
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,889
Date uploaded in London – – – 6 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கே செரா செரா – Whatever will be, will be!
ச.நாகராஜன்
ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் ‘The Man Who Knows Too Much” என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் உலகப் புகழ் பெற்றது. அன்றிலிருந்து இன்று வரை அதன் புகழ் மங்கவில்லை.
பாடலை எழுதியவர்கள் ரேமாண்ட் பி.ஈவான்ஸ் மற்றும் ஜே லிவிங்ஸ்டன் (Raymond B. Evans, Jay Livingston) ஆகிய இரு பாடலாசிரியர்கள்.
பாடல் இதோ:
When I was just a little girl
I asked my mother
What will I be?
Will I be pretty?
Will I be rich?
Here’s what she said to me
“Que sera, sera
Whatever will be, will be
The future’s not ours to see
Que sera, sera
What will be, will be”
When I grew up and fell in love
I asked my sweetheart
What lies ahead?
Will we have rainbows
Day after day?
Here’s what my sweetheart said
“Que sera, sera
Whatever will be, will be
The future’s not ours to see
Que sera, sera
What will be, will be”
Que sera, sera
திரைப்படத்தில் கடத்திச் செல்லப்பட்ட மகனைக் கண்டுபிடிக்க இந்தப் பாடல் உதவுகிறது. அம்மா இந்தப் பாடலைப் பாடக் கேட்டு பழக்கப்பட்ட பையன் அம்மா இதை மீண்டும் பாடும் போது, தான் இருக்குமிடத்தைச் சூசகமாகத் தெரிவிக்கிறான். அவன் காப்பாற்றப் படுகிறான்.
ஆனால் பாடலில் வரும் ‘கே செரா செரா’ என்பது பொருள் பொதிந்தது. என்ன நடக்குமோ அது நடக்கும் என்பதே இதன் பொருள். இது இத்தாலிய மொழியிலும் ஸ்பானிஷ் மொழியிலும் சிறு வேறுபாடுடன் பழங்காலந்தொட்டு இருந்து வந்திருக்கிறது.
ஒரு சிறு பெண் அம்மாவிடம் நான் அழகாக இருப்பேனோ, பணக்காரியாக இருப்பேனா என்று கேட்கிறாள். அம்மா சொல்கிறாள். எதிர்காலம் நம்மால் பார்க்கப்பட முடியாதது, நடக்க வேண்டியது நடக்கும் என்று.
வளர்ந்த பின்னர் காதல் வயப்பட்ட பின்னர் தனது ஸ்வீட்ஹார்ட்டிடம்
அந்தப் பெண் கேட்கிறாள் : என்ன நடக்கப் போகிறது; எல்லாம் இன்பமயம் தானா என்று. அதற்கு ஸ்வீட்ஹார்ட்டின் பதில்: கே செரா கே செரா!
இந்தப் பாடல் முதலில் 1955இல் பிரசுரிக்கப்பட்ட பாடல். இதை அமெரிக்காவின் சிறந்த நடிகையும் பாடகியுமான டோரிஸ் டே (Doris Day பிறப்பு 3-4-1922 மறைவு 13-5-2019) 1956இல் ஹிட்ச்காக்கின் ‘The Man Who Knows Too Much’ படத்தில் பாடினார்.
உடனே பாடல் உலகப் புகழ் பெற்று விட்டது. 1956 அகாடமி விருதையும் பெற்றது. தொடர்ந்து இன்று வரை உலகெங்கும் பல டி.வி. தொடர்களிலும் திரைப்படங்களிலும் கே செரா செரா இடம் பெற்றுக் கொண்டே இருக்கிறது.
டோரிஸ் டே இந்தப் பாடலைத் தனது அடையாளப் பாடலாகவே கொண்டு விட்டார்.
இந்த மெட்டு 1957இல் வெளியான தமிழ் திரைப்படமான ஆரவல்லியில் அப்படியே எடுத்தாளப்பட்டது.
பாடல் இது தான்:
பெண் : சின்னப் பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒரு நாளிலே
எண்ணம்போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா நீ சொல் என்றேன்
சின்னப் பெண்ணான போதிலே
அன்னையிடம் நான் ஒரு நாளிலே
எண்ணம்போல் வாழ்வு ஈடேறுமா
அம்மா நீ சொல் என்றேன்
வெண்ணிலா நிலா என் கண்ணல்லவா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே இன்பம்தான் என்றாள்
வெண்ணிலா நிலா
கன்னி என் ஆசைக்காதலே கண்டேன் மணாளன் மீதிலே
என் ஆசைக்காதல்
இன்பம் உண்டோ தோழி நீ சொல் என்றேன்
வெண்ணிலா நிலா என் கண்ணல்லவா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே இன்பம்தான் என்றாள்
கண்ஜாடை பேசும் வெண்ணிலா கண்ணாளன் எங்கே சொல் நிலா
என் கண்கள் தேடும் உண்மை தானே சொல் நிலவே என்றேன்.
ஆண் :வெண்ணிலா நிலா என் கண்ணல்லவா கலா
உன் எண்ணம் போல் வாழ்விலே இன்பம் காணலாம்.
வெண்ணிலா நிலா
பாடல் சொல்லும் கே செரா கே செரா காலம் காலமாக ஹிந்து மதம் கூறி வரும் தத்துவம். ‘நடப்பது தான் நடக்கும்’. Whatever will be, will be!
இந்தத் தத்துவம் உலகப் புகழ் பெற்ற பாடலாக மாறி இன்று வரை எங்கும் ஒலிக்கிறது.
கேட்டுப் பாருங்களேன். (எப்போதும் யூ டியூபில் கேட்கலாம்)
***