Date uploaded in London – – 17 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
Quiz serial No.94
1.கிருஷ்ணர் பிறந்த மதுரா எங்கே இருக்கிறது ?
2.கிருஷ்ணர் கோபியருடன் விளையாடிய யமுனை நதிக்கு 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியத்தில் என்ன பெயரைப் புலவர்கள் பயன்படுத்தினர்?
XXXX
3.கிருஷ்ணர் பிறந்த இடத்திலுள்ள கோவிலை பல முஸ்லீம் மன்னர்கள் தாக்கினர். அதை அழித்து அதன் மீது மசூதி கட்டிய மஹா பாவி யார் ?
XXXX
4.தற்போது உள்ள கிருஷ்ணர் கோவிலை எழுப்பியவர்கள் யார் ?
XXXX
5.மதுரா கிருஷ்ணன் கோவிலில் எத்தனை முக்கிய கருவறைகள் உள்ளன ?
XXXX
6.கிருஷ்ணரின் முதல் குளியல் நடந்த ,மதுரா கோவிலில் உள்ள, குளத்தின் பெயர் என்ன ?
XXXX
7.பிருந்தா வனம் எங்கே இருக்கிறது ?
XXXX
8.பிருந்தாவனத்தைச் சுற்றியுள்ள இடத்தை மேய்ச்சல் (வ்ரஜ) பூமி என்ற சிறப்புப் பெயரால் அழைப்பது ஏன் ?
XXXX
9. பிருந்தாவனத்தில் எத்தனை கோவில்கள் இருக்கின்றன ?
XXXX
10.பிருந்தாவனத்தில் ஒரு ஆல மரத்தையும் ஒரு புளிய மரத்தையும் புனிதமாக கருதுவது ஏன் ?
XXXX

விடைகள்
1.உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கிறது . ராமர் பிறந்த அயோத்தியும் இதே மாநிலத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது .
XXXX
2. தொழுனை நதி
XXXX
3.மதவெறி பிடித்த மொகலாய மன்னன் அவுரங்க சீப் Aurangzeb in 1670 ஆம் ஆண்டில் அதன் மீது மசூதியைக் கட்டினான். அது இன்றும் இருக்கிறது .
XXXX
4.பல தொழிலதிபர்கள் 13 ஏக்கர் நிலத்தை வாங்கி 1953 ல் கோவில் கட்டுமானத்தைத் துவக்கி 1982 ஆம் ஆண்டில் முடித்தனர்
XXXX
5. இந்த கோவில் வளாகத்துக்குள் மூன்று கோவில் அல்லது காருவறைகள் உள்ளன . கேசவ தேவ் கோவில், கிருஷ்ணர் பிறந்த இடமான கர்ப்பக்கிரகம் , ராதா கிருஷ்ணர் உறையும் பாகவத பவன் ஆகிய மூன்று பிரிவுகள் அவை .
XXXX
6. பவித்ரா குண்டம் என்பது குளத்தின் பெயர்
XXXX
7. கிருஷ்ணனும் ராதா தலைமையில் இருந்த கோபியர்களும் விளையாடிய பிருந்தா வனம் (துளசித் தோட்டம் ) மதுரா மாவட்டத்தில் இருக்கிறது . டில்லியிலுருந்து 129 கி.மீ , மதுராவிலிருந்து 20 கி.மீ தொலைவில் இருக்கிறது . பிருந்தா என்றால் துளசி என்று பொருள்.
XXXX
8. விரஜ மண்டலம் – விரஜ பூமி – என்று அழைக்கப்படும் நிலப் பகுதிதான் பகவான் கிருஷ்ணன் அற்புத லீலைகள் புரிந்த புண்ணிய பூமி. விரஜ மண்டலம் நந்தகோபருடைய ஒன்பது லட்சம் பசுக்கள் மேய்ந்த பூமி. நந்தக் கிராமத்திலிருந்து பிருந்தாவனத்திலுள்ள `வம்சீ வடம்’ என்ற இடம் வரை கிருஷ்ணன் அந்தப் பசுக்களை மேய்த்து வந்ததனால் இதற்கு விரஜ மண்டலம் அதாவது மேய்ச்சல் பூமி என்ற பெயர் ஏற்பட்டது .
xxxx
9. விருந்தாவனத்தில் 5500 கோவில்கள் இருக்கின்றன
XXXX
10. கமலீ தலா புகழ்பெற்ற இடம். இங்கே பழைய புளியமரம் ஒன்று இருக்கிறது. மகாப்பிரபு சைதன்யர் இங்கேதான் அமர்ந்து ஹரிநாம பஜனையில் ஈடுபட்டார் .புளியமரத்தைச் சுற்றி அழகான சலவைக் கல் மேடை அமைத்திருக்கிறார்கள். இந்த இடத்தைத் தவிர பிருந்தாவனத்தில் வேறு எங்கும் புளியமரம் இல்லை.
கிருஷ்ணன் தன் புல்லாங்குழல் இசையால் கோபியரைக் கவர்ந்த இடம் வம்சீ வட். வம்சீ என்றால் புல்லாங்குழல், வட என்றால் ஆலமரம்.இங்கு இருக்கும் மூலவரின் திருநாமம் வம்சீவட விஹாரி.
XXXX

Bonus Questions
11. காலீய தஹ் எற இடத்தின் சிறப்பு என்ன ?
XXXX
11.பிருந்தாவனத்தின் கிழக்குப் பக்கம் தென்வடலாக யமுனை ஒடுகிறது. யமுனைத் துறைகளில் முக்கியமானது காலீய தஹ் எனப்படும் துறையாகும். அங்கு தான் கிருஷ்ணன் காளியன் என்ற பாம்பின் மீது நடனம் ஆடி அதன் கொட்டத்தை அடக்கினான்
XXXX
12.பிருந்தாவனத்தை விதவைகள் நகரம் என்று அழைப்பது ஏன் ?
XXXX
12.விதவைகள் நகரம் “city of widows” என்ற சிறப்பு அடைமொழியை மக்கள் சூட்டியுள்ளனர். ஏனென்றால் கணவனை இழ ந்த நிறைய பெண்மணிகள் அங்கு குடியேறி வசிப்பதை புனிதமாக கருதுகின்றனர். அவர்களுக்குதவி செய்ய தனி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன . 15,000 முதல் 20,000 விதவைகள் வரை வசிக்கின்றனர்.
XXXX
13. நிதுவனம் என்ற இடத்தை இசை மேதைகள் நாடுவது ஏன் ?
XXXX
13. இங்கு ராதா, அரச உடையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். கண்ணனே காவலாள் வேடத்தில் நுழைவாயிலில் காட்சியளிக்கிறான். பகல் முழுவதும் , ராதையும் கிருஷ்ணனும் பல விளையாட்டுக்களில் ஈடுபட்ட இடம் இது. இங்கே சங்கீத சாதனையில் ஈடுபட்டிருந்த ஹரிதாஸ் சுவாமிகளுக்கு, குளத்திலிருந்து கிருஷ்ண விக்கிரகம் கிடைத்தது. அக்பரின் ஆஸ்தான வித்வானாகிய தான்சேனுக்குக் குரு ஹரிதாஸ் சுவாமிகள் .
–subham—
Tags: QUIZ மதுரா பத்து, QUIZ, தொழுனை நதி , பிருந்தாவனம் , வ்ரஜ பூமி , கிருஷ்ணன், ராதா , மதுரா , கோவில்