QUIZ குரு நானக் பத்து QUIZ (Post No.12,845)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,845

Date uploaded in London – –   17 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

QUIZ SERIAL NUMBER—89

1.குரு நானக் எங்கே எப்போது பிறந்தார்?

xxxx

2.அவருடைய தாய் தந்தையர் யாவர்?

Xxxxx

3.குரு நானக்கின் சீடர்கள் யார்அவருக்குப் பின்னர் சீக்கிய மதத்தில் எத்தனை குருமார்கள் வந்தனர் ?

Xxxx

4.அவர் எப்போதுஎங்கே இறந்தார்?

Xxxx

5.குரு நானக் ஏன் சீக்கிய மதத்தை தோற்றுவித்தார் ?

Xxxxx

6.அவருடைய உபதேசங்கள் என்ன அவைகளை எங்கே படிக்கலாம்?

Xxxxx

7. குரு நானக் அற்புதங்களைச் செய்தாரா ?

Xxxx

8.அவர் எங்கெங்கு பயணம் செய்தார் ?

xxxxx

9.குரு நானக் திருமணம் ஆனவரா குழந்தைகள் உண்டா ?

xxxx

10. அவர் மாமிசம் சாப்பிவிட்டாரா ?

xxxx

விடைகள்

1.குரு நானக், 15 ஏப்ரல் 1469ல் பிறந்தார். சீக்கிய மதத்தை நிறுவிய அவர் , கபீரின் சீடர் . ராய் பொய்டி தால்வாண்டி கிராமத்தில் ஒரு இந்து மதக் குடும்பத்தில் பிறந்தார்; இப்போது  அது பாகிஸ்தான் எல்லைக்குள் லாகூர் அருகில் இருக்கிறது  நன்கானா  சாஹிப் என அழைக்கப்படுகிறது. அங்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது. Rai Bhoi di Talvandi [now Nankana Sahib, Pakistan], near Lahore in Pakistan.

xxxxxx

2.தந்தை பெயர் மேத்தா கல்யாண் தாஸ் பேடி (களு மேத்தா) , நானக்கின் தாயார் பெயர் திரிப்பா தேவி .  சகோதரியின் பெயர்  பீபி நானகி .அவரும்  ஒரு ஆன்மீகவாதி. .

xxxxx

3.அவருக்குப் பின்னர் சீக்கிய மதத்தில் ஒன்பது குருமார்கள் வந்தனர் ; கடைசியாக வந்த குருகோவிந்த சிம்மன் இனி குரு ஸ்தானத்தில் யாரும் வேண்டாம் என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்தார்.

xxxxx

4.குரு நானக்  22 செப்டம்பர் 1539ல் இறந்தார். அவர் இறந்த இடமும் பாகிஸ்தானுக்குள்தான் இருக்கிறது ; அவர் இறந்த நரோவால் கர்தார்பூர் என்னும் இடத்தில் தர்பாரசாஹிப் குருத்வாரா கட்டப்பட்டுள்ளது

Gurdwara Darbar Sahib Kartar Pur in Narowal, Pakistan.

xxxx

5.கடவுள் ஒருவரே; அவர் எல்லா மதத்திற்கும் பொதுவானவர்; உருவமற்றவர்   என்று  சொல்லவும் முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும்  பொதுவான மத்திய பாதையைக் காட்டவும் ; அர்த்தம் புரியாமல் செய்யப்படும் சடங்குகள் தேவை இல்லை என்று காட்டவும் புதிய மதத்தை உருவாக்கினார். ஜாதிப்பிரிவினைகளையும் அவர் எதிர்த்தார்.

சீக்கியர்களும் மறுபிறப்பு, கர்ம வினைகொள்கைகளில் நம்பிகை உடையவர்கள். மேலும் இந்துக்கடவுளரின் பெயர்கள், ஓம் ஆகியன சீக்கிய வேதப்புஸ்தகத்தில் இருக்கின்றன ; சீக்கியர்கள் ஆதிக்கிரந்தம் என்னும் புஸ்தகத்தை வழிபடுகின்றனர் ; சுருக்கமாகச் சொன்னால் இந்துமதத்துக்கு மிகவும் நெருக்கமானது .

XXXX

6. குருநானக்கின் 3 போதனைகள்

வந்த் சக்கோ: தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்தல், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்.

கிரட் கரோ: சுரண்டல் அல்லது மோசடி இல்லாமல், நேர்மையாக ஒரு வழ்க்கையை உருவாக்கிக் கொள்ளுதல்.

நாம் ஜப்னா: பரிசுத்த நாமத்தை ஜபித்தல், இதனால் எல்லா நேரங்களிலும் கடவுளை (இறைவன் -ஓயாத பக்தி) நினைவில் கொள்ளுதல்.

குரு கிரந்த சாஹிப் என்னும் சீக்கிய மத வேதப்  புஸ்தகத்தில் அவருடைய மற்றும் அவருக்குப்பின் வந்த குருமார்களின் போதனைகளைக் காணலாம்

XXXX

7.குரு நானக் பல அற்புதங்களைச் செய்ததாக பக்தர்கள் நம்புகின்றனர்; நதிகளின் போக்கையும் சூரிய சந்திரர்களின் போக்கையும் மாற்றினார்; நோய்களைத் தீர்த்தார்; அக்ஷய பாத்திரம் போல உணவு படைத்தார்  என்பன சில .

XXXX

8.குரு நானக் நிறைய மாநிலங்களுக்கும்,பல நாடுகளுக்கும் சென்றார். ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்தவர் ,  வங்காளம், அசாம், தமிழ்நாடு, காஷ்மீர், லடாக், திபெத், இலங்கை  ,அரேபிய தீபகற்பத்தில் உள்ள பாக்தாத், மெக்கா மற்றும் மதினா ;அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார். இவர் லாசா (திபெத்) செல்லும்போது, தவாங் வழியாக பூடானைக் கடந்து சம்துராங் சு வழியாக திபெத்துள் நுழைந்தார். . இன்னும் சில பயணங்கள் பற்றி உறுதியான தகவல் கிடைக்கவில்லை.

xxxxx

9.குரு நானக்,16 வயதில் சுலக்கினி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.. இவர்களுக்கு சிரீசந்த், இலட்சுமிசந்த் இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.

XXXX

10.சீக்கிய குருத்வாரா நடத்தும் லங்கார் என்னும் 24 மணி நேர உணவுக்  கூடங்களில் மாமிசம் சமைப்பதோ பரிமாறுவதோ இல்லை; குரு நானக்கும் மாமிசம் சாப்பிட்டதில்லை என்பதே பெரும்பாலோர் கருத்து. ஆனால் சீக்கியர்கள் மாமிசம் சாப்பிடுவார்கள் . சில பிரிவினர் மாமிசமோ , முட்டையோ சாப்பிடுவதில்லை.

—SUBHAM—

TAGS- குரு நானக் பத்து, கேள்வி பதில், குருத்வாரா , மாமிச உணவு

Leave a comment

Leave a comment