QUIZ காஷ்மீர் பத்து QUIZ (Post No.12,829)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,829

Date uploaded in London – –   13 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

QUIZ SERIAL NUMBER—86

1.காஷ்மீர் தலை நகர் ஸ்ரீநகருக்கு ஏன் தேவியின் பெயர் ஏற்பட்டது ?

Xxxxx

2.காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்த அரசியல் சட்ட விதி என்ன சொன்னதுசிறப்பு விதியை யார் எப்போது நீக்கினார்கள்?

xxxxx

3. காஷ்மீர் மாநிலம் இந்தியாவில் எங்கே இருக்கிறது மாநிலத்திலுள்ள புனிதத் தலங்கள் எவை ?

XXXX

4.அந்த மாநில தலை நகர் ஸ்ரீநகரில் உள்ள ஏரிக்கு என்ன பெயர்அதன் புகழுக்கு காரணம் என்ன ?

xxxx

5.காஷ்மீரின் எவ்வளவு சதுர மைல் பகுதியை பாகிஸ்தான் பிடித்து வைத்துள்ளது நேரு செய்த மிகப்பெரிய தவறு என்ன?

XXXX

6.இந்துக்கள் பகுதியான காஷ்மீர் மாநிலத்தை எப்போது முஸ்லீம்கள் கைப்பற்றினார்கள் ?

XXXXX

7.நேருஜி குடும்பத்தின் பண்டிட் ஜாதி என்பது என்ன ?

XXXX

8.காஷ்மீர் மாநில வரலாற்றைக்கூறும் மிகச் சிறந்த நூல் எதுஅதை யார் எழுதினார் ?

xxxxx

8.ராஜதரங்கிணி என்றால் என்ன?

xxxxx

9. மாநிலத்திலுள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலங்கள் எவை?

xxxxx

10.காஷ்மீர் படுகொலை KASHMIR GENOCIDE என்பது என்ன?

Xxxxx

விடைகள்

1.ஸ்ரீநகரில் ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரத்தை ஸ்தாபித்ததால் அந்த நகருக்கு தேவியின் பெயரும் உலகப்புகழூ ம்  உண்டாக்கியது ; அங்கு சங்காரச்சார்யார் பெயரில் ஒரு குன்றும் உள்ளது; அவர் வழிப்பட்ட கோவில்கள் ஸ்ரீ நகரிலும் அதற்கு அப்பால் இமய மலையிலும் இருக்கின்றன. அதை சங்கரருக்கும் இதே நகரில் கோவில் இருக்கிறது அவர் 1300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார் என்பர்; ஆயினும் காஞ்சி மகா சுவாமிகள் தன்னுடைய நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரை மூலம் ஆதி சங்கரர்  2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என்றும் காட்டுகிறார்.

xxxxx

2.அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ன் படி ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு கடந்த 1954ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை சிறப்பு அந்தஸ்து மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. அதை நரேந்திர மோடி அரசு ரத்து செய்தது ; இந்திய சுப்ரீம் கோர்ட்டும் அது செல்லுபடியாகும் என்று 2023 டிசம்பரில் தீர்ப்பு அளித்துவிட்டது ; முன்னர் இருந்த தனிக்கொடி , முதலமைச்சரை காஷ்மீர் பிரதர் என்று அழைப்பது எல்லாம் காலாவதியாகிவிட்டது. பிற மாநில மக்கள் குடியேறக்கூடாது, சொத்துக்கள் வாங்கக்கூடாது என்ற விதிகளும் குப்பைத் தொட்டிக்குள்  போடப்பட்டன; சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் 1400ம்- ஆண்டுக்கு முந்தைய இந்து ஆட்சி மீண்டும் செயலுக்கு வந்து விட்டது

xxxxx

3.இந்தியாவின் வடகோடி மாநிலம் காஷ்மீர்; அதற்கு அப்பால் நாட்டின் வட அரணாக விளங்குவது இமயமலை.

ஸ்ரீ நகரில் உள்ள டால் ஏரிக் கரையில் கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. 240 படிக்கட்டுகள் உள்ளன.  . இங்கு சிவபெருமான் சிவலிங்க வடிவில் மிகவும் கம்பீரமாக வீற்றிருக்கிறார். இதனை ஜோதீஷ்வரர் கோவில் என அழைக்கின்றனர். இக்கோவில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் மீண்டும் கட்டப்பட்டது. ஆதிசங்கரர் இங்குதான்  சௌந்தர்யலஹரி என்னும் அம்பாள் ஸ்தோத்திரப் பாடலை இயற்றினார் .

காஷ்மீரின் வரலாறு கூறும் நூல்  ‘ராஜதரங்கிணி’ ;அதை எழுதிய  கல்ஹணர் இக்கோவில் 2400 ஆண்டுகளுக்கு முன்னர்   மன்னர் கோபாதித்யா  கட்டினார் என்பார் . பின்னர், கர்கோடக  வம்சத்தின் லலிதாதித்யா என்பவர் திருப்பணிகளை செய்தார்

Kheer Bhawani Temple. கீர் பவானி கோவில்

Shankaracharya Temple. சங்கராசார்யா கோவில்

Sharika Devi Temple. சாரிகா தேவி  கோவில்

Martand Temple.மார்த்தாண்ட சூரியன்  கோவில்

Amarnath Cave.அமர்நாத் பனிக்கட்டி லிங்க  கோவில்

Mamleshwar Temple in Pahalgam.பக்லஹாமில் உள்ள மாமகேஸ்வர் சிவன் கோவில்

Rani Mandir in Gulmarg. குல்மார்க் ராணி மந்திர்

Pandrethan near Srinagar. ஸ்ரீ நகர் அருகில் பண்ட்ரீ தான்  கோவில்

ஜம்மு பகுதி கோவில்கள்

Vaishno devi temple வைஷ்ணவ தேவி குகைக் கோவில்

Shri Raghunathji Temple. ரகுநாத் கோவில்

Shri Ranbireshwar Temple. ராணா வீரேஸ்வர் கோவில்

Panchvaktar Temple. …பஞ்ச்வக்தர் கோவில்

Rani Kalhuri Devi Temple. …ராணி கஸ்தூரி

Ram Talai Temple. …ராமதலாய் கோவில்

Radha Krishan Rukmani Temple. …ராதா கிருஷ்ணா ருக்மிணி கோவில்

Panjthirthi. பஞ்ச தீர்த்த கோவில்

ஜம்முவிலிருந்து 45 கி.மீ தொலைவிலுள்ள வைஷ்ணவ தேவி குகைக் கோவில் அமர்நாத் பனிலிங்கம் போலவே  பல்லாயிரக் கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது

ஜம்மு பகுதியில் ரகுநாத் கோவில் மிகப்பெரிய கோவில்

xxxxx

4.ஸ்ரீநகர் ஜீலம் ஆற்றின் கரையில் இருக்கிறது அங்குள்ள ஏரிக்கு தாள் ஏரி என்று பெயர். மக்கள் சிக்காரா என்னும் படகு வீடுகளில் வசிக்கின்றனர். அதில் சென்று காய்கறி, பழ ங்களை விற்கிறார்கள் ; சுற்றுலாப்பயணிகள் அதில் சென்று பல இடங்களைப் பார்க்கலாம்  இதன் சுற்றளவு 10 மைல் ; ஏரியின் பரப்பளவு 6 சதுர மைல் . ஏரியில் மிதக்கும் தோட்டங்களும் கரையில் மொகலாய மன்னர்கள் அமைத்த புகழ்பெற்ற தோட்டங்களும் அமைந்துள்ளன

xxxxx

5.வெள்ளைக்காரன் செய்த சூழ்ச்சியால் இந்தியா மூன்று துண்டாகியது மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான், இந்தியா என்று ஆனது ; கிழக்கு பாகிஸ்தானை இந்திராகாந்தி விடுவித்து வங்க தேச நாட்டை உருவாக்கினார்; மேற்கு பாகிஸ்தான் காஸ்மீர் மீது படை எடுத்து அதையும் சேர்க்க முயன்றது; அப்போது ஹிந்து மன்னர் (HARI SING)  இந்திய ராணுவ உதவியை நாடி ஸ்ரீ நகர் முதலிய பகுதிகளை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதற்குள் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றி சுதந்திர காஷ்மீர் / ஆஜாத் காஷ்மீர் என்று பெயரிட்டது ;அதன்பரப்பளவு 13.300 சதுர கிலோமீட்டர் 13,297 km2 (5,134 sq mi)

இந்தியா -பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரிக்கவே காஷ்மீர் மக்களுக்கு வோட்டெடுப்பு அடிப்படையில் சுய நிர்ணய உரிமை (SELF DETERMINATION) செய்யலாம் என்று ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்ற நேருஜி வகைசெய்தார்; ஆனால் இருநாட்டு ராணுவங்களும் வெளியேற வேண்டும் என்ற நிபந்தனை போடப்பட்டது ; இரு நாடுகளும் அதைச் செய்யவில்லை; வரலாற்று ரீதியில் 3000 ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீர் இந்து பூமி என்பதை காஷ்மீரின் ராஜ தரங்கிணி , நீலமத புராணம் ஆகியன சொல்கின்றன. அப்படியிருந்தும் நேருஜி இப்படிச் சொன்னார்.

xxxxx

6.ராஜ தரங்கிணி ஏன்னு வரலாற்று நூலின்படி கலியுகம் துவங்கிய காலம் முதல் இந்துக்கள் ஆண்ட காஷ்மீர் 1200 முதல் முஸ்லீம்களின் தொடர் தாக்குதலுக்கு உள்ளது கடைசி இந்து மன்னரின் பெயர் உதயண தேவன்; அவன் மனைவி கோதா ராணி பின்னர் ஆண்டாள்;அவள் 1339ல் இறந்தவுடன் சுல்தான் ஷாமாஷ் உத்தீன் ஆட்சியைப் பிடித்தான் ; நரேந்திர மோடி அரசு 2019ல் மீணடும் இந்து ஆட்சியை ஏற்படுத்தியது

xxxxx

7.காஷ்மீர் பண்டிட் KASHMIRI PANDITS/ PUNDITS

காஷ்மீர பண்டிதர்கள் (Kashmiri Pandits) எனும் காஷ்மீர பிராமணர்கள், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் காஷ்மீர் சமவெளியில் வாழ்ந்த இந்துக்கள் ஆவர்.. இந்தியாவின் முதல் பிரதமர்  ஜவஹர்லால் நேரு காஸ்மீரி பிராமணர்.

xxxxx

8.காஷ்மீரின் வரலாற்றைக் கூறும் நூல் ராஜதரங்கிணி — இதை கல்ஹணர் என்ற காஷ்மீரி பிராமணர் எழுதினார் — இது வடமொழியில் எழுதப்பட்டது. இதில் 3449 சுவைமிகு ஸ்லோகங்கள் உள்ளன. காஷ்மீர் வரலாறு நமக்கு எதற்கு என்று பல தமிழர்கள் நினைக்கலாம். இலங்கை மன்னரையும் சோழனையும் தோற்கடித்த மிஹிரகுலன் என்ற காட்டுமிராண்டி மன்னன் பற்றிய சுவையான செய்திகள், இலங்கை வரை ஆட்சிச் சக்கரத்தை பரவ விட்ட லலிதாதித்யன் போன்ற மன்னர்கள் பற்றிய செய்திகள் இதில் உள.

 பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவும் ஒரு காஷ்மீரி பிராமணர். அவருடைய மைத்துனர் ஆர்.எஸ்.பண்டிட் இதை வடமொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். எங்கு தெரியுமா? சிறையில் உடகார்ந்து கொண்டு! அப்பொழுது நேருவும் சிறைவாசம் செய்தார். 1934 ஆம் ஆண்டில் அவர் இந்த ஆங்கில மொழி பெயர்ப்புக்கு டேராடூன் சிறையில் இருந்தே முன்னுரை எழுதினார். புத்தகத்தை சாஹித்ய அகாடமி வெளியிட்டது. 

Xxxxx

9.ஸ்ரீநகர், குல்மார்க், சோன் மார்க், பஹல் காம் ; இங்கு பூங்கா க்கள் , துலிப் தோட்டங்கள், பனிச் சறுக்கு விளையாட்டுகள் , இயற்கைக் காட்சிகள் , படகு சவாரிகள், குதிரை சவாரி, மலை ஏறுதல்  என்று பல கவர்ச்சிகள் உள்ளன.

XXXX

10.காஷ்மீர பண்டிதர்கள் (Kashmiri Pandits) எனும் காஷ்மீர பிராமணர்கள், காஷ்மீர் பிரிவினைவாதிகளால் தங்களின் உயிருக்கும் உடைமைகளுக்கு அச்சம் ஏற்பட்ட காரணத்தினால், காஷ்மீர் சமவெளியை விட்டு, ஜம்மு, தில்லி போன்ற நகரங்களில் 1985-ஆம் ஆண்டு முதல் அகதிகளாக வாழ்கின்றனர்.காஷ்மீரை விட்டு தங்களை விரட்டியடிக்கப்பட்ட போது ஆயிரக்கணக்கான காஷ்மீரப் பண்டிதர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்குகளை மீண்டும் விசாரிக்கக் கோரி போராட்டங்கள் மூலம் இந்திய அரசிடம் கோரிக்கைகள் வைத்துள்ளனர். 1990-ஆம் ஆண்டில் மட்டும் காஷ்மீரிலிருந்து 1,40,000 காஷ்மீர பண்டிதர்களில் சுமார் 1,00,000 பேர் காஷ்மீரை விட்டு அகதிகளாக வெளியேறினார்கள். வேறு சில குறிப்புகளிலிருந்து 1,50,000 முதல் 3,50,000 பேர் வரை காஷ்மீரை விட்டு வெளியேறியதாக புள்ளி விவரங்கள் உள்ளதுமனித உரிமை அமைப்புகள் காஷ்மீரில் நடந்த இனப்படுகொலை, அகதிகள் வெளியீரம் பற்றி வாய் திறக்கவில்லை. பாரதீய ஜனதா தவிரவுள்ள இந்திய அரசியல் கட்சிகளும்  மெளனம் சாதித்தன .

XXXXX SUBHAM XXXXX

tags- காஷ்மீர் , குவிஸ், இந்துக்கள் படுகொலை, ராஜதரங்கிணி, ஸ்ரீ நகர், ஆதிசங்கரர் , படகு வீடு, தால்  ஏரி , பண்டிட், நேருஜி, Pandit, Nehru

Leave a comment

2 Comments

  1. Athmanathan Seetharaman's avatar

    I have read excerpts from a book by John Mathai? that Nehru’s father was a Muslim who was a servant in the Motilal Nehru household. That’s why Nehru had a soft corner for the Muslims. There was no sign of brahminhood in him. He didn’t wear a sacred thread nor practised any Hindu customs. He was averse to reconstruction of Somnath temple.

  2. Tamil and Vedas's avatar

    I AGREE WITH YOU. MOST PEOPLE KNOW THAT HE WAS A ROTTEN EGG IN THE BASKET. HIS DISCOVERY OF INDIA BOOK AND HIS INTRO TO RAJA TARANGINI BY R S PANDIT SHOW A DIFFERENT PERSON; AFTER FALLING PREY TO MUSLIM WOMEN HE DISTRACTED PEOPLE’S ATTENTION BY BLUFFING.

Leave a comment