
Post No. 12,836
Date uploaded in London – – 15 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆசார்யர், தந்தை, தாய், சகோதரன், சகோதரி பெருமை!
ச.நாகராஜன்
ஶ்ரீ பக்தி கௌஸ்துபம் என்ற நூலில் அருமையான தர்ம நெறிகளும், வாழ்வியல் உண்மைகளும் அரிய செய்திகளும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
மிகப் பெரிய, அரிய இந்த நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ள ஒரு சில ஸ்லோகங்களை இங்கு காணலாம்; அதன் மூலம் நூலின் அருமையைப் புரிந்து கொள்ளலாம்.
மாதரம் பிதரம் வ்ருத்தம் பார்ய்யாம் சுதம் சிசும் |
குரும் விப்ரம் ப்ரபன்னம் ச கல்போவிப்ரத் ஷ்வஸன் ம்ருத: ||
ஶ்ரீமத் பாகவதம் 10/45/7
ஶ்ரீ சுகதேவர் கூறியருளுவது : தகுதியுள்ள ஒரு மனிதன் தனது வயதான பெற்றோர்களையும், கற்புள்ள மனைவியையும், குழந்தைகளையும், பிராமணர்களையும், தன்னிடம் அடைக்கலம் புகுந்துள்ளவர்களையும் ஆதரிக்காவிடில் அவனை ஜீவன்ம்ருத (நடமாடும் பிணம்) என்றே சொல்லலாம்.
அவனை உயிர் வாழ்ந்தும் இறந்தவனே என்று கூறலாம்.
**
புரு, யயாதி மன்னனின் இளைய மகன் கூறியது:
கோனுலோகே மனுஷ்யேந்த்ர பிதுராத்மக்ருத: புமான் |
ப்ரதிகர்த்தும் க்ஷமோ யஸ்ய ப்ரஸாதாத்விந்ததே பரம் ||
ஶ்ரீமத் பாகவதம் 9/18/43
ஓ, மன்னா! (யயாதி). இந்தப் பரந்த உலகில் எந்த ஒருவனேனும் தனது தகப்பனுக்கு கைம்மாறு செய்ய முடியுமா? (அவன் ஆற்றிய செயல்களுக்காக என்பது பொருள்). அவனுடைய கருணையினாலேயே முக்தி கிடைக்கப்பெறும். அவனாலேயே உடலானது உருவாக்கப்பட்டது. அதற்கு பதிலாக எதையும் செய்ய முடியுமா?
முடியாது என்பது பொருள். அப்படி கைம்மாறைச் யாராலும் உலகத்தில் செய்ய முடியாது.
உத்தமஷிசந்திதம் குர்ய்யாத் ப்ரோகத்காரி ச் மத்யம: |
அஸ்ரத்தயோதம: குர்யாத் அகர்த்தோர்ச்சரிதம் பிது: ||
ஶ்ரீமத் பாகவதம் 9/18/44
என்றபோதிலும் கூட,
தந்தையின் எண்ணத்தை எவன் ஒருவன் அறிந்து அவன் சொல்லாமலேயே அதன்படி செயலாற்றுகிறனோ அவனே மகன்களில் உத்தமன். தந்தை சொல்வதைச் செய்பவம் மத்தியமானவன். தந்தை கூறியதை அசிரத்தையுடன் செய்பவன் அதமன். எவன் ஒருவன் தந்தை கூறியதைச் செய்யாமல் விட்டு விடுகிறானோ அவன் மகனே அல்ல; வெறும் மலமே!
**
தேவதைகளின் கூற்று:
ஆசார்ய்யோ ப்ரஹ்மணோ மூர்த்தி: பிதா மூர்த்தி; ப்ரஜாபதே” |
ப்ராதா மருத்பதேர்மூத்திர்மாதா சாக்ஷாத் க்ஷிதேஸ்தனு: ||
ஶ்ரீமத் பாகவதம் 6/7/29
ஆசார்யர் வேதத்தின் மூர்த்தி (கருத்துருவம்). தந்தை படைப்புக் கடவுளான ப்ரம்மாவின் மூர்த்தி (கருத்துருவம்). சகோதரன் இந்தினின் மூர்த்தி. தாயாரோ பூமிக்குச் சமமானவள்.
**
தயாய பகினி மூர்த்திதர்மஸ்யோ சாதிதி: ஸ்வயம் |
அக்னேரப்யாகதோ மூர்த்தி: சர்வபூதானி சாத்மன: ||
ஶ்ரீமத் பாகவதம் 6/7/30
சகோதரி அன்பின் திருவுருவம் (மூர்த்தி); வந்திருக்கும் விருந்தாளியோ (அதிதி) தர்மத்தின் திருவுருவம்; ஒரு வருகையாளரோ அக்னியின் திருவுருவம்; எல்லா உயிர்களும் இறைவனின் திருவுருவமே.
ஶ்ரீமத் பாகவதம் 4/21/46
**