QUIZ இமயமலை பத்து QUIZ (Post No.12,809)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,809

Date uploaded in London – –  –  7 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Quiz Serial Number 83

1.காஞ்சன ச்ருங்கம் என்ற இமயமலை சிகரத்தை சங்கத் தமிழ் நூல்கள் எப்படி மொழிபெயர்த்தன ?

xxxxx

2.இமய மலையைப் புகழ்ந்து காளிதாசன் எழுதிய முக்கியப் பாடல்கள் எந்த நூலில் உள்ளன ?

xxxxx

3.சேரன் செங்குட்டுவன் இமய மலைக்குப் போனது ஏன் ?

xxxx

4.இமயமலைக்கு சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் உள்ள பெயர்கள் என்ன?

xxxx

5.ஹிமாலயத்தில் உருவாகும் மூன்று பெரிய நதிகளின் பெயர்கள் என்ன?

xxxxx

6.சிவ பெருமான் உறையும் கயிலாய மலை எந்த நாட்டில் உள்ளது?

xxxxx

7.இமய மலையில் உள்ள சிகரங்களில் இந்திய எல்லைக்குள் உள்ள பெரிய சிகரம் எது?

xxxxx

8.இமய மலையில் உள்ள இந்துக்களின் முக்கிய புனிதத் தலங்கள் எவை?

xxxxxx

9.இந்த மலையின் நீளம் என்ன ?

xxxx

10.இந்த மலையில் உள்ள கணவாய்களின் பெயர்கள் என்ன ?

xxxxxx

விடைகள்

1.இப்பொழுது கஞ்ஜன் ஜங்கா என்று அழைக்கப்படும் இமயமலைச் சிகரம் புறநானூற்றின் இரண்டாவது பாடலிலேயே முரஞ்சியூர் முடிநாகராயரால் பாடப்பட்டிருக்கிறது. காஞ்சன ஸ்ருங்கம் என்ற அருமையான சம்ஸ்கிருதச் சொல்லை இப்படிக் கஞ்சன் ஜங்கா ஆக்கிவிட்டனர். ஆனால் புறநானூற்றில் அழகாக பொற்கோடு என்று மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. இமயமலை பற்றி முடிநாகராயர் பாடியது அப்படியே காளிதாசனின் குமார சம்பவத்தில் இருக்கிறது. இதுதவிர பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னனை காரிகிழார் பாடிய ஆறாவது பாடலிலும் இமயமலை வருணனை வருகிறது. இவையெல்லாவற்றையும் காளிதாசன், சங்க காலத்துக்கும் முந்தைய புலவன் என்ற எனது  ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கி விட்டேன்.

XXXX

2.காளிதாசன் குமார சம்பவ  காவியத்தில் முதல் பத்து பாடல்களில்  இமயமலையை வருணிக்கிறார் ; இதை சங்கப்புலவர்கள் பல இடங்களில் மொழிபெயர்த்துப் யன்படுத்தினர் ; இதன் மூலம் காளிதாசன், சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்தவர் என்பது சந்தேகமறத் தெரிகிறது 

xxxx

3. கண்ணகி என்பவள் பத்தினித் தெய்வம் என்று இளங்கோ நிலை நாட்டியதால், புனித இமய மலையில் கல் எடுத்து, சிலை வடித்து, அதைப் புனித கங்கையில் கழுவி கொட்டுவரவுவதற்காக இமயம் சென்றான் செங்குட்டுவன்; அவன் ஏற்கனவே தனது தாயார் புனித ஸ்னானம் செய்வதற்கு கங்கை சென்று வந்தவன் என்பதும் குறிப்பிட்டது தக்கது.

xxxx

4.பொற்கோட்டு இமயம், வட பெருங்கல் , பேரிசை இமயம், பனி படு  நெடுவரை என்பன சங்கத் தமிழ் நூல்களிலும், சிலப்பதிகாரத்திலும் , ஹிமாத்ரி , ஹிமாலய , ஹிமவத் , ஹிமவான், பர்வதேஸ்வர , என்பன வேதம் முதல் காளிதாசன் வரை சம்ஸ்க்ருதத்தில் உள்ளன

ஹிமம் என்றால் பனி; அது உறையும் இடம் ஹிம+ ஆலயம்

xxxx

5.இமய மலையில் மானஸ சரோவர் என்னும் மாபெரும் புனித ஏரியுள்ள வட்டாரத்தில் சிந்து பிரம்மபுத்ரா , கங்கை ஆகிய மூன்று பெரிய நதிகள் உற்பத்தியாகின்றன

xxxx

6.மவுண்ட் கைலாஷ் எனப்படும் கயிலாய மலை திபெத் நாட்டில் உள்ளது; தற்பொழுது திபெத் நாட்டினை சீனா ஆக்கிரமித்துள்ளது .

xxxxx

7.பொற்கோட்டு இமயம் என்னும் காஞ்சன ஸ்ருங்கம் , இந்திய எல்லைக்குள் உள்ள மிக வயர்ந்த இமய சிகரம் ஆகும் Kangchenjunga 8586 metres; எவரெஸ்ட் என்னும் உலகிலேயே உயர்ந்த சிகரம் திபெத்- நேபாள எல்லையில் உள்ளது ; இந்தியாவில் இல்லை.

xxxx

8.இமயமலையில் இந்துக்கள் வணங்கும் சார் தாம் என்னும் நான்கு புனிதத் தலங்கள் — கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத்

XXXXX

9.இமய மலையின் நீளம் சுமார் 1550 மைல் ;1,550 miles (2,500 km)

xxxxx

இந்திய எல்லைக்குள் வாரும் முக்கிய கணவாய்கள் – காரகோரம், பீர்பஞ்சால், பனிஹல் , பர்சைல் , பென்சி கணவாய்கள்

Karakoram Pass. Pir Panjal Pass. Banihal Pass. Burzail Pass. Pensi La.

xxxxx

Tags – இமயமலை பத்து, quiz, quiz No.83

Leave a comment

Leave a comment