
Post No. 12,943
Date uploaded in London – – 22 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
2024 ஜனவரி 22. தெய்வீகத் திருவிழாவை ஒட்டி சிறப்புக் கட்டுரைத் தொடரில் மூன்றாவது கட்டுரை!
ச.நாகராஜன்
ராம நாம மஹிமையைப் பற்றிக் கூறும் போது ஶ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் நினைவு முதலில் வருவது இயல்பே. பல நூறு கிருதிகளை இயற்றிய அவரைப் போல ராம நாமத்தின் மஹிமையை கீர்த்தனைகளால் விளக்கியவர் இருக்க முடியாது!
தஞ்சை மன்னரின் சேவகத்தை விரும்பாமல் அவர் பாடிய
கிருதி இது :
பல்லவி
நிதி சால சுகமா
ராமுனி சன்னிதி சேவ சுகமா
நிஜமுக பல்கு மனசா
நிதி சால சுகமா.ஆ..
அனுபல்லவி
ததி நவநீதக்ஷீரமுலு ருசோ – தாஸரதி
த்யானபஜந ஸுதா ரஸமு ருசோ
சரணம்
தம ஸம மநு கங்கா ஸ்நாநமு ஸுகமா கர்த்தம
துர்விஷய கூப ஸ்நாநமு ஸுகமா
மமத பந்தன யுத நரஸ்துதி சுகமா??
ஸுமதி த்யாகராஜநுதநி கீர்த்தந ஸுகமா…
பொருள் : ஓ, மனமே உண்மையைச் சொல்! செல்வம் தான் சுகமா அல்லது ராம சந்நிதி சேவை சுகமா?
தயிர், வெண்ணெய், பால் ருசியா?
தாஸரதியின் தியானம், பஜனை ருசியா?
பாவத்தைப் போக்கும் கங்கையில் குளிப்பது புனிதமா?
இந்திரிய சுகம் தேடும் துர்க்கந்தமான இவ்வாழ்வுக்கு நிகரான கிணற்று நீரில் குளிப்பது சுகமா?
அகங்காரமுள்ள மனிதர்களைப் புகழ்வது சுகமா?
அல்லது நல்ல புத்தியுள்ள தியாகராஜனால் புகழப்படும் ராம கீர்த்தனம் சுகமா?
தனக்கு உற்றார் உறவினர் யார் என்று அவர் கூறுவது இது:
பல்லவி
ஸீதம்ம மாயம்ம ஸ்ரீ ராமுடு3 மா தண்ட்3ரி
அனுபல்லவி
வாதாத்மஜ ஸௌமித்ரி வைனதேய ரிபு மர்த3ன
தா4த ப4ரதாது3லு ஸோத3ருலு மாகு ஓ மனஸா (ஸீ)
சரணம்
பரமேஸ1 வஸிஷ்ட2 பராஸ1ர நாரத3 ஸௌ1னக ஸு1க
ஸுர பதி கௌ3தம லம்போ3த3ர கு3ஹ 1ஸனகாது3லு
த4ர நிஜ பா4க3வதாக்3ரேஸருலெவரோ 2வாரெல்லரு
வர த்யாக3ராஜுனிகி பரம பா3ந்த4வுலு மனஸா (ஸீ)
பொருள்:
ஓ! மனமே!
சீதம்மா நமது தாயார். ஶ்ரீ ராமன் நமது தந்தை.
வாயுமைந்தன், சௌமித்திரி, வினதை மைந்தன், சத்துருக்கினன், தாதை, பரதன் ஆகியோர் நமக்கு சகோதரர்கள்.
பரமேசன், வசிஷ்டர், பராசரர், நாரதர், சௌனகர், சுகர், தேவர் தலைவன், கௌதமர், லம்போதரன், குகன், சனகாதியர், இப்புவியில் பாகவதர்களில் சிறந்தவர் எவரோ அவர் யாவரும் அருளுடைய தியாகராஜனின் நெருங்கிய உறவினர் ஆவர்.
*
ஶ்ரீ ராம நாமத்தின் மஹிமையைப் பற்றி அவர் கூறுகிறார்:

மனஸா!
ஶ்ரீ ராம பஜன, பர லோக ஸாதனமே
ஸ்மர, லோப, மோஹ, ஆதி பாபுலனு ஸ்மரியஞ்சதே;
ஜனன ஆதி ரோக பயாதுலசே,
ஜகமந்து கல்கு துராஸலசே,
தனய ஆதி பாந்தவுல ப்ரமசே, தகலனு ஈது
கிருதியின் பொருள்:
ஓ, மனமே!
இராம பஜனை மறுமைக்குச் சாதனம்
காமம், பேராசை, மயக்கம் ஆகிய பாவிகளை நினையாதே..
பிறவி முதலாக நோய்கள் என்னும் பெரிய பயங்களிலும், உலகினில் ஏற்படும் தீய ஆசைகளிலும், மனைவி மக்கள் முதலாக சுற்றமெனும் திகைப்பினிலும் (ராம நாமம்) சிக்க விடாது.
*
அடுத்து 108 உபநிடதங்களில் ஒன்றும் அதர்வண வேதத்தில் வரும் 31 உபநிடதங்களில் ஒன்றாகவும் அமையும் ஸீதோபநிஷத் ஸீதையைப் பற்றிக் கூறுவதைப் பார்க்கலாம்.
தேவர்கள் பிரம்மாவிடம், ‘ஸீதா என்பது யார்? அவளுடைய ரூபம் என்ன?’ என்று கேட்டார்கள்.
அப்போது பிரம்மா கூறினார்:
மூலப்ரக்ருதி ரூபத்வாத் ஸா ஸீதா ப்ரக்ருதி:
ஸ்ம்ருதா!
மஹாமாயா அவ்யக்த ரூபிணீ வ்யக்தா பவதி!!
பொருள் : மூலப்ரக்ருதி வடிவினள் ஆதலால் அந்த ஸீதா ப்ரக்ருதி எனக் கூறப்படுகிறாள். அவ்யக்த ரூபிணியான மஹா மாயை வெளிப்படையாகத் தோன்றுகிறாள்.
ஶ்ரீ ராமஸாந்நித்ய வசாஜ்ஜகதானந்தகாரிணீ!|
உத்பத்திஸ்திதி ஸம்ஹாரகாரிணீ
ஸர்வதேஹினாம் ||
ஸீதா பகவதீஜ்ஞேயா
மூலப்ரக்ருதிஸம்ஜ்ஞிதா!
ஸர்வாதாரா கார்ய காரணமயீ மஹாலக்ஷ்மீர்-தேவேசஸ்ய
பின்னாபின்ன ரூபா சேதனாசேதனாத்மிகா
பூதேந்த்ரிய மன: ப்ராண ரூபேதி ச விஜ்ஞாயதே!
பொருள் : ஶ்ரீ ராம ஸாந்நித்ய வசத்தால் அவள் உலகிற்கு ஆனந்தமளிப்பவள். உடல் படைத்தவர்களுக்கெல்லாம் உற்பத்தி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகியவற்றைச் செய்பவள். மூலப்ரக்ருதி எனப்பட்டவளே பகவதீ ஸீதா என அறிய வேண்டும். அனைத்திற்கும் ஆதாரமான காரிய காரணமயமான மஹாலக்ஷ்மீ. தேவநாயகரினின்று பிரிந்தும் பிரியாமலும் இருக்கும் ரூபமுடையவள். சேதன, அசேதன வடிவானவள். பஞ்ச பூதங்கள், இந்திரியங்கள், மனம், பிராணன் எல்லாம் அவளுடைய ரூபமே என்று உணர வேண்டும்.
இன்னும் விரிவாக அடுத்தடுத்து சீதையின் முழு மஹிமையையும் விளக்கமாகக் கூறுகிறது ஸீதோபநிஷத்!
தியாகராஜ கீர்த்தனைகள் பல நூறு. அவற்றைப் படித்தால் ராம நாம மஹிமை புரியும்; ஸீதோபநிஷத்தைப் படித்தால் ஸீதையின் அவதார மஹிமை புரியும்!
***