ஷீரடி சாய்பாபா பொன்மொழிகள்: ஜனவரி 2024 நற்சிந்தனை காலண்டர் (Post.12,854)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,854

Date uploaded in London – –   27 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ஜனவரி 1 புத்தாண்டு விழா, 12 விவேகானந்தர் ஜெயந்தி, 14 போகிப் பண்டிகை, 15 பொங்கல், 16 மாட்டுப்;பொங்கல் , திருவள்ளுவர், 17 உழவர் நாள்; 25 தைப்பூசம், 26 குடியரசு தினம் ; 30 காந்தி நினைவு தினம் .

அமாவாசை – ஜனவரி 10; பெளர்ணமி 25. ஏகாதஸி – 7, 21

xxxx

ஜனவரி 1 திங்கட் கிழமை

இறைவனிடம் பரிபூரண சரணாகதி அடைந்தபின் , நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவை இல்லை. அவரே பொறுப்பேற்று உங்களை வழி  நடத்துவார் .

xxxx

ஜனவரி 2 செவ்வாய்க் கிழமை

இந்த உலகத்தில் ஒரு மதம் மட்டுமே உள்ளது; அது அன்பு மதம். இந்த உலகத்தில் ஒரே மொழிதான் உள்ளது. அது இதயத்தின்  மொழி,

xxxx

ஜனவரி 3 புதன் கிழமை

கடின உழைப்பால் பெறும் பொருளே நிலைத்து நிற்கும்.

xxxx

ஜனவரி 4 வியாழக் கிழமை

கோபம், பொறாமை, ஆணவம் ஆகிய மூன்றும் கொடிய நோய்கள். அதிலிருந்து விலகியே இருங்கள்.

xxxx

ஜனவரி 5 வெள்ளிக் கிழமை

அன்பே மிக உன்னதமானது ; அன்பு அலைகள் மேலெழும்பினால் உலகம் சுபிட்சம் ஆகிவிடும் .

xxxx

ஜனவரி 6 சனிக் கிழமை

நானிருக்க பயம் ஏன் ?

xxxx

ஜனவரி 7 ஞாயிற்றுக் கிழமை

கடவுள் முதல் மண்ணில் நெளியும் புழுக்கள் வரை எந்த உயிரிடத்திலும் உயர்வு தாழ்வு காட்ட வேண்டாம் .

xxxx

ஜனவரி 8 திங்கட் கிழமை

என்னுடைய, பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.

XXXX

ஜனவரி 9 செவ்வாய்க் கிழமை

நீ என் உபதேசத்திற்காகவும், உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.

XXXX

ஜனவரி 10 புதன் கிழமை

நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.

XXXX

ஜனவரி 11 வியாழக் கிழமை

நோயிலும் வறுமையிலும் வாடுவோருக்கு உதவுவதன் மூலம் கடவுளின் அன்புக்குப் பாத்திரர் ஆக முடியும்.

xxxx

ஜனவரி 12 வெள்ளிக் கிழமை

ஒருவன் தன் உடலில் சரிகைத் துணிகளைக் கட்டிக் கொண்டு ஆடம்பர அலங்காரத்துடன் இருக்கிறான். மற்றொருவன் கந்தைத் துணியை உடுத்திக் கொள்கிறான். இரண்டின் பலனும் உடலைப் போர்த்திக் கொள்வதேயன்றி வேறில்லை. அறுசுவை உணவோ, கூழோ எதை உண்டாலும் முடிவு ஒன்றுதான், வயிறு நிறைந்து பசி தீருவதே அது.

xxxx

ஜனவரி 13 சனிக் கிழமை  

யார் என்னை நினைக்கிறாரோ அவரை நான் நிரந்தரமாக ஞாபகத்தில் வைக்கிறேன்.எனக்கு வண்டியோ குதிரையோ ஆகாயவிமானமோ ரயில்வண்டியோ தேவையில்லை. என்னை யார் அன்புடன் கூவி அழைக்கிறாரோ அவருக்கு நான் தாமதமின்றி உடனே தோன்றுகிறேன்.

xxxx

ஜனவரி 14  ஞாயிற்றுக் கிழமை

கோபம் என்பது கொதிக்கும் நீரைப் போன்றது ;அதை தேக்கி வைத்தாலும் அடுத்தவர் மீது ஊற்றினாலும் ஆபத்து தான். அமைதியாக இருந்து ஆற வைப்பது ஒன்றே அற்புத வழி.

 Xxxx

ஜனவரி 15 திங்கட் கிழமை

யார் என்னை நினைக்கிறாரோ அவரை நான் நிரந்தரமாக நினைவில் வைக்கிறேன். யார் என்னை அன்புடன் கூவி அழைக்கிறார்களோ அவருக்கு நான் தாமதமின்றி உதவுகிறேன்.

Xxxx

ஜனவரி 16 செவ்வாய்க் கிழமை

கர்மங்களைக் குறைத்துக்கொள்ள ஒரே வழி அவைகளை  தைரியமாக அனுபவிப்பதுதான். அதற்கான சக்தியை நான் தருகிறேன்  .அப்போது துன்பம் என்ற எண்ணம் வராது .

Xxxx

ஜனவரி 17 புதன் கிழமை

நீ எதைச் செய்தாலும் நான் அறிவேன் ; உனது செயல்களை நல்லதாகவும் நடத்தை சரியாவையும் இருந்தால், அவற்றை ஆசீர்வதித்து உடனிருந்து கவனித்துக் கொள்வேன் .

Xxxx

ஜனவரி 18 வியாழக் கிழமை

மனம் முரட்டுத் தனமானது; அதை அடக்குவது எளிதல்ல; அதன் தயவு இல்லாமல் கடவுளைக் காணவும் முடியாது.

Xxxx

ஜனவரி 19 வெள்ளிக் கிழமை

ஷீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து செளகரியத்தை அடைகிறான்.

 Xxxx

ஜனவரி 20 சனிக் கிழமை

துவாரகா மாயியை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்.

Xxxx

ஜனவரி 21 ஞாயிற்றுக் கிழமை

இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.

xxxx

ஜனவரி 22 திங்கட் கிழமை

என்னுடைய சமாதி என் பக்தர்களுக்கு அநேக ஆசீர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.

 xxxx

ஜனவரி 23 செவ்வாய்க் கிழமை

என்னுடைய பூத உடல் என் சமாதியிலிருந்து பேசும்.

xxxxx

ஜனவரி 24 புதன் கிழமை

நீ என்னை அடைந்தால் நான் உன் மீது கடைக்கண் பார்வை செலுத்தி அருள் மழை பொழிவேன்.

xxxx

ஜனவரி 25 வியாழக் கிழமை

எப்போதும் கடவுளை நினை; அப்போது  அவர் என்ன செய்கிறார் என்பது உனக்குத் தெரியும்

xxxx

ஜனவரி 26 வெள்ளிக் கிழமை

தேவையற்ற சண்டை சச்சரவுகளிலிருந்து விலகியே நில்.

xxxx

ஜனவரி 27 சனிக் கிழமை

நீ கடவுளைத்  துதி ; நான் கடவுளின் அடிமைதான் .நான் உங்களுடைய தொண்டருக்குத் தொண்டன் .

xxxx

ஜனவரி 28 ஞாயிற்றுக் கிழமை

லாபமும் நஷ்டமும் பிறப்பும் இறப்பும் இறைவனின் கைகளில்தான் உள்ளது .

xxxxx

ஜனவரி 29 திங்கட் கிழமை

காம இச்சசைகளுக்கு அடிமையானோருக்கு முக்தி என்பது கிடைக்காது.

xxxx

ஜனவரி 30 செவ்வாய்க் கிழமை

என்னுடைய சமாதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும், தீவிரமாகவும் இருப்பேன்.

 xxxx

ஜனவரி 31 புதன் கிழமை

 என்னிடன் வருபவர்களுக்கும், என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும், நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.

BONUS SAYING

மனத்தை மகிழ்ச்சியோடு வைத்திருந்தால் ஆரோக்கியமாக வாழலாம். கவலை, அவசரம், பயம் ஆகியவற்றால் அலைக்கழிக்கப்படாமல் இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம் .

–subham–

TAGS– ஜனவரி 2024,   நற்சிந்தனை,  காலண்டர், ஷீரடி சாயிபாபா,  பொன் மொழிகள், சாய்பாபா

Leave a comment

Leave a comment