மனிதனின் பற்றுக்கும் முக்திக்கும் மனமே காரணம்! (Post No.12,860)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,860

Date uploaded in London –  –  29  December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 ஒரு வரி சுபாஷிதங்கள் 

மனிதனின் பற்றுக்கும் முக்திக்கும் மனமே காரணம்! 

ச.நாகராஜன்

அழகிய சில சொற்களிலேயே மிக உயர்ந்த கருத்துக்கள் உள்ள சம்ஸ்கிருத சுபாஷிதங்களில் மேலும் சில இதோ 

1. ந பார்யாயா: பரம் சுகம்|

மனைவியுடன் அனுபவிப்பதான சுகத்தை விட இன்னும் மேலான சுகம் ஒன்றும் கிடையாது.

2. ந ஷ்வ: ஷ்வ உபாசீத் !

நாளைக்கு இதைச் செய்து கொள்ளலாம் என்று ஒருவன் ஒரு காரியத்தைத் தள்ளிப் போடக் கூடாது.

3. நாத்யந்தசரலைர்பாவ்யம் |

ஒருவன் மிகவும் எளிமையாக இருக்கக் கூடாது.

4. நாஸ்தி க்ராம: குத: சீமா|

கிராமமே இல்லை, அப்படியானால் எல்லை எங்கே உள்ளது?

5. நிகடஸ்தம் கரீயாம்ஸமபி லோகோ ந மன்யதே |

ஒருவன் மிகப் பெரியவனாக இருந்தாலும் அண்டை அயலார் அவனை அப்படி மதிப்பதில்லை.

6. நிர்தனஸ்ய குத: சுகம் |

பணமில்லாத ஏழைக்கு ஏது சுகம்?

7. நீசோ வததி ந குருதே ந வததி சுஜன: கரோத்யேவ }

நீசர்கள் சொல்வார்கள், செய்வதில்லை. நல்லோர் சொல்வதில்லை, ஆனால் செய்வார்கள்.

8. ந்யாய்யாம் வ்ருத்திம் சமாஸ்ரயேத் |

நியாயமான (சரியான) தொழிலை ஒருவன் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

9.நைகோ ரிபுமண்டலம் ப்ரவிஷேத் |

எதிரி மண்டலத்தில் ஒருவன் பிரவேசிக்கக் கூடாது.

10. நோபஹஸேந்நிர்ஜதம் த்யூதே |

சூதாட்டத்தில் தோற்ற ஒருவனைப் பார்த்து ஒருவன் சிரிக்கக் கூடாது.

11. பரோபகாரார்தம் இதம் சரீரம் |

மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காகவே இந்த சரீரம் உள்ளது.

12. புண்யம் தஸ்ய ந ஷக்யதே கணயிதும் ய: பூர்ணகாருண்யவான் |

ஒரு புண்யவானின் புண்யத்தை ஒருவராலும் அளக்க முடியாது.

13. ப்ராணாயாம: பரம் பலம்!

ப்ராணாயாமம் செய்வது பலத்தைத் தரும்.

14. ப்ராயோ கச்சதி யத்ர பாக்யரஹிதஸ்தத்ரைவ யாந்த்யாபத: |

ஒரு துரதிர்ஷ்டசாலி செல்லும் போது அவனைத் தொடர்ந்து கூடவே ஆபத்துக்களும் தொடர்ந்து வரும்.

15. பஹுரத்னா வசுந்தரா |

பூமி ஏராளமான ரத்னங்களைக் கொண்டுள்ளது.

16. பர்த்ருமார்கானுசரணம் ஸ்த்ரீணாம் ச பரமம் வ்ரதம்|

கணவனின் வழியைப் பின் தொடர்ந்து செல்வதே ஸ்திரீகளுக்கான உத்தம விரதமாகும்.

17.பவேந்நித்யம் ப்ரியம்வத: |

பிரியமான வார்த்தைகளையே ஒருவன் பேச வேண்டும்.

18. மத்யே திஷ்டத்ரிசங்குவத|

திரிசங்குவைப் போல நடுவில் இரு.

19. மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ: |

மனிதனின் பற்றுக்கும் முக்திக்கும் மனமே காரணம்.

20. மூர்கஸ்ய நாஸ்த்யௌஷதம் |

மூர்க்கனுக்கு ஒரு வைத்தியமும் இல்லை.

21. மௌனம் சம்மதிலக்ஷணம் |

மௌனம் சம்மதத்திற்கான அறிகுறி.

22. யத்ர சௌரா ந வித்யந்தே தத்ர கிம் நிரீக்ஷகைக

எங்கே திருடர்கள் இல்லையோ அங்கே போலீஸுக்கு என்ன வேலை?

23. யதி ஹ்ருதயமசுத்தம் தஹி சர்வம் விருத்தம்

எங்கு இதயமானது அசுத்தமாக இருக்கிறதோ அங்கே எல்லாமே அசுத்தமாகத் தோன்றும்.

24. யத்யபி சுத்தம் லோகவிருத்தம் நாசரணீயம் |

சுத்தமாக இருந்தாலும் கூட லோகத்திற்கு எதிராக ஒன்றும் செய்யக் கூடாது.

25. ராமோ த்விர்நாபிபாஷதே |

ராமன் எதையும் இரண்டாம் முறை சொல்ல மாட்டார்.

***

Leave a comment

Leave a comment