அநேக சாஸ்த்ரம் பஹு வேதிதவ்யம்! (Post No.12,868)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,868

Date uploaded in London –  –  31  December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

அநேக சாஸ்த்ரம் பஹு வேதிதவ்யம்!

ச.நாகராஜன்

உலகில் வாழ்வாங்கு வாழ ஹிந்து மதத்தில் உள்ள சாஸ்திரங்கள் பல.

இவற்றைக் கற்றுத் தேர்வது ஒரு ஜன்மத்தில் இயலாத காரியம்.

ஆகவே தான் இதில் சித்தி பெற்ற மஹாபுருஷர்களை அணுகி ஆசி பெற்று அவற்றைக் கற்கிறோம்.

மந்திர சாஸ்திரம், யந்திர சாஸ்திரம், தந்திர சாஸ்திரம் என  அபூர்வமான சாஸ்திரங்கள் பல உண்டு.

அனந்தஸ்ச சாஸ்திரம் பஹு வேதிதவ்யம்

அல்பஸ்ச காலோ, பஹுவஸ்ச விக்ன:

யத் சாரபூதம் தத் தத் உபாசிதவ்யம்

ஹம்ஸோ யதா க்ஷேத்ரம் இவ அமுமா மிஸ்ரம்

என்ற ஸ்லோகம் ஒரு அபூர்வமான விஷயத்தைக் கூறுகிறது.

(Ananthacha Sastram bhahu vedithavyam
Alpascha kalo bhahavascha vignah
Yat sarabhutam tad upasitavyam
Hamso yada kheseram iva amuma misram)

உலகில் ஏராளமான சாஸ்திரங்கள் கற்பதற்கு உள்ளன.அவற்றைக் கற்பதற்கான நமது காலமோ மிகவும் குறைவு. அதில் வரும் இடைஞ்சல்களும் ஏராளம். ஆகவே நாம் சாஸ்திரங்களின் சாரத்தைக் கற்க வேண்டும். காலம் மிக மிகக் குறைவாக இருப்பதால் ஹம்ஸப் பறவையானது எப்படி பாலுடன் கலந்த நீரில் பாலை மட்டும் பிரித்தெடுக்கிறதோ அது போல சாரத்தை எடுக்க வேண்டும்.

குருவின் அருள் முக்கியம். சிரத்தை முக்கியம். மன ஈடுபாடு முக்கியம். உச்சரிப்பு முக்கியம். நமக்குரிய நேரத்தை இதில் ஒதுக்குவது முக்கியம்.

ராமாயணத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் உச்சரிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய அருமையான விளக்கத்தைத் தருகிறது.

ஆம், கும்பகர்ணன் தான் அவன்!

நித்யத்வத்தை வேண்டி சிவனை நோக்கி அவன் தவம் இயற்றத் தொடங்கினான். அவன் வரம் வேண்டும் போது நித்ரைத்வத்தைக் கேட்டான். சிவனும் அருளினார் அப்படியே.

என்றும் வாழும் வரம் (நித்யத்வம்) கேட்க நினைத்த அவன் என்றும் தூங்கும் வரத்தை (நித்ரைத்வம்) கேட்டான்.

யஜுர் வேதத்தில் உள்ள ஒரு சரித்திரம் இது.

ஒரு சமயம் தேவேந்திரனை வெல்லக் கருதி விருத்ராஸுரன் என்ற அசுரன் தவம் செய்தான். இறைவனின் தரிசனத்தைப் பெற்றான்.

அவன் இந்திரசத்ருர்வர்தஸ்ச என்று கேட்பதற்குப் பதிலாக ஸ்வரபேதத்தால் இந்திரனால் கொல்லப்படும் வரத்தைப் பெற்றான்.

இந்திரனால் வதம் செய்யப்பட்டான்.

ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு தேவதை உண்டு. ஒரு பலன் உண்டு.

நியூமராலஜி எனப்படும் எண்கணித சாஸ்திரம் இதன் அடிப்படையில் உருவான ஒன்றே தான்.

ஸித்த சாபரதந்திரம் என்ற நூல் ஒவ்வொரு எழுத்திற்குமான தேவதை, பலன் ஆகியவற்றை விளக்குகிறது.

சேஷ ஸம்மிதா என்ற நூல் எழுத்துக்கள் பற்றிய விரிவான விளக்கத்தைத் தருகிறது.

பாத்ம ஸம்மிதா என்ற நூலிலும் அற்புதமான விளக்கங்களைக் காணலாம்.

உதாரணத்திற்காக ஒரு எழுத்து பற்றிய விளக்கத்தை இங்கு பார்க்கலாம்:

அ : அ என்ற அகார தேவிக்கு உள்ள வர்ணம் சிவப்பு. சிவந்த வர்ணத்துடன் வெள்ளாட்டின் முகமும் வெண்மை வஸ்திரமும் தரித்து  ஹம்ஸ வாகனமேறி வலது கையில் வில், இடது கையில் பாணம், அபயம், பாணம் ஆகியவற்றோடு விளங்குகிறாள். இந்த தேவிக்கு நான்கு கரங்கள் உண்டு.

இந்த அக்ஷரத்திற்கு விஷ்ணு மூர்த்தி. தாமரை தாது.

இதைப் பற்றி சேஷ ஸம்மிதா கூறுவது:

பத்மகிஞ்ஜல்கம் நிறம். பீதாம்பரதாரீ. எல்லா ஆபரணங்களுடன் கதா, பங்கஜம், (கதை உள்ளிட்டவை) சங்கம் கத்தி என நான்கு கரங்களில் ஆயுதங்கள் உள்ளன.

பலன்: இந்த அக்ஷரம் ஆதியானது என்பதால் எல்லா வித விக்னங்களும் நீங்கி சக்தியை விருத்தி செய்ய வைக்கும்.

மந்திரங்களில் உள்ள ஒவ்வொரு அக்ஷரத்தையும் இந்த சாஸ்திரங்களின் மூலம் ஆராய்ந்தால் நாம் வியப்படைவோம்.

அதில் நியூமராலஜி உள்ளிட்ட அனைத்துக் கலைகளையும் காண்போம்.

***

Leave a comment

Leave a comment