
Post No. 12,816
Date uploaded in London – – – 9 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
1.விந்திய மலையுடன் எந்த முனிவரை உடனே நினைப்பீர்கள்? ஏன் ?
XXXX
2.இந்தியாதான் உலகிலேயே பழமையான நாடு என்று காட்டும் குகைகள் மனித தடயங்களுடன் நடுக்காட்டில் உள்ளன. விந்திய மலையில் உள்ள அந்த குகையின் பெயர் என்ன?
xxxx
3. இந்திய தேசீய கீதத்தில் உள்ள இரண்டு மலைகள் எவை?
xxxx
4.விந்திய மலையின் தெய்வம் யார் ?
xxxx
5.இந்த மலை எங்கே உள்ளது?
xxx x
6.விந்திய மலையில் உற்பத்தியாகும் நதிகள் எவை ?
xxxx
7.விந்திய மலைக்கு ஏன் அந்தப் பெயர் ஏற்பட்டது?
xxxx
8.விந்திய மலையில் உள்ள புனிதத்தலங்கள் யாவை ?
XXXX
9.விந்திய மலை பற்றிய பழைய குறிப்புகள் எவை ?
xxxx
10.விந்திய மலையின் நீளம் என்ன ?
XXXX

விடைகள்
1.அகஸ்திய முனிவரை எல்லா புராணங்களும் விந்திய மலையுடன் தொடர்பு படுத்துகின்றன ; அதை அவர் கர்வ பங்கம் செய்தார் .அதாவது வளர்ந்து கொண்டே இருந்த மலையை மட்டம் தட்டி, தென்னாட்டுக்கு ரோடு/ சாலை போட்டார்; 18 ஜாதி மக்களை தென்னாட்டில் குடியேற்றினார்.
XXXX
2.பிம்பேட்கா குகைகள் BHIMBETKA CAVES மத்திய பிரதேசத்தின் போபால் அருகிலுள்ளன ; அங்கு பழங்காலத்தில் , 15,000 ஆண்டுகளுக்கு முன்னர் ,மனிதர்கள் வாழ்ந்து ஓவியங்களை வரைந்துள்ளனர் ; நடுக்காட்டில் மனிதர்கள் வாழ்ந்தது, கரையோர நகரங்களிலும் மனிதர்கள் வாழ்ந்ததைக் காட்டுகிறது
xxxx
3.விந்தியம் , ஹிமாசலம்
xxxx
4.விந்தியாவாசினி
xxxx
5.இந்தியாவின் மத்தியப் பகுதியில் இருக்கிறது. இதற்கு இணையாக சாத்பூரா மலைத் தொடர் இருக்கிறது.
இரண்டையும் விந்திய மலை என்றே பொதுவாக அழைக்கிறார்கள் . இரண்டுக்கும் இடையே தப்தி நதி ஓடுகிறது.
Xxxx
6.கங்கை–யமுனையின் உபநதிகள் சம்பல் நதி, பேட்வா நதி, தாசன், கென், தமசா நதிகள், காலி சிந்து, பார்வதி நதிகள் ஆகியன விந்திய மலையின் வட பகுதியில் உற்பத்தியாகின்றன. நர்மதா நதியும் ன் நதியும் தென் பக்க சரிவிலிருந்து உற்பத்தி ஆகின்றன
Xxxx
7.வைந்த் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு தடுத்தல் என்று பொருள்; இது உலகின் முதல் அகராதியான அமர கோசத்தில் இருக்கிறது; வடக்கே இருந்து தென் திசை நோக்கி வருவோரை இது தடுத்தது; எல்லோரும் கடலோரமாகவே நடந்து தென்னகம் வந்தனர் அகஸ்தியர் பெரிய CIVIL ENGINEER சிவில் என்ஜினீயர். திட்டமிட்டு சாலை போட்டார்; பிற்காலத்தில் இது வழியாக மெளரிய படைகள் கர்நாடகத்துக்கு வந்தன ; ஆனால் விந்திய மலையை சங்க இலக்கியங்கள் குறிப்பிடவில்லை வியாத என்ற சம்ஸ்க்ருத சொல்லிலிருந்து வேடன் என்ற தமிழ்ச் சொல் வந்தது ; வ்யாத என்பது விந்த்ய என்று மாறியிருக்கலாம். அசலம் என்றால் மலை; விந்த்ய +அசலம் = விந்த்யா சலம்
xxxxx
8.உத்தரப் பிரதேசத்தில் உள்ள மிர்ஜாபூரில் மலையின் ஒரு முனை இருக்கிறது; அங்குள்ள விந்தியாவாசினி கோவில் ஒரு முக்கிய சக்தி பீடம்; அதிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் மஹா காளி கோவிலும் ஒரு கு கைக் கோவிலும் உள்ளது ; இவை தவிர சிறிய பைரவர், சிவன் கோவில்களும் இருக்கின்றன.
XXXXX
9.மஹாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களிலும் புராணங்களிலும் விந்திய மலை பற்றிய குறிப்புகள் உள்ளன ; ஸ்ம்ருதி என்னும் சட்ட நூல்களில் உள்ளன. பீம்பேட்கா என்ற மனித இனத்தின் பழைய சுவடுகள் உடைய பிம்பேட்கா குகையையும் ஆதிவாசிகள் பீம் சேனனின் ஆசனம் என்றே அழைக்கின்றனர்; இங்கு 15,000 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்தனர் .
xxxxx
10.இதன் நீளம் 675 மைல்கள் (1,086 கி.மீ ) ஒரு புறம் குஜராத்; மறு புறம் மத்திய பிரதேச- உத்தர பிரதேச எல்லை.

Bhimbetka caves
—SUBHAM—
TAGS- விந்தியாவாசினி கோவில், சாத்பூரா மலை, விந்திய மலை, QUIZ, பிம்பேட்கா குகைகள் BHIMBETKA CAVES, விந்திய கர்வ பங்கம், விந்திய மலை பத்து