
Post No. 12,833
Date uploaded in London – – 14 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
QUIZ SERIAL NUMBER—87
1.புத்தர் பிறந்த இடம் எது ? அது எந்த நாட்டில் உள்ளது ?
xxxx
2.புத்தரின் முதல் பெயர் என்ன? புத்தரின்மனைவி, மகன் பெயர் என்ன ?
xxxxx
3.புத்தர் எத்தனை வயதுவரை வாழ்ந்தார்? எவ்வாறு , எங்கே இறந்தார் ?
xxxx
4.அவர் முதலில் உரையாற்றிய இடம் எது ? அவர் என்ன போதித்தார் ?
xxxxx
5.புத்தர் உபதேசம் உள்ள நூலின் பெயர் என்ன? எண்வகை மார்க்கம் என்பது என்ன ?
xxxxx
6.அவர் மனம் மாற காரணமாக இருந்த விஷயங்கள் என்ன ?
xxxxx
7.அவருடைய அப்பா, அம்மா பெயர்கள் என்ன ?
xxxxx
8.புத்தர் இறந்த பின்னர் என்ன நடந்தது ? புத்தரையும் தசாவதாரத்தில் சேர்த்தவர் யார்
xxxxx
9.பெண்களை சேர்க்க புத்தர் ஏன் மறுத்தார்? பின்னர் அவர் மனதை மாற்றியது யார்?
xxxxx
10. புத்தர் பிறப்பதற்கு முன்னர் அவருடைய தாயார் கண்ட கனவு என்ன ?
xxxxx
.jpg)
விடைகள்
1.புத்தர் பிறந்த இடம் கபிலவஸ்து அருகிலுள்ள லும்பினி.; அது நேபாளம் என்னும் நாட்டில் உள்ளது 2500 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பிறந்தார் என்றாலும் அவர் பிறந்த ஆண்டு பற்றிய சர்ச்சை இன்றுவரை ஓயவில்லை . நமக்கு 2900 ஆண்டுகள் முன்னர் முதல் 2500 ஆண்டுகள் வரையுள்ள காலத்தில் அவர் பிறந்த தேதி வைக்கப்படுகிறது . புத்தர் வைகாசி பெளர்ணமியில் விசாக நட்சத்திரத்தில் பிறந்தார்; இதை வெசாக் (வைசாக்) என்பர்.
xxxx
2.புத்தருக்கு அம்மா, அப்பா சூட்டிய பெயர் சித்தார்த்தன் புத்தரின் மனைவி பெயர் யசோதரா , மகன் பெயர் ராகுலன். புத்தர் என்ற அடைமொழிக்கு ஞானோதயம் கண்டவர் என்று பொருள்.
xxxx
3.அவர் 80 வயது வரை வாழ்ந்தார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள குஷி நகரில் இறந்தார் ஒருவன் கெட்டுப்போன பன்றி மாமிசத்தைக் கொடுத்தான்; ஆ பன்றி இறைச்சியா என்று கதறிய அவர், அது தொண்டையில் சிக்கவே மரணம் சம்பவித்தது ; இன்னும் சிலர் , அதனால் நோயுற்று அவர் இறந்தார் என்பர்.
xxxxx
4.புத்த கயாவில் போதி மரம் என்னும் அரசமரத்தின் கீழ் புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்டபோது அவருக்கு வயது 35. காசிக்கு ஆறு மைல் தூரத்தில் கங்கையும் வருணாவும் கலக்கும் இடத்தில் சாரநாத் மான்கள் பூங்கா இருக்கிறது ; அந்த ஊரில்தான் புத்தர் முதல் சொற்பொழிவினை நிகழ்த்தி நான்கு போதனைகளை அளித்தார் .
1.நாம் அனுபவிக்கும் துன்பம் 2 அதன் காரணம் 3.துன்பத்தின் முடிவு 4. அதிலிருந்து விடுபடும் வழிகள்
xxxx
5. புத்தரின் உபதேசம் அடங்கிய நூல் தம்ம பதம் எனப்படும். இதில் 26 அத்தியாயங்களில் பாலி மொழியில் புத்தர் சொன்ன பாடல்கள் இருக்கின்றன. இது பெளத்தர்கள் வேதப் புஸ்தகம் ; அவர் கடவுள் பற்றி ஒன்றும் போதிக்கவில்லை; எந்த சடங்குகளையும் விதிக்கவில்லை ; ஆனால் எண்வகை மார்க்கத்தை ஒருவன் பின்பற்றினால் போதும் என்றார் ; அவர் போதித்த 8 கொள்கைகள் — 1.நல்ல நோக்கு; 2.நல்ல தீர்மானம்; 3.நல்ல பேச்சு; 4. நல்ல செயல்கள் ; 5. நல்ல வாழ்க்கை ; 6. நல்ல முயற்சி ; 7.நல்ல எண்ணம் ; 8. நல்ல ஆழ்ந்த சிந்தனை . முதல் 7 இருந்தால் மனம் ஒரே இடத்தில் நிற்கும்.
xxxx
6.புத்தர் கண்ட நான்கு காட்சிகள் -வயது முதிர்ந்த ஒரு மனிதரையும், நோயாளி ஒருவரையும், பிணம் ஒன்றையும், துறவி ஒருவரையும் கண்டார்.; இவை அவருடைய சிந்தனையைத் தூண்டிவிட்டன ; பலரிடமும் கேள்வி கேட்டு விட்டு, திருப்தி அடையாததால், அரச மரத்துக்கு அடியில் தியானத்தில் அமர்ந்தார் ; மறுபிறப்பு, கர்ம வினை , பாவ புண்ணியம் என்பதை அவரும் ஒப்புக்கொண்டார்
xxxx
7.புத்தரின் அப்பா பெயர் சுத்தோதனர்; சாக்கிய வம்சத்து சிற்றரசர்; அவருடைய மனைவி மாயாதேவி புத்தரின் அம்மா .
xxxxx

8.புத்தர் இறந்த பின்னர் அவரை தகனம் செய்தனர்; அந்த அஸ்திக்கும் (சாம்பல்) எலும்புகளுக்கும் போட்டாபோட்டி ஏற்பட்டது; ஆளாளுக்கு கிடைத்தை எடுத்துக் கொண்டுசென்றனர்; பலர் அதன் மீது ஸ்தூபி எழுப்பினர்; புத்த ஜாதகக்கதைகளை 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியோர் இந்து மதக் கதைகளை புத்தரின் பூர்வ ஜென்மத்தில் போதி சத்துவராக இருந்தபோது நடந்ததாக சித்தரித்தனர்; இதே தந்திரத்தைப் பின்பற்றி ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த ஜெயதேவர் என்ற கவிஞர் தான் எழுதிய கீத கோவிந்தம் பாடல்களில் புத்தரை ஒன்பதாவது அவதாரமாக சேர்த்தது அஷ்டபதி பாடல் இயற்றினார் ; ஏற்கனவே பாரத நாட்டை விட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட புத்த மதத்துக்கு அத்தோடு முடிவு ஏற்பட்டது ; இதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னரே புத்த பிட்சுக்களின் ஒழுக்கமற்ற வாழ்வைக் கிண்டலடித்து மஹேந்திர பல்லவன் மத்த விலாஸப் பிரஹசணம் என்ற சம்ஸ்க்ருத நாடகத்தை இயற்றினார் .
xxxx
9. பெண்களை புத்த பிட்சுணிகளாக ஏற்றால் தனது மார்க்கத்தில் ஒழுக்கச் சிதைவு ஏற்படும் என்று அஞ்சினார்; ஆயினும் அவரது பிரதம சீடனும் உறவினனும் ஆன ஆனந்தன் என்பவன் மன்றாடிய பின்னர் பெண்களையும் அனுமத்தித்தார்; இப்படிப்பெண்களை அனுமத்தித்தால் 500 ஆண்டுகள் மட்டுமே இந்த மதம் இருக்கும் என்றார் . அவர் அஞ்சியபடியே புத்த மதம் சுருங்கியது; ஆயினும் புத்தர், சம்ஸ்க்ருத மொழியைப் புறக்கணித்ததால் இந்தியாவில் புத்தமதம் அழிந்தது என்பது விவேகானந்தரின் கருத்து
xxxx
10. புத்தரின் தாய் மாயா தேவி பிரசவ வேதனையில் துடித்தபோது அவரது கனவில் 6 தந்தங்கள் உடைய வெள்ளை யானை தோன்றி அவருடைய வயிற்றில் புகுந்தது. இந்தக் கனவு, பல இடங்களிலும் சிற்பங்களில் செதுக்கப்பட்டுள்ளது .
— subham —
Tags- கெளதம புத்தர், க்விஸ் , பிறப்பு, இறப்பு, எண்வகை மார்க்கம், அவதாரம், பெண்கள் , அப்பா, அம்மா, மனைவி, மகன், பெயர், Quiz 87