QUIZ யானைப் பத்து QUIZ (Post No.12,862)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,862

Date uploaded in London – –   29 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Quiz Serial No.91

1.முருகனின் யானையின் பெயர் என்ன ?

xxxx

2.இந்திரனின் யானையின் பெயர் என்னஅதன் நிறம் என்னஅதற்கு எத்தனை தந்தங்கள்?

xxxx

3.மஹாபாரத யுத்தத்தின் போக்கை மாற்றிய யானை எது?

xxxx

4.கிருஷ்ணன் அடக்கிய யானையின் பெயர் என்ன அதை ஏவியவன் யார்?

xxxx

5.பல சம்ஸ்க்ருத நூல்களின் கதாநாயகன் ஆன உதயண மன்னன்  அடக்கிய யானையின் பெயர் என்னபுத்தர் அடக்கிய யானையின் பெயர் என்ன?

xxxx

6.சந்திரலேகா என்ற யானையின் பெயர் எங்கே வருகிறது?

xxxx

7.எந்த யானைக்கு குருவாயூரில் சில உள்ளது ?ஏன்?

xxxx

8.யானைகளை மலை உச்சியிலிருந்து உருட்டிவிட்டு அவை இறப்பதை பார்த்து ரசித்த ஹுன மன்னன் யார் ?

xxxx

9.யானை மீது ஏறி கயிலை மலைக்குச் சென்றவர் யார்?

xxxx

10.ரிக்வேதத்தில் யானைக்கு என்ன பெயர் சொல்லப்பட்டுள்ளது?

xxxx

விடைகள்

1.முருகனின் யானையின் பெயர் பிணிமுகம்

xxxx

2.இந்திரனின் யானையின் பெயர் ஐராவதம்; அது வெள்ளை யானை; அதற்கு 4 கொம்புகள்.

xxxx

3.மஹாபாரத கால யானையின் பெயர் என்ன அஸ்வத்தாமா. அஸ்வததாமா அதோஹத: — என்று தர்மன் (பொய்) சொன்னது போரின் போக்கையே மாற்றிவிட்டது. துரோணர் இறக்க நேரிட்டது ; ஏனெனில் அவருடைய மகன் பெயரும் அஸ்வத்தாமா

 xxxx

4.குவலயாபீடம்.; அதை கம்சன் ஏவினான் ; கிருஷ்ணர் அதன் கொம்பை உடைத்து அதைக்கொன்றார் .

xxxx

5.உதயணன் அடக்கிய யானையின் பெயர் நளகிரி.

புத்தர் அடக்கிய யானையின் பெயர் தனபால.

xxxx

6.சம்ஸ்க்ருத நாடகம் ஒன்றில்  யானையின் பெயர் சந்திரலேகா.

xxxx

7.நமது காலத்தில் உயிர்நீத்த குருவாயூர் யானையின் பெயர் கேசவன்.

அதுதான் உயரமான, கம்பீரமான யானை; பல்லாண்டுகளுக்கு கிருஷ்ணன் விக்கிரகத்தைச் சுமக்கும் பாக்கியம் பெற்றது

xxxx

8.மிஹிரகுலன் (Huna King)

Xxxx

9.நால்வரில் ஒருவரான சுந்தரர் வெள்ளையானை மீது அமர்ந்து கைலாயம் சென்றார் ; அவரைப் பார்த்த சேர மான் பெருமாள் நாயனார், குதிரை மீது அமர்ந்து அவருடன் கயிலை சென்றார்.

xxx

10.வேதத்தில் யானைக்கு இபம் என்று பெயர்; அதிலிருந்து ஆங்கிலச் சொல் எலிபண்ட் ELEPHANT வந்தது. அருணகிரிநாதர் கூட முருகனை இபமா முகன் தனக்கிளையோனே என்று திருப்புகழ் பாடுகிறார்.

xxxx subham xxxx

tags- QUIZ யானைப் பத்து QUIZ ,

Leave a comment

Leave a comment