குருவாயூருக்கு வாருங்கள்  தொடர்ச்சி – – PART 28 (Post No.12,815)

Kerala Governor Mohamed Arif Khan in Guruvayur

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,815

Date uploaded in London – –  –  9 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

குருவாயூருக்கு வாருங்கள் கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியானது ; இது இரண்டாம் பகுதி

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 28

கோவில் எண்–29 குருவாயூர் கிருஷ்ணன்

குருவாயூர் கிருஷ்ணனின் அற்புதங்களை எவரும் பட்டியலிட முடியாது. நோய்களைத் தீர்ப்பது முதல் மகப்பேறு இல்லாதோருக்கு குழந்தை பிறக்கவைப்பது, செல்வ மழை பொழிவது, தேர்வுகளில் வெற்றி பெறச் செய்வது பேரிடர்களிலிருந்தது காப்பாற்றியது என்று நீண்ட பட்டியல் அது; கேரள மக்கள் அடுக்கடுக்காக சொல்லுவார்கள்

குருவாயூரப்பனின் பெருமையைப் பேசும் பல நூல்கள் இருந்தாலும் மேப்பத்தூர் நாராயண பட்டதிரி எழுதிய நாராயணீயம் என்ற சம்ஸ்க்ருத நூல்தான் தலையாயது ; இந்தியா முழுதும் இந்த நூலை பாராயணம் செய்வோர் உளர்; ஏதேனும் பிரச்சினை வந்தால் அல்லது கோரிக்கை நிறைவேற வேண்டுமானால் நாராயணீயம் படித்தால் போதும் ; தமிழ் ஆங்கில மொழி பெயர்ப்புகளும் கிடைக்கும் .நாராயண பட்டதிரிக்கு இருந்த கடுமையான வாத நோய் நாராயணீயம் இயற்றியதால் அகன்றது.

நாம் தேவாரத்தில் 10 பாடல்களை பதிகம் என்போம்; இதை சம்ஸ்க்ருதத்தில் தசகம் என்பர். இது போன்ற 100 தசகம் ஸ்லோகங்கள் உடைய இந்த நூலை குருவாயூரில் அமர்ந்து மனமுறுகிப் பாடினார். .எல்லோருக்கும் ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்க இது உதவுகிறது 

திருக்கண்டேன்; பொன்மேனி கண்டேன் திகழும்

அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்

பொன்னாழி கண்டேன்; புரிசங்கம் கைக்கண்டேன்

என்னாழி வண்ணன்பால் இன்று– பேயாழ்வார்

என்று ஆழ்வார்கள் கண்ட காட்சியினை நாராயண பட்டதிரி அக்ரே பஸ்யாமி – என் முன்னே காண்கிறேன் என்று சொல்லி வியக்கிறார்.

குருரம்மா Kururamma (1570–1640 AD) என்பவருக்கு குழந்தை இல்லை; கணவனை இழந்த அவர் கிருஷ்ணனையே குழந்தையாக எண்ணி போற்றியது பற்றி கேரளத்தில்  நிறைய கதைகள்  உண்டு. அதிகம் கல்வி அறிவில்லாத அவர் கண்ணனை தன் குழந்தையாக எண்ணி வாடா, போடா என்று அன்புடன் அழைத்தார்; கண்ணனின் விஷமங்களைக் கண்டித்தார். குருர் இல்லத்தின் மூத்த பெண்மணி என்பதால் அவர் குரூர் +அம்மா என்று அழைக்கப்பட்டடார் .

one of the priests 

கேரளத்தில் பல கோவில்களில் அற்புதம் நிகழத்திய மகான் வில்வமங்கள சுவாமிகள் அவரும் குருவாயூரப்பன் பக்தர்;  பூந்தானம் நம்பூதிரி  பாடிய ஞானப்பனா வும் குருவாயூர் கிருஷ்ணன் புகழ் பாடுகிறது.

அண்மைக்காலத்தில் குருவாயூரப்பனை வழிபட்டு குஷ்ட நோய் நீங்கிய உபன்யாச சக்கரவர்த்தியும் தனக்கென புதிய சொற்பொழிவுப் பாணியை வகுத்தவருமான அனந்த ராம தீட்சிதர் தினமும் தனது உரைகளில் குருவாயூரப்பனை நினைவுகூர்ந்தார்.

குருவாயுர் கோவிலில் 41 நாள் பஜனை செய்வது, வலம் வருவது போன்றன பலருடைய நேர்த்திக் கடன் ஆகும். சில ரூபாய்கள் மட்டுமே தேவைப்படும் மலர் முதல் 21 பூஜைகளை செய்யும் உதயாஸ்தமன பூஜா வரை பல வேண்டுதல்கள் உள்ளன.

குழந்தைக்கு முதல் உணவு ஊட்டும் சடங்கு,  இந்துக்களின் 40 சடங்குகளில் (சம்ஸ்காரம்) ஒன்று ; இதை அன்னப்ராஸ்னம் என்பர்; இவ்வாறு அன்னத்தை குழந்தைக்கு அளிக்கும் வைபவமும், கல்யாணங்களும் இங்கே நிறைய நடக்கின்றன. காலை 3 மணிக்குத் திறக்கும் கோவிலை இரவு 9 மணிக்கு மூடுவார்கள். மதியம் 1 முதல் 4 வரை மட்டும் மூடியிருக்கும் குருவாயூர் முழுதும் நாராயணநாராயண என்ற  கோஷத்தை மக்கள் உச்சரித்த வண்ணம் இருப்பார்கள்.

கோவில் அமைப்பு கேரள பாணியில் இருக்கிறது.

கோவிலில் உள்ள விக்கிரகம் விஷ்ணு விக்கிரகமே ; அதையே எல்லோரும் கண்ணனாக வழிபடுகின்றனர்.நான்கு கைகளில் சங்கு, சக்கரம், கதை, துளசிமாலை/ தாமரை இருக்கின்றன.

14ம் நூற்றாண்டு முதல் உள்ள வரலாறே நமக்குக் கிடைக்கிறது. ஆனால் ஆதி சங்கரர் காலம் முதல் கோவில் இருந்ததை செவி வழிச் செய்திகளும் சடங்குகளும் நிரூபிக்கின்றன. நாராயணன் நம்பூதிரி என்பவரின் குடும்பம் பரம்பரை தந்திரி (கோவில் தலைமை அர்ச்சகர்) ஆவார். கேரள அரசின் கட்டுப்பாட்டிலுள்ள குருவாயூர் தேவஸ்வம் போர்டு கோவிலை நிர்வகிக்கிறது

திருவிழாக்கள்

கும்ப மாதத்து பூச நட்சத்திரத்தில் 10 நாள் விழா துவங்கும்.

இது தவிர ஜன்மாஷ்டமி பெரிய ஏகாதசி நாட்களில் விழாக்கள் இருக்கும்

கோவிலில் கணபதி, அய்யப்பன்,, நாக தேவதைகளுக்கு தனித்தனி சந்நிதிகள் இருக்கின்றன.

டில்லியில் குருவாயூர் கோவில் போலவே புதிய கோவிலைக் கட்டி அதை உத்தர குருவாயூரப்பன் கோவில் என்று அழைக்கிறார்கள் .

Xxxx

நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த மலர்கள் துலாபாரத்தைக் கண்டோம்; இதோ மேலும் சில துலாபாரங்கள்

எடைக்கு எடை தங்கம்

குருவாயூர் கோவிலில் ,2006ஆம் ஆண்டில்,  பெங்களூர் கே.சி.பி மேனன் கொடுத்த 70 கிலோ தங்க துலாபாரம்தான் சாதனைப் புஸ்தகத்தில் இடம்பெறுகிறது. பாலக்காட்டைச் சேர்ந்த அவருக்கு வயது 58. தனது வியாபாரம் கேரளம், பெங்களூரு, துபாயில் அமோகமாக நடப்பதால், தான் வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடனை செலுத்துவதாக அவர் நிருபர்களிடம் சொன்னார். பெங்களூரிலிருந்து வந்த அவர் 70,  ஒரு கிலோ தங்கக்கட்டிகளைக் கொண்டுவந்தார்; அவரது கம்பெனியின் பெயர் ஷோபா டெவலப்பர்ஸ்.

Guruvayoor Devaswom officials told UNI P N C Menon, Chairman of Shobha Developers, Bangalore, gave 70 kg of gold for ‘thulabharam.’ ‘It is the biggest gold offering by an individual or institution in the history of the temple. The previous highest was two kg in 1970.’ Mr Menon, a native of Palakkad, running a group of institutions in Kerala, Bangalore and Dubai, told reporters the offering was made in fulfilment of a vow. ‘My business has reached such heights with the blessings of Lord Krishna and it is my humble gratitude to the Lord.’ The 58-year-old devotee, who flew in from Bangalore, brought 70 gold bars weighing one kg each for the offering.

இது 2006ம் ஆண்டில் டிசம்பரில் நடந்தது.அப்போது அந்த தங்கத்தின் மதிப்பு 7 கோடி ரூபாய் ; இப்போது பன்மடங்கு அதிகம் (70,000 கிராம் X ரூ.6400)

xxxxxx

குருவாயூரில் துர்கா ஸ்டாலின்

August 10, 2023, 20:18 [IST] குருவாயூர்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு 32 சவரன் எடை கொண்ட தங்க கிரீடத்தைக் காணிக்கையாக வழங்கியுள்ளார். சந்தனம் அரைக்கும் இயந்திரத்தையும் குருவாயூரப்பனுக்கு காணிக்கை அளித்துள்ளார் துர்கா ஸ்டாலின்.

Xxxxx

குருவாயூர் கோவிலில் வாழைப்பழத்தை துலாபாரமாக வழங்கிய கேரள கவர்னர்

திருவனந்தபுரம்: மே 8, 2023 கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் குருவாயூர் கோயிலில் எடைக்கு எடை வாழைப்பழம் கொடுத்து துலாபாரம் நடத்தி தரிசனம் செய்தார். கேரள கவர்னரான ஆரிப் முகமது கான் குருவாயூர் கோயிலில் நேற்றுமுன்தினம் சாமி தரிசனம் செய்தார். இந்த கோயிலில் எடைக்கு எடை துலாபாரம் நடத்துவது முக்கிய வழிபாடாகும். கவர்னர் ஆரிப் முகமது கான் தனது எடைக்கு எடை வாழைப்பழம் துலாபாரம் கொடுத்தார். பிறகு சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பினார்.

கோவிலுக்கு வெளியே நடத்தப்படும் துலாபாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கோவிலின் கிழக்கு நடைபந்தலில் அவருடைய எடைக்கு எடை (83 கிலோ) கதலிப்பழம் வழங்கப்பட்டது.

Xxxx

Thrissur:  october . 2023 On the auspicious occasion of Guruvayur Ekadashi, an offering was made by Nathan Menon, hailing from Thiruvananthapuram, by presenting golden crowns to Ayyappan and Guruvayurappan. The dedication of these  crowns took place on the second day of the Ekadashi lamp ceremony.

குருவாயூர் ஏகாதசி உற்சவத்தின்போது  திருவனந்தபுரம் நாதன் மேனன் சபரிமலை ஐயப்பனுக்கும் குருவாயூர் கிருஷ்ணனுக்கும் தங்க கிரீடங்களை காணிக்கையாக வழங்கினார்.

–subham—

tags – துர்கா ஸ்டாலின் , கேரள கவர்னர், 7 கிலோ தங்கம் துலாபாரம், கே சி பி மேனன்

Leave a comment

Leave a comment