்படாம் போர்த்திய யானைகள் ஊர்வலத்தில் வந்தன .

முன்னாள் நீதிபதியும் ஈழவ ஜாதித் தலைவருமான எம். கோவிந்தன், காந்திஜியை சந்திக்க வந்தார்.

காந்திஜி — ஊர்வலம் எப்படி இருந்தது ?

கோவிந்தன் – மிகப் பிரமாதமாகப் போனது; ஊர்வலத்தின் நீளம் ஒரு மைல் ; சமஸ்தான யானைகள் அனைத்தும் ஊர்வலத்தில் வந்தன.; அவைகளில் ஒன்றுதான் உலகிலேயே பெரிய யானை.

காந்திஜி — கண்களை சிமிட்டிக்கொண்டே , உலகிலேயே பெரிய யானையா?, திருவாங்கூர்  ராஜ்யத்திலேயே பெரிய யானையா?

கோவிந்தன் – இல்லை, மஹாத்மாஜி; அதுதான் உலகிலேயே பெரிய யானை.

பீஹார் மாநிலத்திலுள்ள சோன்பூரில் ஆண்டுதோறும் நடக்கும்  யானைச் சந்தைக்கு ஆயிரக்கணக்கான யானைகள் வரும். பார்த்ததுண்டா ?

இல்லை ; ஆனால் இதுதான் எங்களுக்குத் தெரிந்த பெரிய யானை.

கோவிந்தனுக்கு வேறு மாநில யானைகள் பற்றிய அறிவு இல்லை; ஆயினும் அவர் மனதைப் புண்படுத்தாதபடி காந்திஜீ யே பட்டாசு வெடிகள்  பற்றிக்  கேட்டு பேச்சை திசை திரும்பிவிட்டார் !!

காந்திஜி – போகட்டும்; வாண வேடிக்கைகள் எப்படி இருந்தன

கோவிந்தன்– மிகப் பிரமாதம்; பல மைல்களுக்கு அப்பாலுள்ள கிராமங்களிலும் பட்டாசு, மத்தாப்புகள் தெரிந்தன.

காந்திஜி — மஹாராஜா தரிசனம் கிடைத்ததா ? அவர் பார்த்தாரா ?

கோவிந்தன்- என்ன ஜி, இப்படிக் கேக்கிறீங்க; அவர் ஊர்வலத்தை பார்த்தார்; பாதி தூரத்துக்கு எங்களுடனே வந்தார் .

காந்திஜி – முன்னாளைய நீதிபதிக்கே இவ்வளவு சந்தோஷம் என்றால் பாமர மக்களுக்குள்ள சந்தோஷத்தின் அளவைப் புரிந்து கொள்ள முடிகிறது.

Xxxxx

சங்கரன் கோவில் சம்பவத்தை அடுத்த கட்டுரையில் காண்போம்

—subham—-

Tags- மஹாத்மா காந்தி, கிண்டல், நக்கல், பகடி ,ஜோக்ஸ் , தில்ரூபா

Leave a comment

Leave a comment