
Date uploaded in London – – 21 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

இலவு காத்த கிளிபோல என்பது தமிழ் பழமொழி . பழமொழி என்று சொன்னவுடனேயே அது காலத்தால் பழமையானது என்பது வெள்ளிடை மலையென விளங்கும் . இதை செய்பா (Ceiba) என்ற பொதுப்பெயரால் அழைப்பார்கள் ஆங்கிலத்தில் SILK COTTON TREE சில்க் காட்டன் ட்ரீ என்பர். கபோக் KAPOK என்ற பெயரும் உண்டு .
முதலில் புதிர் என்ன என்பதைக் காண்போம் . இதற்கு சம்ஸ்க்ருதத்தில் ஷால்மலி என்று பெயர் . ஷால்மலித்
த்வீபம் என்பது சப்த த்வீபங்களில் ஒன்று என்று வராஹ புராணம் இயம்புகிறது. அதுமட்டுமல்ல ; அது ஸ்வயம்புவ மனுவின் புதல்வனான பத்து புதல்வர்களில் ஒருவரான த்யுதிமான் ஆண்ட ஏழு தீவுகளில் ஒன்று என்றும் சொல்கிறது . இது பற்றிய விளக்கங்கள் வரும் இடங்களில் அந்த ஷால்மலி மரத்தை வணங்குவோர் இருக்கும் இடத்தை அப்படி அழைத்தனர் என்றும் சொல்கிறார்கள் . ஆனால் என்சைக்ளோபீடியா என்னும் கலைக் களஞ்சியங்களில் இது மத்திய அமெரிக்க, தென் அமெரிக்க மரம் என்றும் பிற்காலத்தில் ஆப்ரிக்கா வழியாக இந்தியா வந்தது என்றும் எழுதியுள்ளனர் . அது உண்மை இல்லை என்பதை தமிழ்ப் பழமொழியும் புராண விளக்கங்களும் காட்டுகினறன் ; மகாபாரதத்திலும் இந்த மரம் பற்றிய குறிப்பு இருப்பதாக ஒருவர் எழுதியுள்ளார்
Śālmalidvīpa (शाल्मलिद्वीप) is one of the seven islands (dvīpa), ruled over by Dyutimān, one of the ten sons of Priyavrata, according to the Varāhapurāṇa chapter 74. Priyavrata was a son of Svāyambhuva Manu, who was created by Brahmā, who was in turn created by Nārāyaṇa, the unknowable all-pervasive primordial being.
மாயா அல்லது மாயன் இன மக்கள் இந்தியாவிலிருந்து கலியுகத் துவக்கத்தில் தென் அமெரிக்காவுக்குச் சென்றனர் என்று நான்
எழுதிய ஆராய்ச்சிக்கு கட்டுரையில் கூறினேன். இந்த இலவம் பஞ்சு மரம் இபோது இன்னொரு சான்றாக வந்துள்ளது .
மாயன் மொழியில் இதை யாக்ஸ் சி Yax Che (“Green Tree” or “First Tree”) என்பார்கள் ; பச்சை மரம் அல்லது முதல் மரம் என்று பொருள்.
இந்த மரப் பிரிவில் மூன்று வகை மரங்கள் இருக்கின்றன. வெப்ப மனதளக் காடுகளில் 230 அடி உயரம் வரை வளரும்; அதன் பட்டையில் முட்கள் இருக்கும். இதுதான் மாயா மக்கள் வணங்கும் மரம். மேற்கு ஆப்பிரிக்கப் புல்வெளிகளில் இதைவிடச் சிறிய மரம் வளர்கிறது. அதன் பட்டையில் முட்கள் இராது . மூன்றாவது வகை மரத்தை வர்த்தக ரீதியிலேயே பயிரிடுகிறார்கள் . இதன் காய்கள்தான் பஞ்சு உற்பத்திக்குப் பயன்படுகிறது ; தலையணை , மெத்தை ஆகியவற்றில் இலவம் பஞ்சினை அடைகிறார்கள் . கம்போடியாவிலுள்ள அங்கோர்வட்டில் பெரிய கோவில்களை (Cambodia’s Angkor Wat _வளைத்துப் பிடிக்கும் மரங்கள்தான் இவை . மரத்தின் அடிப்பகுதி பரந்தும் விரிந்தும் காணப்படும்

The Ceiba tree (Ceiba pentandra and also known as the kapok or silk-cotton tree) is a tropical tree native to North and South America and Africa. In Central America, the ceiba had great symbolic importance to the ancient Maya, and its name in the Mayan language is Yax Che (“Green Tree” or “First Tree”).
இது பூக்கும் நேரத்தில் மரத்தை நோக்கி வௌவால்களும் பட்டுப்பூச்சிகளும் தேனீக்களும் படையெடுக்கும் . அதிலுள்ள தேனினை உறிஞ்சிக் குடிக்க அவைகள் வருகின்றன. ஒவ்வொரு மரமும் தினமும் உற்பத்தி செய்யும் தேனின் அளவு 2 லிட்டர் ஆகும்.
இந்துக்கள் அரச மரத்தை எப்படி பிரம்மா, விஷ்ணு சிவன் என்று வழிபடுகிறார்களோ அதேபோல மாயா இனத்தினரும் இந்த மரத்துக்கு மூன்று தொழில்களைக் கற்பிக்கிறார்கள். வேர்ப்பகுதி பாதாள லோகத்தையும் நடுப்பகுதி பூலோகத்தையும் மேல்பகுதி சொர்க்கத்தையும் குறிக்கும் மரம் இது என்பது அவர்களின் நம்பிக்கை.
மாயா இனமக்கள் இந்துக்களைப் போல மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டவர்கள்; கபோக மரத்தில் தொங்கும் கொடிகள் மூலம் இறந்தோரின் ஆவிகள் விண்ணுலகத்துக்குச் செல்வதாகவும் நம்பினர் .
xxxx

வணிக , மருத்துவ உபயோகம்
ஆப்பிரிக்காவில் இதன் மரத்தை பிளைவுட் டாகப் பயன்படுத்தி பெட்டிகள் தயாரிக்கிறார்கள் இளம் மொட்டுக்களை வெண்டைக்காய் போல உணவாகப் பயன்படுத்துகிறார்கள் .
குவாத்திமாலா போர்ட்டோரிக்கோ, ஈக்வடோரியல் கினி ஆகிய நாடுகளில் இதைதேசீய மரமாக அறிவித்துப் பாதுகாக்கிறார்கள் ; யாரும் அவைகளை வெட்ட முடியாது. வியட்நாமின் சைகோன் நகரத்தின் பெயர் இந்த மரத்தின் வியட்நாமியச் சொல்லில் இருந்து பிறந்தது.
இந்த மரத்தின் பட்டையைக்கொண்டு தயாரிக்கும் கஷாயம் (Ceiba pentandra bark ) உடம்பில் நீர் கட்டாமல் தடுக்கவும், காம இச்சைகளைப் பெருக்கவும் தலைவலி, நீரிழிவு நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது .
xxxx

எண்ணெய்
இதன் காய்களை நசுக்கி எடுக்கும் எண்ணெய் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பருத்திக்கொட்டை எண்ணெய் போன்றது ;ஆனால் காற்றுப்பட்டால் விரைவில் கெட்டு விடும் . இதில் அயோடின் சத்து அதிகம் ; எளிதில் உலராது. வருங்காலத்தில் எரிபொருளாகவும் பெயிண்ட் செய்யவும் பயன் படலாம் .
–subham—
tags- மாயா இன மக்கள், இலவம் பஞ்சு மரம், புதிர், கபோக், செய்பா