லங்கணம் பரமௌஷதம்! (Post No.12,876)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,876

Date uploaded in London –  –  –   2  JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

லங்கணம் பரமௌஷதம்!

ச. நாகராஜன்

லக்ஷ்மிவந்தோ ந ஜானந்தி ப்ராயேண பரவேதனாம் |

தனவந்தர்கள் மற்றவர்கள் படும் வேதனையைப் பொதுவாக புரிந்து கொள்வதில்லை.

லக்ஷ்யதே ந கதி: சம்யக் தனஸ்ய ச தனஸ்ய ச |

செல்வத்தின் போக்கையும் மேகத்தின் போக்கையும் ஒருவரால் பார்க்க முடிவதில்லை.

லங்கணம் பரமௌஷதம் |

உபவாசம் சிறந்த மருந்து.

லோபஸ்சேதகுணேன கிம் |

பேராசையை விட மோசமான கெட்டகுணம் வேறில்லை.

லொபாவிஷ்டோ நரோ ஹந்தி ஸ்வாமினம் வா சஹோதரம் |

பேராசையின் தூண்டுதலினால் ஒருவன் தனது எஜமானனையும் தனது சகோதரனையும் கூடக் கொல்வான்.

வசனே கா தரித்ரதா |

வார்த்தைகளில் எதற்கு தரித்திரம்?

வனே புஷ்பபலாகீர்ணே புரிஷமிவ ஷூக்ர: |

மலர்களும் பழங்களும் நிறைந்துள்ள வனத்தில் பன்றியானது மலத்தையே தேடுகிறது.

வரம் வேஷ்யா பத்னீ ந புனரவிநீதா குலவது: |

அடாவடியான மனைவியை விட ஒரு வேசியே சிறந்தவள்.

வர்த்தமானேன காலேன வர்த்தயந்தி விசக்ஷணா: |

புத்திசாலிகள் காலத்தையொட்டி தற்காலத்தில் இருப்பவர்களுடனேயே செல்கின்றனர்.

வித்யா ரூபம் குரூபாணாம் |

அழகற்ற குரூபிகளுக்கு கல்வியே சிறந்த கவர்ச்சி.

வித்வான்குலீனோ ந கரோதி கர்வம் |

வித்தையில் சிறந்த வித்வான்கள் கர்வம் கொள்ள மாட்டார்கள்.

விநாசகாலே விபரீதபுத்தி: |

அழியப்போகும் காலத்தில் விபரீத புத்தி தோன்றும்.

விநாஷ்ரயா ந ஷோபந்தே பண்டிதா வனிதா லதா: |

தக்க ஆதரவின்றி பண்டிதர்களும், பெண்களும், கொடிகளும் சோபிப்பதில்லை.

விரக்தஸ்ய த்ருணம் ஜகத் |
விரக்தி அடைந்தவனுக்கு உலகம் புல்லுக்குச் சமானம்.

விஸ்வாஸ்ய வஞ்சயந்தே தூர்தரஸ்சத்வாபிரீஸ்வரா: |

எஜமானனின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர் ரௌடிகள் அவர்களுக்குத் துரோகம் இழைக்கிறார்கள்.

வீரபோக்யா வசுந்தரா |

இந்த உலகம் வீரர்களாலேயே அனுபவிக்கப்படுகிறது.

வ்ருத்திம் சோபத்ரவாம் த்யஜேத் |

தொந்தரவு தரும் தொழிலை ஒருவன் விலக்க வேண்டும்.

வ்யவஹாரேண மித்ராணி ஜாயந்தே ரிபவஸ்ததா |

ஒருவரது நடத்தையினாலேயே நண்பர்களும் எதிரிகளும் உருவாக்கப்படுகிறார்கள்.

வ்யாபாரே வஸதே லக்ஷ்மி: |

வியாபாரத்தின் விளைவே செல்வம்.

சரணமுபேதோ ந ஹாதவ்ய: |

சரணமடைந்தவர்களை நிராகரிக்கக் கூடாது.

சரீரமாத்ரம் கலு தர்மசாதனம் |

உடலே நல்ல தர்மம் செய்வதற்கான முதல் தேவையாகும்.

சீலம் பூஷயதே குலம் |

நல்லொழுக்கம் குலத்தை அலங்கரிக்கிறது.

சுக: ஸ்லோகான் வக்தும் பரவதி ந காக: க்வசிதபி |

கிளியானது ஒரு ஸ்லோகத்தைச் சொல்லும்; ஆனால் காகமோ அதை ஒருபோதும் செய்ய முடியாது.

சுபஸ்ய சீக்ரமசுபஸ்ய காலஹரணம் |

சுபகாரியங்களை உடனே செய்ய வேண்டும். அசுபமானவற்றைக் காலம் தாழ்த்தவேண்டும்.

ஸ்ரேயசி கேன த்ருப்யதே |

ஏற்கனவே அடைந்த புகழில் யார் தான் திருப்தி அடைகிறார்கள்!

***

Leave a comment

Leave a comment