ஊக்கம் தர ஒரு புலவன் பாரதி அடா! (Post No.12,840)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,840

Date uploaded in London –  –  16 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஊக்கம் தர ஒரு புலவன் பாரதி அடா!

ச.நாகராஜன்

ஊக்கம் தர ஒரு புலவன் பாரதி அடா,

உற்சாகத்திற்கு ஒரு புலவன் பாரதி அடா

தேசபக்தி ஊட்ட ஒரு புலவன் பாரதி அடா

தெய்வபக்தி ஊட்ட ஒரு புலவன் பாரதி அடா

பெண்மையைப் பேச ஒரு புலவன் பாரதி அடா

அதைப் போற்றத் தூண்டும் ஒரு புலவன் பாரதி அடா

மாயை பற்றிச் சொல்ல ஒரு புலவன் பாரதி அடா

அதில் மயங்காதே என்று சொல்ல ஒரு புலவன் பாரதி அடா

விஞ்ஞான மேன்மை சொல்ல ஒரு புலவன் பாரதி அடா

அதை வரவேற்றுப் பாட ஒரு புலவன் பாரதி அடா

இந்து மத மேன்மை சொல்ல ஒரு புலவன் பாரதி அடா

அதைப் போற்றிப் பாடல் தர ஒரு புலவன் பாரதி அடா

பாரதப் பெருமை சொல்ல ஒரு புலவன் பாரதி அடா

அதைப் போற்றத் தூண்டும் ஒரு புலவன் பாரதி அடா

இமயமலை எங்கள் மலை என்று சொன்னான் பாரதி அடா

அதன் உயரமளவு ஏறி விட்டான் பாரதி அடா

தமிழின் பெருமை சொல்ல ஒரு புலவன் பாரதி அடா

தமிழர் விழித்தெழச் செய்ய வந்த புலவன் பாரதி அடா

கவிக் கம்பன் பெருமை சொன்னான் பாரதி அடா

வள்ளுவரை ஏற்றி வைத்தான் பாரதி அடா

அனைத்தும் பாடிய ஒரு கவிஞன் பாரதி அடா

அதை முழுதும் சொல்ல ஒருவரும் இல்லை பாரதி அடா

உலகம் கண்ட பெருங்கவிஞன் பாரதி அடா

உண்மை சொன்னேன் நம் தமிழ்க் கவிஞன் பாரதி அடா

***

Leave a comment

Leave a comment