QUIZ  விநாயகர் பத்து QUIZ (Post No.12,858)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,858

Date uploaded in London – –   28 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

QUIZ பிள்ளையார் பத்து QUIZ (Post No.12,283) என்பது 16 ஜூலை 2023ல் வெளியானது ; பிள்ளையார் வினா-விடை (க்விஸ்) என்ற தொகுப்பு 2012 டிசம்பர் 31-ல் வெளியானது  இதோ விநாயகர் பத்து (Total 40 questions on Lord Ganapati in Tamil):

QUIZ SERIAL NUMBER—90

1.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள 6 அடி உயர பிள்ளையாருக்கு ஏன் முக்குறுணி விநாயகர் என்று பெயர் ?

XXXX

2. பொல்லாப் பிள்ளையார் எங்கே இருக்கிறார் ஏன் அப்படிப் பொல்லாதவர் ஆனார் ?

XXXXX

3. பாரதியாருக்குப்பிடித்த பிள்ளையார் எங்கே இருக்கிறார் ?

XXXXX

4.மாற்றுரைத்த பிள்ளையார் என்ன செய்தார்?

XXXXX

5.ஜப்பானியர்களும் இந்து தெய்வங்களை வணங்குகிறார்கள்ஜப்பானில் கணபதிக்கு என்ன பெயர்?

XXXX

6.ஒரு காரியத்தைத் துவங்கும்போது அது நினைத்த வடிவில் இல்லாமல் உருமாறிப்போன்னால் சொல்லும் பழ மொழியைப் பூர்த்தி செய்யுங்கள் .

பிள்ளையார் பிடிக்க ————-  ஆனது

(களி மண்ணில் பிள்ளையார்  உருவத்தைச் சமைக்க எண்ணிய ஒருவரின் செயலை விளக்கும் பழ மொழி இது)

XXXX

.7.கரும்பாயிரம் பிள்ளையார் எந்த ஊரில் இருக்கிறார் ?

XXXX

8.படிக்காசு விநாயகர் எங்கே இருக்கிறார் ஏன் அந்தப் பெயரை மக்கள் சூட்டினார்கள்?

XXXX

9.அச்சது பொடிசெய்த அது தீரன் என்று கணபதியை அருணகிரிநாதர் புகழ்வது ஏன் ?

XXXX

10. பல வகைப் பிள்ளையார்கள் இருக்கிறார்கள் ஆயினும் புரோகிதர்கள் எல்லா சடங்குகளையும் விநாயகரின் 16 பெயர்களைச் சொல்லி பூஜைகளைத் துவங்குவார்கள் அவை யாவை?

XXXXX

விடைகள்

1.மதுரை மீனாட்சி கோவிலில் உள்ள பெரிய பிள்ளையாருக்கு முக்குறுணி விநாயகர் என்று பெயர். பிள்ளையார் சதுர்த்தி அன்று முக்குறுணி அரிசியில் மிகப் பெரிய கொழுக்கட்டை செய்து நைவேத்தியம் செய்வர்; 21 லிட்டர் அரிசிமாவால் செய்யப்படும் ராட்சத கொழுக் கட்டையாகும். ஒருகுறுணி என்பது நாலு பட்டணம் படிக்குச் சமம். 3 குறுணி என்பது 12 படி அல்லது 21 லிட்டருக்குச் சமம்..

XXXX

2.நம்பியண்டார் நம்பியின் உணவை உண்டு அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்திய பொல்லாப் பிள்ளையார் திருநாரையூரில் வெள்ளாற்றங்கரையிலே வீற்றிருக்கிறரர். இளம் வயதில் , தந்தைக்குப்பதிலாக  ஒருநாள் நம்பியாண்டார் நம்பி, அந்தக் கோவிலுக்குப் பூஜை செய்யச் சென்றார் . அவர் கொண்டுசென்ற பிரசாதத்தை விநாயகர் சிலை சாப்பிடவில்லை. உடனே தான் ஏ தோ தவறு செய்துவிட்டதாக எண்ணி, தலையை கருங்கல்லி ல் மோதிக் கொள்ளச் செல்லுகையில்  பிள்ளையாரே நேரில் தோன்றி பிரசாதம் முழுதையும்  தின்று தீர்த்தார் ; பொல்லாதவர் என்ற பெயரும் பெற்றார் ..

XXXX

3.பாரதியார் பாடிய, வணங்கிய, விநாயகர் புதுச்சேரியில் இருக்கிறார்; அவருடைய பெயர் மணக்குள விநாயகர்.

XXXX

4.விருத்தாசலம் (திரு முதுகுன்றம்) மாற்றுரைத்த பிள்ளையார், சுந்தரர்- பரவை நாச்சியார் வாழ்வுடன் தொடர்புடையவர். பரவை நாச்சியாருக்கென வேண்டி சுந்தரர், சிவ பெருமானிடமிருந்து பொற்காசுகளைப் பெற்றார். அவற்றை மணிமுத்தாற்றில் இடுவ்தற்கு முன் அப்பொன்னை மாற்றுரைத்து, அதற்கு இப்பிள்ளையாரைச் சாட்சியாக வைத்ததால், அவர் மாற்றுரைத்த பிள்ளையார் எனப் பெயர் பெற்றார்.

XXXX

5.ஜப்பானில் கணபதிக்கு கங்கிடன் KANGITEN  என்று பெயர்; கணேசன் என்ற பெயர் இப்படித் திரிந்துவிட்டது.

XXXX

6.பிள்ளையார் பிடிக்க குரங்கு ஆனது – என்பது பழமொழி

XXXX

7.கும்பகோணத்தில் உள்ள புகழ்பெற்ற பிள்ளையாருக்குக் கரும்பு ஆயிரம் பிள்ளையார் என்று பெயர்.

XXXX

8.பஞ்சம் நிலவிய காலத்தில் அப்பரும் சம்பந்தரும், திருவீழிமிழலையில்

“வாசி தீர வே காசு நல்குவீர்” — என்று சிவ பெருமானை நோக்கிப் பதிகம் பாடினர். நாள்தோறும் கோவில் படியில் ஒரு தங்கக் காசு வீதம் வந்தது. அங்கிருக்கும் பிள்ளையார் படிக்காசு பிள்ளையார் ஆவார். இவர் பேரளத்திலிருந்து நாலு மைல் தொலைவில் கோவில் கொண்டுள்ளார். தமிழ் அறிஞர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையால் துதிக்கப் பெற்றவர்:-

XXXX

9.பிள்ளையாரை வணங்காமல் சென்றதால் சிவனுடைய ரதத்தின் அச்சு பொடிப் பொடியானதாம் . அதை அருணகிரி நாதர்  , திருப்புகழில் அழகாகப்பாடுகிறார் :

கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி

கப்பிய கரிமுகன் அடிபேணி

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ

கற்பகம் எனவினை கடிதேகும்

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்

மற்பொரு திரள்புய மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை

மட்டு அவிழ் மலர்கொ(ண்)டு பணிவேனே

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்

முற்பட எழுதிய முதல்வோனே

முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம்

அச்சு அது பொடிசெய்த அதிதீரா

அத்துயர் அது கொ(ண்)டு சுப்பிரமணி படும்

அப்புனம் அதனிடை இபமாகி

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை

அக்கணம் மணம் அருள் பெருமாளே.

XXXX

10. விநாயகர் பூஜையில் மஞ்சளில் பிள்ளையார் செய்து, அதன் மீது மஞ்சள் அரிசி அல்லது மலர்களால் பூஜிக்கப் வேண்டும் ; அதற்கான  16 நாமாக்கள்

மங்களம் வாய்ந்த ஸுமுகன்

ஒற்றைக் கொம்பை உடைய ஏக தந்தன்

கபில நிறம் வாய்ந்த கபிலன்

யானைக் காதுகள் உள்ள கஜகர்ணன்

பெரும் வயிற்றோடு கூடிய லம்போதரன்

குள்ளத் தோற்றமுள்ள விகடர்

சகல விக்கினங்களுக்கும் ராஜாவான விக்னராஜன்

தனக்கு மேல் ஒருவன் இல்லாத நாயகன் விநாயகன்

நெருப்பைப்போல ஒளிவீசும் தூமகேது

பூத கண ங்களுக்குத் தலைவரான கணாத்யக்ஷன்

நெற்றியில் பிறைச்சந்திரனைச் சூடிய பாலசந்திரன்

யானை முகத்தையுடைய கஜானனன்

வளைந்த துதிக்கை உள்ள வக்ரதுண்டன்

முறம் போன்ற காதுகள் உடைய சூர்ப்பகர்ணன்

தம்மை வணங்கி நிற்கும் பக்தகோடிகளுக்கு அருள்புரியும் ஹேரம்பன்

கந்தப் பெருமானின் அண்ணனான ஸ்கந்தபூர்வஜன்

–இவ்வாறு சொல்லப்படும் பிள்ளையாரின் 16 நாமங்களையும்

கல்வி கற்கும் போதும், வீட்டைவிட்டுப் புறப்படும்போதும்,

போர்க் காலத்திலும், இன்னலுற்றபோதும்

யாராவது வாசித்தாலும், கேட்டாலும் அவர்களுக்கு

எந்த இடையூறும் வராது. –கந்த புராணம்

எளிதில் நினைவிற்கொள்ள ஸ்லோக வடிவில்

ஸுமுகைஸ்சேகதந்தஸ்ச கபிலோகஜகர்ணக:

லம்போதரஸ்ச விகடோ விக்னராஜோ விநாயக:

தூமகேதுர்கணாத்யக்ஷ பாலச்சந்த்ரோ கஜானன:

வக்ரதுண்ட ஸூர்பகர்ண ஹேரம்பஸ்கந்தபூர்வஜ:

—SUBHAM—

TAGS- விநாயகர் பத்து, கேள்வி பதில், 16 பிள்ளையார் பெயர்கள், கைத்தல நிறைகனி, Quiz No.90

Leave a comment

Leave a comment