QUIZ ஹரித்வார் பத்து QUIZ  (Post No.12, 933)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,933

Date uploaded in London – –   19 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

QUIZ Serial No.96

1.ஏழு மோக்ஷ புரிக்களில் ஒன்று ஹரித்வார்ஆனால் வேறு பெயரில் அதை அழைக்கிறார்கள் . அது  என்ன பெயர் ?

xxxx

2.ஹரித்வார் எந்த நதியின் கரையில் இருக்கிறது; அதன் சிறப்பு என்ன ?

xxxx

3.ஏன் இதை ஹரித்வார் என்று அழைக்கிறார்கள் ?

xxxx

4.பிரயாகையில் நடக்கும் உலகிலேயே மிகப்பெரிய விழா இங்கும் நடக்கிறது . அதன் பெயர் என்ன ?

xxxx

5.நகரத்தின் அருகில் கங்கையின் குறுக்கே கட்டப்பட்ட அணையால் கங்கை நதியில் நடந்துவந்த கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது ; அந்த  அணையின் பெயர் என்ன ?

xxxx

6.ஒவ்வொரு  நாள் மாலையிலும் இங்கு நடக்கும் முக்கிய வழிபாட்டை இப்போது வேறு சில தலங்களிலும் பின்பற்றுகிறார்கள் ; அது என்ன வைபவம்?

xxxx

7.ஹரித்வாரில் உள்ள முக்கிய கோவில் எது ?

xxxx

8.நகரத்தில் காண வேண்டிய இடங்களில் ஒன்று “ஹர் கி பவுரி”. Har ki Pauri அதன் சிறப்பு என்ன ?

xxxx

9. ஹரித்வாரில் இருக்கும் பாரத மாதா ஆலயத்தின் சிறப்பு என்ன ?.

 xxxx

10.சண்டி தேவி கோவிலுக்கு எப்படிப் போகலாம் ?

xxxx

விடைகள்

1.மாயா = ஹரித்வார்

அயோத்யா மதுரா மாயா காசீ காஞ்சீ அவந்திகா

புரீ த்வாரவதீ சைவ சப்தயதே மோக்ஷ தாயிகா

xxxx

2.இந்த நகரம் உத்தரகண்ட் மாநிலத்தில் , கங்கை நதியின் கரையில் இருக்கிறது. இமய மலையில் உற்பத்தியாகும் கங்கை நதி முதலில் சமவெளியில் பாயும் இடம் ஹரித்வார் .

Xxxx

3.ஹரி அல்லது விஷ்ணுவின் நுழை வாயில் என்று பொருள் ; இமய மலையிலுள்ள புனிதத் தலங்களுக்கு யாத்திரை போவோர் இந்த நகரம் வழியாகச் செல்வது சம்பிரதாயம் . தெய்வத் தலங்களுக்கான வாசல்the Gateway to God) என்று சொன்னாலும் பொருந்தும். ஹர என்றால் சிவன் ; ஹரத்வார் என்று பொருள் கொள்வோரும் உண்டு .

Xxxx

4.மகாமகம் போன்ற கும்பமேளா ; இது 12ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரயாகையில் நடக்கும் ; இடையே ஒவ்வொரு நான்கு ஆண்டு இடைவெளியிலும் ஹரித்வார், உஜ்ஜைனி , நாசிக் ஆகிய இடங்களில் சுழல் முறையில் (Taking  turns) நடக்கும் . தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது, அதில் சிறிய பகுதியைக் கருடன் எடுத்துச் சென்றான் . அப்போது அமிர்தம் சிந்திய நான்கு இடங்களில் இதுவும் ஒன்று.

xxxx xxx

5. பீம கோடா அணை Bhimgoda

xxxx xxx

6. கங்கா ஆரத்தி ; கோவில் மணி ஒலிக்க , பல்லாயிரம் பகதர்கள் புடைசூழ , கங்காதேவிக்கு தீபாராதனை காட்டப்படும் . இதை பல நதிகளுக்கும் இப்போது செய்யத் துவங்கியுள்ளனர் .

xxxx

7. வேண்டியதை அருளும் மானசா தேவி கோவில் , நகரின் முக்கியக் கோவில் ஆகும் . சக்தி பீடமான மன்சா தேவி ஆலயம் சிவாலிக் குன்றுகளின் பில்வ மலையில் அமைந்துள்ளது. அன்னை பார்வதியின் ஒரு அவதாரம்தான் மானசா தேவி. மனஸ் என்றால் மனது, பக்தர்களின் மன கவலைகளை எல்லாம் நீக்கி அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பதாலும், காஷ்யப ரிஷியின் மனதில் இருந்து தோன்றிய மானச புத்ரி என்பதாலும் அன்னைக்கு இந்த திருநாமம். கர்ப்ப கிரகத்தில் இரண்டு தெய்வ மூர்த்தங்கள் உள்ளன ஒரு அம்மனுக்கு ஐந்து முகங்களும் பத்து கரங்களும் உள்ளன. இன்னோரு மூர்த்தத்திற்கு பதினெட்டு கரங்கள் உள்ளன.

xxxx

8. இதன் பொருள்  “இறைவனின்/ சிவ பெருமானின்  அடிச்சுவடுகள்”  ; அங்கு தான் கங்கா ஆரத்தி நடக்கும் ; அங்கிருந்துதான் பல்லாயிரம் பக்தர்கள் ஆண்டுதோறும்  கன்வார் Kanwar Mela (July or August) devoted to Lord Shiva) யாத்திரையைத் துவங்குகிறார்கள்; காவடிகளில் தொங்கும் குடங்களில்/ பானைகளில் கங்கை நீரை எடுத்துக் கொண்டு சிவபெருமான் தலங்களுக்குச் சென்று அபிஷேகம் செய்துவிட்டு புனித நீரை பிரசாதமாக எடுத்து வருவார்கள் .

xxxx

9. இதை சுவாமி சத்ய மித்ரானந்தா கட்டினார். 1983  ஆம் ஆண்டில் பிரதம மந்திரி இந்திரா காந்தி திறந்து வைத்தார்  .

பாரத மாதா மந்திரில் / கோவிலில் எட்டு மாடிகள் இருக்கின்றன. எட்டாவது மாடியில் சிவ பெருமானும், ஏழாவது மாடியில் விஷ்ணுவின் அவதாரங்களும், ஆறாவது மாடியில் சக்தி தேவியும் தரிசனம் தருவார்கள்.  முதல் ஐந்து மாடிகளில் இந்திய தேசபக்தர்களும், பாரத அன்னையும், மீரா ,சாவித்ரி போன்ற புகழ் பெற்ற பெண்மணிகளும், இந்தியாவில் தோன் றிய மதங்களின் பெரியார்களும் சாது, சன்யாசிகளும் காட்சி தருகிறார்கள் . எட்டாவது மாடி வரை செல்ல லிப்ட் வசதி உண்டு. ஹரித்வார் ரயில் நிலையத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் இந்த பாரத அன்னை ஆலயம் அமைந்துள்ளது .

பாரத நாட்டில் இருந்த ஆன்மீக மற்றும் அரசியல் முன்னோடிககளைப் பற்றிய குறிப்புக்களும் சிலைகளும் வைக்கப்பட்டிருக்ன்றன. எட்டு மாடிகளையும் ஏறிவிட்டால் 180 அடி உயரத்திலிருந்து இம்மாய மலையயையும் கங்கை நதியையம் பல ஆலயங்களையும் கண்டுகளிக்கலாம்.

xxxxx

10.ஹரித்வாரில் தக்ஷ மகா தேவ் சிவன் கோவில், மாயாதேவி கோவில் என்று பல முக்கியக்க் கோவில்கள் இருந்தாலும் இந்தக் கோவிலுக்கு கம்பி வழி ரயில் மூலம் செல்லுவது ஒரு தனி அனுபவம் ஆகும். சுற்றியுள்ள மலைகளையும் கங்கை நதியையும் பார்த்த வண்ணம் செல்லலாம் . நடந்து போகும் வழியாக வும்   மலை  உச்சியிலுள்ள கோவிலுக்குச் சென்று அம்மனைத் தரிசிக்கலாம் .

–subham—

Tags- மானசா தேவி , கங்கா ஆரத்தி , பாரத மாதா ஆலயம், மனசா தேவி , கோவில், ஹரித்வார், கங்கை ,  ஹர் கி பவுரி, அயோத்யா மதுரா மாயா

Leave a comment

Leave a comment