
Kanchi Kamakshi Temple
Date uploaded in London – – 24 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
31. சீனாவிலும் ஜப்பானிலும் காஞ்சிபுரம் நகரம் புகழ் பரவியதற்கு
உதவியவர் யார் ?
xxxx
32. காஞ்சியில் தொல்பொருட் துறை பராமரிப்பிலுள்ள புகழ்பெற்ற சிவன் கோவில் எது ?
xxxx
33.காஞ்சியின் மிகப்பமையான இக்கோவிலைக் கட்டியவர் யார் ?
xxxx
34. காஞ்சிபுரத்திலுள்ள புகழ்பெற்ற சமண ஆலயம் எது?
xxxx
35.காஞ்சி காமாக்ஷி கோவிலின் சிறப்பு என்ன ?
xxxx
36.காஞ்சி மடம் எங்கே இருக்கிறது ?
xxxx
37. சமணர் கோவிலில் உள்ள குரா மரத்தின் சிறப்பு என்ன?
xxxx
38.காஞ்சி நகருக்கும் சங்கீத மேதைகளும் தொடர்பு உண்டா ?
xxxx
39.காஞ்சி மடத்தில் யார் சமாதிகள் /அதிஷ்டானங்கள் உள்ளன ?
xxxx
40.ஓரிருக்கையில் என்ன இருக்கிறது?
xxxx
.jpg)
Tirupparuthikundram Jain Temple
விடைகள்
31.போதி தர்மர் , அந்த (China and Japan) நாடுகளுக்குச் சென்று புத்த மதத்தை பரப்பினார் .
.xxxx
32.கைலாசநாதர் கோவில் .
xxxx
33.காஞ்சி நகரிலுள்ள மிகப்பழைய கோவில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் ஆகும். இதை பல்லவ மன்னர் ராஜசிம்மன் (பொ.ஆ.700 CE) கட்டினார். பின்னர் அவருடைய மனைவி, ராணி ரங்க பதாகை கட்டினார் . இதில் மொத்தம் 58 சந்நிதிகள் உள்ளன. கருவறையில் பதினாறு பட்டைகளுடன் கூடிய சிவ லிங்கம் வழிபாட்டில் உள்ளது. கருவறையைச் சுற்றி அமைந்துள்ள குறுகிய திருச்சுற்று புனர்ஜனனி என்றழைக்கப்படுகிறது.
சென்னையிலிருந்து 45 மைல் தொலைவில் காஞ்சிபுரம் இருக்கிறது.

xxxx
34.சமணக் காஞ்சி அல்லது திருப்பருத்திக்குன்றம், காஞ்சிபுரத்திற்கு தெற்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் வேகவதி ஆற்றின் கரையில் இருக்கிறது ; அங்கு இரண்டு கோவில்கள் உள்ளன. சீன பௌத்த யாத்ரீகர் யுவான் சுவாங் , கி.பி.640-ல் வந்த சமயம், காஞ்சிபுரத்தில், 83 சமணக் கோவில்களைக் கண்டதாக தன் பயணக்குறிப்பில் எழுதியுள்ளார்.
1.சந்திரபிரபா கோயில்
சமண சமயத்தின் எட்டாவது தீர்த்தங்கரரான சந்திரப்பிரபருக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது.;
2.வர்த்தமானர் கோவில்
24வது தீர்த்தங்கரான மகாவீரர் எனும் வர்த்தமானர் மூலவராக உயர்ந்த பீடத்தின் மீது, தேவர்கள் கவரி வீச, முக்குடை கவிழ்ப்ப, ஆழ்ந்த தவக்கோலத்தில் காட்சி தருகிறார். இவரை திரிலோகநாதர் என்று அழைப்பர்.
xxxx
35.ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்ரம் அன்னையின் சந்நிதியில் உள்ளது . ஒரு புறம் பெருமாளும் மறுபுறம் அரூப லெட்சுமியும் உள்ளனர். ஆகையால் இது ஒரு வைணவ தலமும் ஆகும். தசரத சக்ரவர்த்தி காலத்திலிருந்து கோவில் உள்ளதாக பக்தர்கள் நம்புகிறார்கள் . காமாட்சி அம்பாள், இங்கே நான்கு கரங்களோடு பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருக்கிறாள். முன் இருகைகளில் கரும்பு வில்லினையும், மலர்க் கணைகளையும், மேல் இரு கைகளில் பாசம் மற்றும் அங்குசத்தை ஏந்தியும் இருக்கிறாள். இந்தக் கோவிலில் அன்னை இருப்பதால் இங்குள்ள பிற கோவில்களில் தனிப்பட்ட அம்மன் சந்நிதி கிடையாது!
xxxx
36.காமாக்ஷி அம்மன் கோவிலுக்கு அருகில் காஞ்சி மடம் இருக்கிறது ; ஹைதர் அலி காலத்தில் கும்பகோணத்துக்கு இடம்பெயர்ந்த மடம் மீண்டும் சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகர இந்திர சரஸ்வதி காலத்தில் (1894-1994) காஞ்சிக்குத் திரும்பியது; நூறு ஆண்டுகள் வாழ்ந்த அவரால் மடம் உலகப் புகழ்பெற்றது ; அவர் பேசிய உரைகள் தெய்வத்தின் குரல் என்ற நூலாக வந்தவுடன் மடத்தின் பெருமை மேலும் அதிகரித்தது. அவருக்குப் பின்னர் வந்த ஜெயேந்திர சரஸ்வதி காலத்தில் சில சம்பவங்களால் அவப்பெயர் ஏற்பட்டது. நீண்ட மடாதிபதிகள் பட்டியல், இதை ஆதி சங்கரர் நிறுவியதைக் காட்டுகிறது. சங்கரர் காலம் பற்றி காஞ்சிப் பெரியவர் நீண்ட உரை நிகழ்த்தியுள்ளார் . முஸ்லீம் படையெடுப்பால் தங்கத்தால் ஆன பங்காரு காமாட்சி தஞ்சைக்குச் சென்றதும் , இவர் மடம் இடம்பெயர்ந்து சென்றதன் நியாயத்தைக் காட்டுகிறது.
xxxx
37.காஞ்சிபுரத்தில் சமணர் கோவிலில் உள்ள Kura குரா மரத்தை (Webra corymbosa) ஜைனர்களும் புனித மரமாக கருதுகிறார்கள். இதை பாட்டில் பிரஷ் Bottle Brush Tree மரம் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். சிவனுக்கும் முருகனுக்கும் உகந்த இந்த மரத்தைப்பற்றி திருப்பருத்திக்குன்ற சமணர் கோவிலில் ஒரு கல்வெட்டு இருக்கிறது . வர்த்தமானீஸ்வரர் ஆலயத்தின் ஸ்தல விருட்சம் ஆகும். “தர்மத்தைக் குறிக்கும் என்றும் அழிவில்லாத திரிலோக்ய நாதாவின் வாசஸ்தலத்தின் வாயிலில் நிற்கும் இந்த மரம் பெரியதாக வளர்வதும் இல்லை, சிறியதாவதும் இல்லை. அது மன்னனின் செங்கோலைக் காத்து நிற்கின்றது” (South Indian Inscriptions Vol. VII, No. 399) என்று இந்த ஆலயத்தின் கல்வெட்டு கூறுகிறது . ஒரு கல்வெட்டில் மரம் பற்றிய பாடல் இருப்பது அரிது.
xxxx
38.கர்நாடக சங்கீதத்தின் பிதாமஹரான புரந்தரதாசர் , சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்து சுவாமி தீட்சிதர், சாமா சாஸ்திரிகள் அனைவரும் காஞ்சி நகர கோவில்களில் குடிகொண்ட கடவுளர்களைப் பாடியுள்ளனர் . ஏனையோர் சிவன் விஷ்ணுவைப் பாடியபோதும், சாமா சாஸ்திரிகள் மட்டும் காமாட்சியை மட்டும் போற்றிப் பாடியிருக்கிறார்கள்
xxxx
39.காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் (1894-1994) மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்கள் (சமாதிகள்) உள்ளன.
xxxx
40.ஓரிருக்கையில், காஞ்சி மகானின் மணிமண்டபம் இருக்கிறது இதை அமைப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் பிரதோஷம் மாமா. இந்த இடம் நகருக்கு மிக அருகில் இருக்கிறது . மணிமண்டபத்தில் 100 அடி உயர விமானம், பாதுகா மண்டபம், ருத்ராக்ஷ மண்டபம் ஆகியன உள்ளன . இந்த இடம் திருமழிசை ஆழ்வார், கனி கண்ணன் , பெருமாள் (Lord Vishnu) ஆகியோர் கதையால் ஏற்கனவே சிறப்பு பெற்ற இடம் ஆகும்.

Kailasanatha Temple in Kanchipuram

–subham —-
Tags- ஓரிருக்கை, அதிஷ்டானங்கள், காஞ்சி மடம், கைலாசநாதர் கோவில், போதி தர்மர்