
Post No. 12,813
Date uploaded in London – – – 8 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Quiz Serial Number 84
1.சங்க இலக்கிய காலத்துக்கு முன்னதாக வந்த நூல் என்று கருதப்படும் தொல்காப்பியத்தில் கார்த்திகை விழா பற்றிய குறிப்பு இருக்கிறதா?
xxxx
2.சங்க இலக்கியத்தில் எந்த நூலில் கார்த்திகைத் திருநாள் விழாவைப் போற்றுகிறார்கள் ?
xxxx
3.தமிழ்நாட்டில் எந்த ஊரில் கார்த்திகை தீபத் திருநாள் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது?
xxxxxx
4.அன்றைய தினம் அங்கே என்ன நடக்கும்?
xxxx
5.கார்த்திகைக்கும் முருகனுக்கும் என்ன தொடர்பு ?
xxxx
6.கார்த்திகை விழாவின் பின்னுள்ள விஞ்ஞான ரகசியம் என்ன ?
xxxx
7.வானத்தில் கார்த்திகை நட்சத்திரம் எங்கே உளது ?
xxxx
8.வெளிநாட்டில் கார்த்திகை உண்டா?
xxxx
9.கார்த்திகை அன்று என்ன தின்பண்டங்களைச் செய்கிறார்கள் ?
Xxxx
10. கார்த்திகை நட்சத்திரத்தை தமிழ் அகராதிகள் நிகண்டுகள் என்ன பெயர்களில் அழைக்கின்றன?
XXXXX

விடைகள்
1.தொல்காப்பியத்தில் கார்த்திகை விழா
வேலி நோக்கிய விளக்கு நிலையும்–
தொல்.பொருள்.புறத்திணை இயல்-35
வேலி நோக்கிய விளக்கு நிலையும்– என்ற சூத்திர வரிகளுக்குப் பொருள் கூறுகையில் “கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு” என்று உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார்.
xxxx
2. அகநானூறு நற்றிணை , மலைபடுகடாம் , பரிபாடல் ஆகிய சங்க நூல்கள் இவ்விழாவினாக்க குறிப்பிடுகின்றன .
தொழில் விஷயமாக வெளியூர் என்ற கணவன், கார்த்திகை விழாவுக்கு வரட்டும் என்று மனைவி சொல்லும் பாடல் அகநானூற்றில் (141) இருக்கிறது
குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகல் இருநடுநாள்
அறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி (அகம்.141)
இதே போல அகம்.185, 11, நற்றிணை 202 ஆகிய பாடல்களிலும் கார்த்திகை விழா சிறப்பிக்கப் படுகிறது.
வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக்
கையற வந்த பொழுது – நற்றிணை 58
அகலிரு விசும்பின் ஆஅல் போல
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை – மலைபடுகடாம் – 10
xxxx
3.திருவண்ணாமலையில் பெரிய அளவில் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது .
Xxxx
4.கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் பெளர்ணமி நாளில் தீபத்திருநாளை இந்துக்கள் கொண்டாடுகிறார்கள் .அன்று காலையில் அண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில் பரணி தீபமும் மாலையில் மலை உச்சியில் கார்த்திகை தீபமும் ஏற்றப்படும். கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இது பல நாட்களுக்கு எரியும்; சுமார் பத்து மைல் வரை தெரியும் கார்த்திகை தீபம் ஏற்றுவதைத் தரிசிக்க லட்சக் கணக்கான பத்தர்கள் வருகின்றனர்
ஹிந்துக்கள் அவரவர் வீடுகளில் 2 அல்லது 3 நாட்களுக்கு தீபம் ஏற்றுவர்; இதற்கு அகல் விளக்கும் இலுப்பை எண்ணெயும் பயன்படுத்தப்படும்.
வைணவர்கள் ரோகிணி நட்சத்திர நாளில் விளக்கு ஏற்றி பெருமாளுக்கு நைவேத்தியம் படைப்பார்கள்
xxxxx
5. முன்னொரு காலத்தில் சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்த போது சிவனுடைய நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு பொறிகள் தோன்றி முருகன் அவதரித்ததாக நமது புராணங்கள் விளக்குகின்றன. ஆறு தலைகளும் பன்னிரு கைகளும் கொண்டு மயில் வாகனத்தில் பவனி வரும் முருகன் தமிழர் தம் தனிப்பெரும் கடவுள்!கார்த்திகை மாதர் அறுவர் முருகனை வளர்த்ததாகப் புராணம் கூறுகிறது. அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி என்பவை ஆறு நட்சத்திரங்கள். இந்த ஆறு பேருமே முருகனை சரவணப் பொய்கையில் குழந்தை உருவில் இருந்தபோது எடுத்து பாலூட்டி சீராட்டி வளர்த்தனர்
xxxx
6.ஐப்பசி கார்த்திகை அடைமழைக் காலம். அப்போது பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள் முதலியன பெருகும். அந்தக்காலத்தில் சொக்கப்பனை கொளுத்தும் போது பூச்சிகள் தானாகவே வந்து அதில் விழுந்து இறக்கும். மேலும் வீடுகளில் நடக்கும் சொக்கபனைகளில் பழைய துணிகள் இலை தழைகளை எரித்து வீட்டைச் சுத்தப்படுத்துவர். மனிதர்களுக்கு பைரோமேனியா PYROMANIA என்ற வியாதி உண்டு. தீவைத்தலில் ஆர்வம் என்று இதன் பொருள்; ஆதி காலத்தில் நம் முன்னோர்கள் குகைகளில் வாழ்ந்தபோது மிருகங்களை மிரட்டவும், உணவு சமைக்கவும் தீயை மூட்டி ஆடிப்பாடினார்கள் . அந்த ஜீன்கள் GENES இன்னும் நம் ரத்தத்தில் உள்ளதால் சிறுவர்களும் இளைஞர்களும் எதையாவது தீ வைத்து எரிக்க ஆசைப்படுவர்; அவர்களுடைய இந்த சக்தியை முறையாக பயன்படுத்த இந்துக்கள் தீபாவளி, கார்த்திகை பண்டிகைகளை ஏற்படுத்தினார்கள். TO CHANNELISE THE PYROMANIAC URGE.
XXXX


7.வானத்தில் ஒரையன் ORION (திருவாதிரை, மிருக சீர்ஷம்) நட்சத்திரக் கூட்டத்துக்கு அருகில் உற்று நோக்கினால் ஒரு நட்சத்திரக் கொத்து PLEIADES பிரகாசிக்கும். இதை பைனாக்குலரில் பார்த்தால் ஏழு நட்சத்திரங்கள் தெரியும்; முருகனும் அவரை வளர்த்த ஆறு பெண்களும் என்று நாம் சொல்லலாம். ஒரையன் நட்சத்திரக் கூட்டம் செவ்வக வடிவில் இருப்பதால் யாரும் எளிதில் கண்டுபிடிக்கலாம். நாலு மூலைகளில் நான்கு விண்மீன்கள் இருக்கும். (கார்த்திகை = பிளையடஸ் PLEIADES )
XXXXX
8. வெளிநாட்டில் இதே காலத்தில் தீபாவளி போல பட்டாசு வெடிக்கிறார்கள்; சொக்கப்பனை கொளுத்துகிறார்கள்; கிறிஸ்தவ மதம் பரவும் முன்னரே இவை இருந்தன. இன்றும் நீடிக்கின்றன; ஆயினும் ஒவ்வொரு நாட்டிலும் ஹாலோவீன் நாள் HALLOWEEN DAY, GUY FAWKES DAY கை பாக்ஸ் டே என்றெல்லாம் புதிய கதைகளுடன் இணைத்துவிட்டனர் .லண் டனில் பட்டாசு முழக்கத்தைக் கேட்கலாம். சொக்கப்பனை கொளுத்துவது மட்டும் கிராமப்புறங்களில் மட்டும் நீடிக்கிறது . அன்றைத்தினம் பயங்கர உருவங்களை பறங்கிக் காயில் (PUMPKINS) வெட்டி அதற்குள் விளக்குகளை வைக்கிறார்கள் .
XXXX
9.அப்பம், நெல் பொரியை வெல்லப் பாகில் கலந்து செய்யப்படும் பொரி உருண்டை மற்றும் , பாயசம் சர்க்கரைப் பொங்கல் , வடை இருக்கும். பிராமணர் வீட்டில் கட்டாயம் அவல் / பொரி உருண்டையும் அப்பமும் இருக்கும் .
XXXX
10.தமிழ் அகராதியில் கார்த்திகை என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு நிகரான தமிழ் சொற்கள் – அறுமீன் , அழல், அங்கி, அளக்கர்,அளகு, அறுவாய், ஆரல், இறால், எரிநாள், நாவிதன் (இதில் சில சொற்கள் தமிழ் அல்ல).
—-subham—-
Tags- கார்த்திகை பத்து , க்விஸ், கேள்வி பதில், பொரி , முருகன், சரவணப் பொய்கை,