
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,939
Date uploaded in London – – 21 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
2024 ஜனவரி 22. தெய்வீகத் திருவிழாவை ஒட்டி சிறப்புக் கட்டுரை!
ராம நாம மஹிமை – 2
ச.நாகராஜன்
ராமதாபினீ உபநிடதம் விளக்கும் ராமநாம மஹிமை!
நூற்றெட்டு உபநிடதங்களில் ஒன்றான ராமதாபினீ உபநிடதம் ராம நாம மஹிமையைப் பற்றி நன்கு விளக்குகிறது.
இது அதர்வண வேதத்தில் உள்ள 31 உபநிடதங்களில் ஒன்று.
இதில் உள்ள சில பகுதிகளை இங்கு பார்க்கலாம்.
ஶ்ரீ ராமபூர்வதாபின்யுபநிஷத் என்ற முதல் பகுதியில் வருவது:
யதைவ வடபீஜஸ்த்த: ப்ராக்ருதச்ச மஹாத்ரும:!
ததைவ ராமபீஜஸ்த்தம் ஜகதேதச்சராசரம் ||
பொருள் : எப்படி ஒரு ஆலின் விதையில் ப்ராக்ருதமான ஆலமரம் உறைகிறதோ, அப்படித்தான் ராம என்னும் பீஜத்தில் இந்த சராசர ப்ரபஞ்சம் உறைகிறது.
ஶ்ரீ ராமோத்தரதாபின்யுபநிஷத் என்ற இரண்டாம் பகுதியில் வருவது:
ஓம் யோ வை ஶ்ரீ ராமசந்த்ர: ஸ பகவான் அத்வைத ப்ரமானந்தாத்மா பூர்ப்புவஸ்தஸ்மை வை நமோ நம: |
பொருள் : எவர் ஶ்ரீ ராமச்சந்திரரோ அவர் தான் பகவான். இரண்டற்ற பரமானந்த ஆத்மா. பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம் எல்லாம். அவரை மீண்டும் நமஸ்கரிக்கிறேன்.

நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள்
பன்னிரெண்டு ஆழ்வார்கள் அருளிய பாடல்களில் ராமரைத் துதித்துப் போற்றும் பாடல்கள் ஏராளம் உள்ளன.
நாலாயிர திவ்ய ப்ரபந்தத்திலிருந்து சில பாடல்கள்:
ஶ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த பெருமாள் திருமொழியில் வரும் பாடல்:
மன்னுபுகழ்க் கௌசலைதன் மணி வயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்து வித்தாய்
செம்பொன்சேர் கன்னி நன் மாமதிள் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ.
பாடல் எண் 719, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்
பாராளும் படர்செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே!
சீராளும் வரைமார்பா! திருக்கண்ணபுரத்து அரசே!
தாராளும் நீண் முடி என் தாசரதீ! தாலேலோ!
பாடல் எண் 723, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்
சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே!
அற்றவர்க்கு அருமருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே!
சிற்றவை தன் சொல்கொண்ட சீராமா! தாலேலோ!
பாடல் எண் 724, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்
ஶ்ரீ திருமழிசைப்பிரான் அருளிச் செய்த திருச்சந்த விருத்தம்
ஊனில் மேய ஆவி நீ உறக்கமொடு உணர்ச்சி நீ
ஆனில்மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ
வானினோடு மண்ணும் நீ வளங் கடற் பயனும் நீ
யானும் நீ அதன்றி எம்பிரானும் நீ இராமனே!
பாடல் எண் 845, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்
ஶ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த பெரிய திருமொழி
பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவும் நன் பகலும் துதிசெய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை
குரவமே கமழும் குளிர்பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால்
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத திருவல்லிக்கேணி கண்டேனே
பாடல் எண் 1077, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

Picture shows PM Narendra Modi’s Ramayana Shrines Tour.
நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி
நீள்கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான்
தாள்கள் தலையில் வணங்கி நாள்கடலைக் கழிமினே
பாடல் எண் 2736, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்
எந்தாய்! தண்திரு வேங்கடத்துள் நின்றாய்! இலங்கை செற்றாய்!
மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒருவாளி கோத்த வில்லா!
கொந்தார் தண்ணந் துழாயினாய்! அமுதே! உன்னை என்னுள்ளே குழைத்த எம் மைந்தாற்
வானேறே! இனியெங்குப் போகின்றதே?
பாடல் எண் 2848, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி ஒன்றின்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசம் முற்றவும்
நற்பாலுக்கு உத்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே!
பாடல் எண் 3381, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்
***
To be continued……………………………….