Date uploaded in London – – 20 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
உஜ்ஜைனி பத்து
QUIZ SERIAL No.97

1.உஜ்ஜைனி நகரம் எந்த மாநிலத்தில் எந்த நதியின் கரையில் உள்ளது ?
xxxx
2.இந்த நகரில் இந்துக்கள் கண்டுபிடித்த அதிசயம் என்ன ?
xxxx
3.அயோத்யா, மதுரா , காசி முதலிய இந்துக் கோவில்களை மத வெறி கொண்ட முஸ்லீம் மன்னன் ஒளரங்க சீப் இடித்து மசூதிகளைக் கட்டினான்.உஜ்ஜைனி சிவன் கோவிலை அழித்த மஹா பாவி யார்?
xxxx
4.தற்போதுள்ள சிவன் கோவிலை யார் எழுப்பினார் ?
Xxxx
5.இந்துக்கள் எளிதில் மோக்ஷம் அடைய உதவும் ஸ்தலங்கள் ஏழு ; அவற்றில் உஜ்ஜைனியும் ஒன்று . இதைச் சொல்லும் ஸ்லோகத்தில் உஜ்ஜைனியின் பெயர் என்ன?
XXXX
6.தமிழ் இலக்கியத்தில் உஜ்ஜைனி நகரம் எங்கே குறிப்பிடப்படுகிறது?
xxxx
7.உஜ்ஜைனியுடன் நெருங்கிய தொடர்புடைய உலகப் புகழ்பெற்ற புலவர் யார் ?
XXXX
8.உஜ்ஜைனியுடன் நெருங்கிய தொடர்புடைய உலகப் புகழ்பெற்ற சக்ரவர்த்தி யார் ?
XXXX
9.உஜ்ஜைனி நகரில் உள்ள சிவபெருமானின் பெயர் என்ன ?
XXXX
10.உஜ்ஜைனி கோவிலில் வேறு என்ன சந்நிதிகளைத் தரிசிக்கலாம் ?
xxxx

Jantar Mandar in Ujjain ( Observatory)
விடைகள்
1.மத்தியப் பிரதேச மாநிலத்தில் , சிப்ரா ஆற்றங்கரையில் உஜ்ஜைனி உள்ளது.
xxxx
2. உஜ்ஜைனி இந்துக்களின் கிரீனிச் ஆகும். இந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை இதன் வழியாகத்தான் செல்கிறது இதை வைத்தே இந்திய பொது நேரம் கணக்கிடப்படுகிறது . புகழ்பெற வான சாஸ்திர மேதை வராஹமிஹிரர் வாழ்ந்த இடம். இன்றும் பழங்களை வான சாஸ்திர ஆராய்ச்சி நிலையங்களைக் காணலாம்.
Xxxx
3. மதவெறி பிடித்த முஸ்லீம் மன்னன் சுல்தான் ஷம்ஸ்-உத்-தின் இலுட்மிஷ்,1234-5ல் உஜ்ஜைனைத் தாக்கி, ஜோதிர்லிங்கத்தை கோவி லுக்கு அருகிலுள்ள ஒரு குளத்தில் வீசிவிட்டான் .
xxxx
4. மராட்டிய படைத் தளபதி ரனோஜி ஷிண்டே 1734 இல் புதிய கட்டிடத்தைக் கட்டி னார் . மகாத்ஜி ஷிண்டே (1730–12 பிப்ரவரி 1794) மற்றும் தௌலத் ராவ் ஷிண்டேயின் மனைவி பைசா பாய் திருப்பணி செய்தனர் .
Xxxx
5. ‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரீ த்வாராவதீசைவ சப்தைதா: மோக்ஷதாயிகா’
அவந்திகா =உஜ்ஜைனி
முக்திதரும் ஏழு தலங்கள்:- அயோத்தி, மதுரா, மாயா(ஹரித்வார்), காசி(வாரணாசி), காஞ்சி, அவந்திகா(உஜ்ஜைனி),துவாரகா.
XXXX
6.சிலப்பதிகாரத்தில் இந்திரா விழவூரெடுத்த காதையில் அவந்தி வேந்தன் தோரண வாயிலும் என்பதில் அவந்தியென்பதை உரைகாரர்கள் உஞ்சை / உஜ்ஜைனி என்று விளக்கியுள்ளனர் . தேவாரத்தில் வைப்புத் தலமாக வைத்து அப்பர் பாடியுள்ளார் ; இதனை உஞ்சேனை என்று திருநாவுக்கரசர் தேவாரத்திலும் உஞ்சை என்று பெருங்கதை நூலிலும் காணலாம் . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் போற்றிய சிவன் கோவில் இது.
xxxx
7.காளிதாஸ் ;
மேகத்தைத் தூதுவிடுவதாக அமைக்கப்பெற்ற மேகதூதம் என்ற காப்பியத்தில், மகாகவி காளிதாசன், மேகத்தை நோக்கி, “ விந்திய மலைக்கு வடக்கே செல்லும் “மேகமே, நீ செல்லும் வழியிலிருந்து சற்று விலகியிருந்தாலும், அவந்திகா நகரையும், அங்கு எழுந்தருளியுள்ள ஈசனையும் காணத் தவறாதே. ஒருவேளை நீ காணாவிட்டால் கண் பெற்ற பயனை அடைய மாட்டாய்” என்று சொல்வதாக அமைத்துள்ளது.
XXXX
8.விக்ரமாதித்தன் . அதற்கு முன்னர் அசோகன் ; அவரது தந்தை மவுரிய சந்திர குப்தன் ஆண்ட போது, அசோகன் உஜ்ஜைனி நகர கவர்னராக இருந்தார் ..
XXXX
9.மகாகாலேஸ்வரர் .
XXXX
10. கோவில் மூலத்தானம் மூன்று அடுக்குகளைக் கொண்டது. தரைமட்டத்துக்கு கீழேயும் ஒரு கருவறை அமைந்துள்ளது. முதன்மைக் கருவறையானது பெரிதாக வட்டவடிவில் உள்ளது. அதில் மாகாளர் பெரிய லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். மகாகாலேஸ்வரர் கருவறைக்கு மேலுள்ள அடுத்த கருவறையில் ஓங்காரேஸ்வரர் சிலையைத் தரிசிக்கலாம் அதற்கடுத்த மூன்றாவது தளத்தில் நாகசந்திரேஸ்வரர் சிலை உள்ளது. கருவறைக்கு மேற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய திசைகளில் பரிவார தெய்வங்களாக பிள்ளையார், பார்வதி, கார்த்திகேயன் பைரவர் ஆகிய கடவுளர் உள்ளனர். தென்புறம் நந்தி சிலை உண்டு.
பன்னிரெண்டு ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் இங்கு மட்டும் சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவத்தில் உள்ளார்.
ஐந்து தளங்களுக்கும், ஐந்து சபா மண்டபங்களும், கோபுரத்தில் பல கலசங்களைக் கொண்ட இவ்வாலயத்தின் உயரம் 88 அடிகளாகும்.
ஆலயத்தினுள்ளே காணப்படும் புஷ்கரணிக்கு கோடி தீர்த்தம் என்று பெயர். நான்கு மூலைகளிலும் பெருங்கிணறுகள் கொண்ட இக்குளத்தின் நீரின் நிறம் காலத்துக்கு ஏற்ப மாறி மாறி வருகிறதாம்.
XXXX
Bonus questions
11.உஜ்ஜைனி, நாசிக், ஹரித்துவார் பிரயாகையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் விழா எது ?
xxxx
11.பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா என்னும் விழா நடைபெறுகின்றது.
xxxx
12.‘உஜ்ஜைன் அடையாளம்‘ (Ujjain symbol) என்பது என்ன ?
xxxxx
12. இந்த இடத்தில் அகழ்வாராய்வுகளின்போது கண்டெடுக்கப்பட்ட நாணயங்களில் ஒரு குறிப்பிட்ட குறி இடப்பட்டுக் காணப்பட்டதால், அதற்கு ‘உஜ்ஜைன் அடையாளம்‘ என்று பெயரிட்டனர். ‘உஜ்ஜைன் அடையாளம்‘ எனப் பெயரிட்டவர் ஆய்வாளரான A. Cunningham ஆகும்.
XXXX
13. நகரில் பார்க்க வேண்டிய ஏனைய கோவில்கள் எவை?
XXXX
13.உஜ்ஜைனியில் உள்ள முக்கியக் கோயில்கள்:
விக்கிரமாதித்தனுக்கு அருளிய காளி நகருக்கு உள்ளும் , காளிதாசனுக்கு அருள் செய்த காளி ஊருக்கு 2 கி. மீ. வெளியிலும் கோவில் ( ஹர்சித்தி மாதா கோவில் ) கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.. இவளே விக்கிரமாதித்தனுடன் நேரிடையாகப் பேசியதாகவும் காளிதாசனை மகா கவியாக ஆக்கியவள் என்றும் உலகம் போற்றுகிறது. விக்கிரமாதித்தனுக்கு அருளிய காளியை ஹரசித்தி மாதா என்றும் அழைக்கிறார்கள்.
காசியைப்போலவே இங்கும் பைரவருக்கென்று தனிக் கோயில் உள்ளது. அவருக்கு எதிரில் நாய் வாகனம் காணப்படுகிறது.
:மகா கணபதி கோவில் ;
ஸ்ரீ கோபால் மந்திர்: மற்றும் ஓங்காரேசுவரர், அகலேசுவரர், ரிண முக்தேசுவரர், மங்களேசுவரர், ஆகியோரது சன்னிதிகளையும், கிருஷ்ணனின் குருவான சாந்தீப ரிஷியின் ஆசிரமம் இருந்த இடத்தையும், பர்த்ருஹரியின் குகையையும் தரிசிக்கலாம்.
XXXX

14.உஜ்ஜைனியிலும் வானியல் ஆராய்ச்சிக்கூடம் உள்ளதா ?
XXXX
ஜந்தர் மந்தர் என்னும் பழைய ஆராய்ச்சிக் கட்டிடம் உள்ளது. ஜந்தர் மந்தர் (Jantar Mantar) என்பது, புவியின் அச்சுக்கு இணையாகச் செம்பக்கம் கொண்ட பிரம்மாண்ட செங்கோண முக்கோணவடிவக் கோல் அமைக்கப்பட்டதொரு பகலிரவு சமன்கொண்ட சூரிய மணிகாட்டி ஆகும். சூரியன் மற்றும் கிரகஙகளின் நிலையைக் கணக்கிட இது உதவும் .
18 ம் நூற்றாண்டில் ஜெய்ப்பூரில் ஜெய் சிங் அரசரால் ஐந்து ஜந்தர் மந்தர்கள் கட்டப்பட்டன. அவை புதுதில்லி, ஜெய்ப்பூர், உஜ்ஜைன், மதுரா மற்றும் வாரணாசியில் அமைந்துள்ளன.
XXXX subham XXXX
Tags- உஜ்ஜைனி பத்து ,QUIZ SERIAL No.97, ஜந்தர் மந்தர், மகாகாலேஸ்வரர், அவந்திகா, கோவில்