QUIZ மஹாவீரர் பத்து QUIZ (Post No.12,838)

Mahavir, who controlled his five senses, 24th Tirthankara of Jain Religion

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,838

Date uploaded in London – –   15 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

QUIZ SERIAL NUMBER—88

Jain Symbol- Swastika 

1.மஹாவீ ரர் எங்கு, எப்பொழுது பிறந்தார் ?

xxxx

2. அவர் சமண மதத்தை ஸ்தாபித்தாரா ?

xxxx

3. மஹாவீரரின் தாய்தந்தையர் யாவர் ?

xxxx

4. மஹாவீரருக்கு தாய்தந்தை இட்ட பெயர் என்ன அவர் ஏன் வர்த்தமான மஹாவீரர் என்று அழைக்கப்பட்டடார் ?

xxxx

5. மஹாவீரர் இறந்தது எங்கே?

xxxx

6. தீர்த்தங்கரரில் இவருக்கு ஏன் அதிகப் புகழ்?

xxxx

7. புத்தர் கடவுள் பற்றி ஒன்றுமே சொல்லவில்லைமஹாவீரர் கடவுள் பற்றி என்ன சொன்னார்  ?

xxxx

8. சமணர்களின் கொள்கை என்ன ?சமணர்கள் சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னர் சாப்பிட மாட்டார்கள்பல் தேய்க்கமாட்டார்கள் என்பதெல்லாம் சரியா?

xxxxx

9.சமணர்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன?

xxxx

10.சமணர்களின் புனிதத் தலங்கள் எவை புனித நூல் எது?

Xxxx

Gomateswara Monolith Statue in Sravana belagola, Karnataka; saint who controled sex desires.

விடைகள் 

1. மஹாவீரர் பிறந்த இடம் குண்டல்பூர் அல்லது குண்டலகிராமம் எனப்படும். வைசாலி அல்லது ஜமுயி குன்றுகள் என்றும் சிலர் சொல்வர். மூன்று இடங்களும் பீஹார் மாநிலத்தில்தான் உள்ளன.

இவர் சரியாக 2600 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தார்; புத்தருக்கு முன்னர் பிறந்தவர்.

xxxx

2.அவர் சமண மதத்தை ஸ்தாபிக்கவில்லை.; தீர்த்தங்கரரர்கள் என்னும் 24 வழிகாட்டிகளில் அவர் கடைசியாக வந்தவர்.

xxxx

3.தாயின் பெயர் த்ரிசலா தேவி ; தந்தையின் பெயர்  தந்தையின் பெயர் சித்தார்த்தன் ; அவர் ஒரு சிற்றரசர்

Xxxx

4.அவருடைய பெயர் வர்த்தமானர் வளங் கொழிக்கச் செய்ப்பவர் என்று பொருள்; அவர் தாயின் கருவில் இருந்தபோதே வளர்ச்சி  ஏற்பட்டது ; ஏராளமான மலர்கள் பூத்துக்குலுங்கின’ இவர் பிரம்மசர்யத்தைக் கடைப்பிடித்ததால் மகாவீர் எனப்பட்டார்; புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம் என்பது அவ்வையார் வாக்கு; புலனை வென்ற வர்த்தமானரும் , ஆஞ்சநேயரும் மட்டுமே இந்தியாவில் மாவீரர் பட்டம் பெற்றவர்கள் .

xxxx

5.பீஹார் மாநிலத்தில் உள்ள பாவாபுரி என்னும் இடத்தில் அவர்   முக்தி அடைந்தார்; அப்போது அவருக்கு வயது 72..அவர் தகனம் செய்த இடத்தில் கோவில் எழுப்பப்பட்டது

xxxx

6.மஹாவீரருக்கு முன்னர் 23 தீர்த்தங்கரர்கள் இருந்தாலும் இவரைத்தான் கடைசி தீர்த்தங்கரர் என்பார்கள்; அதனாலும் அவரது போதனைகளே நமக்குக்  கிடைத்திருப்பதாலும், வரலாற்றுச்  சான்றுகள் கிடைப்பதாலும் இவரே புகழ் பெற்றவர்; மேலும் புத்தர் போல மக்களிடையே உரையாற்றி தனது போதனைகளைப் பரப்பினார் ; புத்தரை க்ஷத்ரிய மன்னர்கள் ஆதரித்தது போல இவரை வைஸ்யர் எனப்படும் வணிகர்கள் ஆதரித்தனர் .xxxxxx

7. சமணர்கள் அல்லது மஹாவீரர் கடவுள் என்று படைப்போன் ஒருவன் உளான் என்று நம்புவதில்லை தாய்ப்பசுவை ஒவ்வொரு கன்றும் எப்படி அடையாளம் காண்கிறதோ, அவ்வாறே அவரவர் வினைகள் அவரவரை அடையாளம் கண்டு ஒட்டிக்கொள்ளும்; அதற்கேற்ப பலனும் கிட்டும். என்பது அவர் கொள்கை; ஆகையால் இதை நாஸ்தீக மதம் என்றே சொல்லவேண்டும் .எங்கும் நிறைந்த தூய ஆன்மாக்களே வழிகாட்டிகள்; அவர்கள் நிலையை எல்லோரும் எய்தலாம்.ஜனன- மரண வட்டத்திலிருந்து மீள்வதே வாழ்க்கையின் குறிக்கோள்; இந்துக்களைப் போலவே கர்மவினை, மறுபிறப்பு, மோட்சம் ஆகியவற்றில் நம்பிக்கை உண்டு .ஆனால் அவைகளை  நிர்வகிக்கும் ஒருவன் இல்லை; கடவுள் இல்லை.

xxxx

8.நல்ல பேச்சு, நல்ல செய்கை, நல்ல சிந்தனை இருந்தால் பிறப்பு- இறப்புச் சுழலிலிருந்து விடுபடலாம் (இந்துக்கள் இதையே த்ரி கரண சுத்தி என்பர் ; தமிழ் இந்துக்கள் இதையே வாய்மை, உண்மை, மெய்மை என்பர்); இவை தவிர அஹிம்சை, திருடாமை , பற்றின்மை, உண்மை பேசுதல், புலன் இன்பம் தவிர்த்தல் ஆகிய குணங்களையும் சமணர்கள் வலியுறுத்துவார்கள்.

இரவு நேரத்தில் சாப்பிட்டால் புழுப் பூச்சிகள் உணவில் இருந்தாலும் திரியாது என்பதால்  இருட்டில் சாப்பிட மாட்டார்கள்; பல் தேய்த்தால் புழுப் பூச்சிக இறக்க நேரிடும் என்பதால் தேய்க்கமாட்டார்கள் ; ஆயினும் இக்காலத்தில் சமணத்துறவிகள் மட்டுமே இதைக் கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் குளிப்பதும் இல்லை.

Xxxxx

9.இரண்டு பிரிவுகள் – திகம்பரர் (உடைகளை அணியமாட்டார்கள்); ஸ்வேதாம்பரர் (வெள்ளை உடை தரிப்போர்).

xxxxxx

10.புனிதத் தலங்கள்

வைசாலி, மகாவீரர் பிறந்த இடம், பீஹார்

பாவாபுரி, மகாவீரர் மறைந்த இடம்,பீஹார்

தேவ்கர் சமணர் கோயில்கள், உத்தரப் பிரதேசம்

சிகார்ஜி சமணக் கோயில்கள், ஜார்க்கண்டு

சத்ருஞ்ஜெய மலை. குஜராத்

பாலிதானா கோயில்கள், குஜராத்

கிர்நார் சமணக் கோயில்கள், (நேமிநாதர் முக்தி அடைந்த இடம்), குஜராத்

தில்வாரா கோயில், இராஜஸ்தான்

கோமடேஸ்வரர், சிரவண பெலகோலா , கர்நாடகம்

ஜைன காஞ்சி, தமிழ்நாடு

மஹாவீரர் போதனைகளை பலர் தொகுத்து அளித்துள்ளனர்இவை ஒரே புஸ்தகத்தில் இல்லைஇவைகளை  ஆகம சூத்திரங்கள் என்பர்

—subham —-

TAGS- மஹாவீரர், சமண மதம், கடவுள் இல்லை, கர்மா வினை , பீஹார், போதனைகள், தாய், தந்தை, வர்த்தமான

Leave a comment

Leave a comment