
Post No. 12,843
Date uploaded in London – – 17 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பலரது பார்வையில் அரை கிளாஸ் நீர்!
ச.நாகராஜன்
நல்ல நம்பிக்கை உடையவரை ஆங்கிலத்தில் ஆப்டிமிஸ்ட் (OPTIMIST) என்கிறோம்.
தோல்வி மனப்பான்மை உடையவரை ஆங்கிலத்தில் பெஸ்ஸிமிஸ்ட் (PESSIMIST) என்கிறோம்.
உடன்மறை சிந்தனை பாஸிடிவ் திங்கிங். (POSITIVE THINKING)
எதிர்மறை சிந்தனை நெகடிவ் திங்கிங். (NEGATIVE THINKING)
இது மட்டுமின்றி ஒவ்வொருவரின் பார்வையும் வித்தியாசமானதாகவே இருக்கக் கூடும்.
இதைச் சற்று விளக்கமாகப் பார்ப்போமா?
ஒருவர் ஒரு கண்ணாடி டம்ளரில் பாதி அளவு நீரை நிரப்பி ஆப்டிமிஸ்டிடம் காண்பிக்கிறார்.
ஆப்டிமிஸ்ட் கூறுகிறார் : கிளாஸ் பாதி அளவு நிரம்பி இருக்கிறது.
பெஸ்ஸிமிஸ்ட் கூறுகிறார் : கிளாஸ் பாதி காலியாக இருக்கிறது.
இதையே ஒரு எஞ்சினியரிடம் காட்டிய போது அவர் கூறுகிறார்:
“இந்த கிளாஸ் டம்ளர் அதற்கான நீரை விட ஓவர் டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது!”
இதையே ஒரு கம்யூனிஸ்டிடம் காட்டியபோது அவர் கூறுகிறார்”
“இந்த கிளாஸில் நிறைய நீர் இருக்கிறது அதை மற்ற கிளாஸ்களுக்கு சரி சமமாக விநியோகிக்க வேண்டும்.”
இதையே ஒரு உளவியலாளரிடம் (சைக்காலஜிஸ்ட்) காட்டியபோது அவர் கூறுகிறார் :
“இந்த கிளாஸில் உள்ள நீர் உங்களை எப்படி உணரவைக்கிறது?”
இதையே ஒரு க்வாண்டம் இயற்பியலாளரிடம் காட்டியபோது அவர் கூறுகிறார்:
இந்த நீரானது கிளாஸுக்கு உள்ளேயும் இருக்கலாம் அல்லது வெளியேயும் இருக்கலாம் அல்லது இரு இடங்களிலும் ஒரே சமயத்தில் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். இது நிஜமான நீராகவும் இருக்கலாம் அல்லது வெறும் வெட் வெக்டாராகவும் (WET VECTOR) இருக்கலாம்.
இதையே இடர் ஏற்புத்துணிவு முதலீட்டார்களிடம் (VENTURE CAPITALIST) காண்பித்தபோது அவர் கூறுகிறார்:
“இந்த கிளாஸானது சீர்குலைக்கும் பான விநியோக அமைப்பில் 50 சதவிகித பயனருக்கான அளவிலிருக்கிறது.”
இதை ப்ராஜக்ட் மானேஜர் ஒருவரிடம் காட்டியபோது அவர் கூறுகிறார்:
“இந்த கிளாஸானது எவ்வளவு தேவையோ அதற்கு மேல் இரு மடங்காக இருக்கிறது.
ஒரு மார்கெட் நிபுணரிடம் காட்டிய போது அவர் கூறுகிறார்:
“உங்களது கிளாஸை ரீ-சைஸிங் (அளவை மாற்றல்) செய்ய வேண்டும்.”
ஒரு ஹெல்த் கோச்சிடம் காட்டியபோது அவர் கூறுகிறார்:
“இப்போதென்ன போச்சு, இந்த கிளாஸை காலியாக்கி மீண்டும் நீர் நிரப்ப வேண்டியது தானே!”
ஒரு ஜங்கியனிடம் (ஜங் என்னும் பிரபல உளவியலாளர் கொள்கைப் பிடிப்புடையோர்) காட்டியபோது அவர் கூறுகிறார்:
“ஆ! இந்த கிளாஸ்!! இது முழுமையின் அடையாளம். ஆக்க சக்தி கொண்டது. நமது உள்ளடங்கிய பிரக்ஞையை பிரதிபலிக்கிறது. பாதி நிரம்பி இருந்தால் என்ன, பாதி காலியாக இருந்தால் என்ன, இது உங்களின் உள்ளார்ந்த ஆத்மாவை அல்லவோ தெளிவான உருவெடுத்தலாகக் காண்பிக்கிறது.”
இதை ஒரு பண்பாட்டு ஆலோசகரிடம் காட்டியபோது அவர் கூறுகிறார்:
“கிளாஸில் எது தான் இருக்கட்டுமே, அது அனைத்து மக்களையும் ஒருங்கிணக்கும் திறனுடன் இருக்க வேண்டும், அது தான் முக்கியம்!”
எதையும் முன்னெடுத்துச் செல்லும் ஒருவரிடம் (ப்ரோஆக்டிவ் பர்ஸனிடம்) காட்டியபோது அவர் கூறுகிறார்:
“நிஜம் என்னவென்றால் அது முழுமையாக இருந்தது. நான் தான் மறுபடியும் இப்படி நிரப்பினேன்.
எதையும் ஆராயும் ஒரு பிரச்சனைக்காரர் கூறுகிறார்:
“கிளாஸில் நிஜமாக உள்ளே என்ன இருக்கிறது என்பதை ஆராய வேண்டும்….”
எப்போதும் எதற்கெடுத்தாலும் கவலைப்படும் ஒருவர் கூறுகிறார்:
“ஐயோ! மீதி இருக்கும் அரை கிளாஸ் தண்ணீரும் காலைக்குள் ஆவி ஆகி விடுமே!”
ஒரு இயற்பியலாளரிடம் அரை கிளாஸ் நீரைக் காட்டியபோது அவர் கூறுகிறார்:
“நிஜமாகப் பார்த்தால் கிளாஸில் பாதியளவு நீர் இருக்கிறது. மீதி பாதியளவு காற்று இருக்கிறது. ஆகவே கிளாஸ் முழுமையாக நிரப்பப்பட்டு இருக்கிறது.”
ஒரு கருத்தரங்கத் தொகுப்பாளரிடம் இதைக் காட்டியபோது அவர் கூறுகிறார்:
“கிளாஸ் பாதி நிரம்பி இருக்கிறதா, பாதி காலியாக இருக்கிறதா என்பது ஒரு பிரச்சனை அல்ல; விவாதத்தைத் தொடங்கி வைக்க பத்து நிமிடங்கள் வேண்டும். ஏன் இந்த பவர்பாயிண்ட் ப்ரஸண்டேஷன் வேலை செய்யவில்லை என்பது தான் விளங்கவில்லை.”
ஒரு செயற்கை நுண்ணறிவு மாடல் அழகி (AI MODEL) கூறுகிறார்:
“பாதி கிளாஸ் நிரம்பி இருக்கிறதா அல்லது பாதி கிளாஸ் காலியாக இருக்கிறதா என்பதா முக்கியம், எனது கோடிங் (CODING) இருப்பதைக் கூடக் குடிக்க அனுமதிக்க மாட்டேன் என்கிறதே!”
பால் ஹோகனிடம் (PAUL HOGAN) இதைக் காட்டியபோது அவர் கூறுகிறார்: “ இது கிளாஸே இல்லை!”
ஒரு சந்தர்ப்பவாதியிடன் இதைக் காட்டியபோது அவர் கருத்து ஏதும் கூறவில்லை. கிளாஸை டபக்கென்று பிடுங்கி இருக்கும் நீரைக் குடித்து விட்டார்.
இதை ஒரு பத்திரிகையாளரிடம்/ டி.வி.சேனல் ஒளிபரப்பாளரிடம் காட்டியபோது அவர் கூறுகிறார்: “நாம் எல்லோரும் கிளாஸைப் பார்த்தவாறே எப்படி புன்னகை புரியப் போகிறோம்?”
ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது?
பார்ப்பவர் பார்வை பல விதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்.
யத் பாவம் தத் பவதி!
உள்ளத்தின் உணர்விற்கேற்ப உண்மை அமைகிறது; அவ்வளவு தான்!
பலரது பார்வையைப் பார்த்து விட்டீர்கள், உங்கள் பார்வை என்ன? விமரிசனம் என்ன, ஒரு வரி எழுதிப் போடுங்கள்!
***
(இணையதளத்தில் படித்த ஆங்கில விமரிசனங்களின் தொகுப்பு)