
Thriprangodu Temple
Date uploaded in London – – 31 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 43
கோவில் எண்கள் –55. 56, 57, 58
மலப்புரம் வட்டாரத்திலுள்ள காடம்புழா பகவதி, திருநாவாய் விஷ்ணு கோவில்களை முந்தைய பகுதிகளில் கண்டோம். மலப்புரம் வட்டாரத்தில்தான் புகழ்பெற்ற கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலை உள்ளது .
55. கோட்டக்கல் விச்வாம்பர / தன்வந்திரி கோவில்
அருகிலுள்ள ரயில் நிலையம்- திரூர் : Tirur,சுமார் 16 கிமீ;
கோழிக்கோடு விமான நிலையத்திலிருந்து சுமார் 35 கி.மீ;
கண்ணூரிலிருந்து 140 கி.மீ.
கோட்டக்கல் என்ற ஊர்ப்பெயரைச் சொன்னவுடன் உலகப் புகழ்பெற்ற ஆர்ய வைத்ய சாலாதான் நினைவுக்கு வரும். தற்பொழுது அவர்கள் உலகம் முழுதும் கிளைகளைத் திறந்துவிட்டனர்; நாட்டின் மிகப்பெரிய தலைவர்கள் வந்து சிகிச்சை பெற்ற சிற்ப்புடைத்து.
1920ம் ஆண்டு பி.எஸ். வாரியரால் துவக்கப்பட்ட இந்த ஆயுர்வேத மருத்துவ சாலை ஆயுர்வேதம் கைகண்ட மருந்து என்பதை உலகிற்குக் காட்டிவருகிறது. அவர்களுடைய சிகிச்சை முறையும், உடலில் தடவும் தைலங்களும் தனித்துவம் பெற்றவை.
ஆயுவேதத்தின் , உலக மருத்துவத்தின் தந்தை தன்வந்திரி; அவர் மஹாவிஷ்ணுவின் அவதாரம் ; கைகளில் நோய் தீர்க்கும் அமிர்த கலசத்துடன் தோன்றியவர் . கோட்டக்கல்லில் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகில் விஸ்வாம்பர கோவில் அமைந்துள்ளது; இங்கு விஷ்ணுவை தன்வந்திரி ரூபத்தில் வழிபடுகின்றனர்.
விக்கிரகம் சலவைக் கற்களால் ஆனது. ஆண்டு உற்சவம் ஏப்ரல் மாதத்தில் 7 நாட்களுக்கு நடைபெறும்.
சாக்கியர் கூத்து, ஓட்டந்துள்ளல் ஆகிய நாட்டிய நாடகங்களையும் பஞ்சவாத்ய முழக்கத்தையும் உற்சவ காலத்தில் கண்டு களிக்கலாம்.இரவு முழுதும் கதகளி நடனம் நடக்கும்.பிரபல சங்கீத வித்துவான்களின் கச்சே ரிகளும் ரசிகர்களையும் பக்தர்களையும் கவர்ந்து இழுக்கும்.
ஆர்ய வைத்திய சாலையை நிறுவிய பி.எஸ். வாரியார் 1932ம் ஆண்டில் கோவிலை எழுப்பினார். ஓராண்டுக் காலத்துக்கு தானே பூஜை செய்த, ஆக்ரா சலவைகல்லினால் ஆன, தன்வந்திரியை கர்ப்பகிரகத்தில் பிரதிஷ்டை செய்தார். தினசரி பூஜைகள் உண்டு
நான்கு கைகள் கொண்ட தன்வந்திரி சங்கு, சக்கரம், கதை, தாமரை மலர்களை ஏந்தி அருள்பாலிக்கிறார்.
ஜாதி மத வேறுபாடின்றி அனைவரும் கோவிலுக்குள் வரலாம்..
Contact details of Kottakkal Arya Vaidya Sala
Arya Vaidya Sala,
Kottakkal (P.O.),
Malappuram,
Kerala – 676 503.
Ph.: +91 483 2742216, 2808000
Xxxxx
56.பொன்னானி பகவதி கோவில்
ஸ்ரீ மூக்குத்தல பகவதி கோவிலை ஆதி சங்கரரே பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம் (நம்பிக்கை வரலாறு).
முக்தி தல பகவதி என்பது சரியான பெயர்; இங்கு வனதுர்க்கை, பகவதியாக வழிபடப்படுகிறாள் . பொன்னணி- த்ரிசூர் பாதையில் சங்கரகுளம் என்னும் இடத்தில் கோவில் இருக்கிறது
சிறப்பு அம்சம்
நாராயணீயம் என்னும் புகழ்பெற்ற சம்ஸ்க்ருத நூலை இயற்றிய நாராயண பட்டத்ரிபாடு , இங்கு தியானம் செய்து முக்தி அடைந்தார். இதனால் முக்தி ஸ்தலம் என்ற அடைமொழி சேர்க்கப்பட்டது..
நவராத்திரி பண்டிகையின்போது 9 நாட்களும் கோவில் விழாக்கோலம் பூணும்; நிறைய கலை நிகழ்ச்சிகளும் நடக்கும் .
xxxx


57.த்ரிபரங்கோடு சிவன் கோவில் Sree Triprangode Shiva Kshetram
இந்தக் கோவில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தையது. திரூர் நகரிலிருந்து 12 கி.மீ. தொலைவு.
சிவராத்திரி பண்டிகைக் காலத்தில் 2 நாள் உற்சவம் நடக்கும். இரண்டு நாட்களும் யானைகள் பவனி உண்டு.
உத்தண்ட சாஸ்திரி எழுதிய குயில் வீடு தூது/ கோகில சந்தேச என்னும் சம்ஸ்க்ருத நூலில் குறிப்பிடப்படும் சிறப்பு வாய்ந்தது; பத்தாம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த ரவிவர்மாவின் கல்வெட்டுகள் கோவிலில் உள்ளன.
14ஆம் நூற்றாண்டில் திருநாவாய் யுத்தம் நடந்தபொழுது ஜாமோரின்/ இந்து மன்னர்கள் படைகள் இங்கே தங்கின .
ஆறு ஏக்கர் பரப்பில் அமைந்த பழமையான கோவிலில் பெரிய ஆலமரம், இலஞ்சி மரம், வில்வ மரங்களும் உள்ளன. 16 வயதில் எமனிடமிருந்து காப்பாற்றப்பட்ட மார்க்கண்டேய புராணத்துடன் கோவில் தொடர்புபடுத்தப்படுகிறது 5 குளங்கள், 3 ஸ்ரீ கோவில்கள் (கருவறைகள்) இருப்பது கூடுதல் சிறப்புகள் ஆகும்
கஜ ப்ருஷ்ட (யானையின் பின்பகுதி) வடிவில் முக்கிய சந்நிதி சிவன்-பார்வதியுடன் உள்ளது .
கோவில் வளாகத்தில் விஷ்ணு, ஐயப்பன் , நாகர், கிருஷ்ணர், பிரம்மராக்ஷஸ் , பத்ரகாளி, வேட்டக்கொரு மகன் சந்நிதிகளும் இருக்கின்றன .
xxxxx


58.கலிக்காவு பகவதி கோவில், மேலகம் 117 நாள் விழா
மஞ்சேரி மேலகம் பகுதியில் ஸ்ரீ கலிக்காவு பகவதி கோவில் இருக்கிறது.
கேரள கோவில் வரலாற்றில் மிக நீண்ட நாட்களுக்கு விழா நடக்கும் சிறப்புடைத்து.
117 நாட்களுக்கு களமெழுத்து விழா நடக்கும். அதாவது பெரிய உருவத்தை பாட்டுப் பாடிக்கொண்டே வரைவார்கள் . தாளப் பொலி விழாவுடன் நிறைவுபெறும். மறு நாளைக்கே அடுத்த 117 நாள் விழா துவங்கிவிடும்; அதாவது வருடம் முழுதும் இடைவிடாத விழா.
இதை வேறு எங்கும் காண முடியாது; மேலும் சித்திரம் தீட்டும் கலையயும் நாட்டுப்புறப் பாடல் கலையையும் ஆண்டு முழுதும் போற்றிப் பாதுகாக்கிறது !
–subham–
Tags- களமெழுத்து விழா, 117 நாள் விழா, த்ரிபரங்கோடு , சிவன் கோவில், கோட்டக்கல் , விச்வாம்பர , தன்வந்திரி கோவில், ஆர்ய வைத்ய சாலை,
Kottakkal Arya Vaidyasala,